என் மலர்
நீங்கள் தேடியது "Joseph's College of Education"
- களக்காடு கடம்போடு வாழ்வு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
- சிறப்பு விருந்தினராக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பங்கேற்று ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
களக்காடு:
களக்காடு கடம்போடு வாழ்வு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி யில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. ஜோசப் கல்வி நிறுவனங்களின் தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாணவி கிறிஸ்டி திருவிவிலியம் வாசித்தார். பெருமாள்குளம் சேகர குரு பெனர்ட் ஜெபம் செய்து விழாவை தொடங்கி வைத்தார். மாணவி இந்திரா வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவும், தமிழக காங்கிரஸ் பொருளாளருமான ரூபி மனோகரன் ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் புத்தாடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாணவிகளுக்கு இனிப்பு களும், பரிசுகளும் வழங்கப் பட்டன.
பாளையங்கோட்டை ரோஸ் மேரி கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெனதா ராணி, ஜோசப் கல்லூரி முதல்வர் டாக்டர் குமரேசன், பேராசிரியர்கள் கபிரியேல்ராஜ், ரமேஷ், முருகன், மாரியப்பன், மலர்விழி ஜெபக்கனி, பத்ரகாளி, ராதிகா, அனிதா ரெபெக்காள், ஜமீலாபானு, பணியாளர்கள் கலைச் செல்வி, சுகன்யா, பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஷர்லி, தேவபிரியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். முடிவில் மாணவி அனிஸ் தஸ்னீம் நன்றி கூறினார்.