search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Junaid Siddique"

    • சித்திக் 24-மாத காலத்தில் எந்தவிதமான குற்றங்களும் இல்லாமல் இருந்தார்.
    • நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் சித்திக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் 2-வது போட்டியில் யுஏஇ அணியும் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடந்த கடைசி போட்டியில் நியூசிலாந்து அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டியில் யுஏஇ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைட் சித்திக் நடத்தை விதிகளை மீறியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதமும் மற்றும் இரண்டு குறைபாடு புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

    நியூசிலாந்து இன்னிங்சின் 17-வது ஓவரில், மேல்முறையீடு நிராகரிக்கப்பட்ட பிறகு, நடுவரை நோக்கி தகாத வார்த்தைகளால் சித்திக் கருத்து வேறுபாடு காட்டினார். இதற்காக, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    கள நடுவர்கள் அக்பர் அலி மற்றும் ஷிஜு சாம் மற்றும் மூன்றாவது நடுவர் ஆசிப் இக்பால் ஆகியோர் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

    24-மாத காலத்தில் எந்தவிதமான குற்றங்களும் இல்லாமல் இருந்த சித்திக், தற்போது தனது சாதனையில் இரண்டு குறைபாடு புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

    மூன்றாவது டி20 போட்டியில் சித்திக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி 26 ரன்களை விட்டுகொடுத்திருந்தார்.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 152 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 73 ரன்னில் சுருண்டது.

    சிட்னி:

    8-வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

    16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

    இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 73 ரன்களில் சுருண்ட் பரிதாபமாக தோற்றது.

    இதில் ஐக்கிய அரபு அமீரக அணி வீரர் ஜுனைத் சித்திக் 17-வது ஓவரில் ஒரு இமாலய சிக்சர் அடித்தார். அது 109 மீட்டர் தூரம் சென்றது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×