என் மலர்
நீங்கள் தேடியது "Junction Bus Stand"
- சந்திப்பு பஸ்நிலையத்தின் ஒரு பகுதி முழுமையாக கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளது.
- கீழ்தளத்தில் நிறுத்துவதற்கான வாகன காப்பகமும் தயார் நிலையில் உள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட சந்திப்பு பஸ் நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டு ரூ.78.99 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
பஸ் நிலையத்தில் 144 கடைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஒரு பகுதி பஸ்நிலையம் முழுமையாக கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளது. அங்கு 17 பஸ்கள் நிறுத்து வதற்காக நடை மேடையும், கீழ்தளத்தில் 106 கார்கள், 1,629 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கான வாகன காப்பகமும் தயார் நிலையில் உள்ளது.
2 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க அடிமட்ட தூண்கள் கட்டப்பட்டு உள்ளது. மேல்பகுதியில் உள்ள கடைகளுக்கு செல்ல லிப்ட் வசதிகள், டிஜிட்டல் திரைகள், கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட வேண்டியதுள்ளது.
நகரின் முக்கிய பகுதியாக திகழும் சந்திப்பு பகுதியில் பஸ் நிலையம் இல்லாததால் வியாபாரிகள், மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் சந்திப்பு ரெயில் நிலையம் செல்லும் பயணிகளும் அவதி யடைந்து வருகிறார்கள்.
எனவே கட்டுமான பணி கள் முடிந்த பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடக்கோரி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முற்றுகை
இந்நிலையில் நெல்லை மாநகராட்சி 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் தூய்மை பணி யாளர்கள் உள்ளிட்ட ஆயிரம் பேர் இன்று நெல்லை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களுடன் மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பேசிய வியாபாரிகள், பல்வேறு தரப்பினரும் சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதி காரிகள் தரப்பில் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி பஸ் நிலையத்தை திறக்க மறுக்கின்றனர். எனவே உடனடியாக பஸ் நிலை யத்தை திறக்க வேண்டும் என்றனர்.
அப்போது மேயர் சரவணன், மாந கராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி ஆகியோர் சந்திப்பு பஸ் நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- விதிகளை மீறி மணல் அள்ளப்பட்ட விவகாரத்தால் பஸ் நிலையம் திறக்கப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.
- பஸ் நிலையத்தை திறக்க கோரி தச்சை சுப்பிரமணியன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாநகரின் பழைய பஸ் நிலையம் என்றழைக்கப்படும் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் கடந்த 2017-ம் ஆண்டு இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகங்கள் மற்றும் பார்க்கிங் வசதியுடன் நவீன பஸ் நிலையமாக கட்டப்பட்டு வருகிறது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேலாக பணிகள் முடிவுற்ற நிலையில் இங்கு விதிகளை மீறி மணல் அள்ளப்பட்ட விவகாரத்தால் பஸ் நிலையம் திறக்கப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது. அதாவது தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் என்பதால் இங்கு புதிய கட்டிட பணிகள் நடைபெற்றபோது பூமிக்கு அடியில் தோண்ட தோண்ட, டன் கணக்கில் ஆற்று மணல் இருந்ததாகவும் அவை திருடப்பட்டதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து நீதிமன்றம் விசாரணை நடத்தியது. பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நீதிமன்றம் சார்பில் புவியியல் வல்லுநர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் பல கட்ட ஆய்வுகள் நடத்தினர்.
மணல் குவியல்
இந்நிலையில் பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் டன் கணக்கில் மணல் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்திப்பு பஸ் நிலையம் திறக்க முடியாமல் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் மாநகர 3-வது வார்டு கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் நீதிமன்றத்தில் பஸ் நிலையத்தில் உள்ள மணல் குவியல்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நீதிமன்றம் இதற்காக வழக்கறிஞர் வேலுச்சாமியை நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது.
லாரிகள் மூலம் அகற்றம்
அதனடிப்படையில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் வழக்கறிஞர் வேலுச்சாமி மற்றும் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் நூற்றுக்கணக் கான யூனிட் மணல்களை உடனடியாக அப்புறப்படுத்தி ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் வைக்கும்படி வழக்கறிஞர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் சந்திப்பு பஸ் நிலையத்திலிருந்து மூலமாக ஆற்று மணல் எடுத்துச் செல்லப்பட்டு ராமையன்பட்டி குப்பை கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
2-வது நாளாக
சுமார் 30 லாரிகளில் ஆற்று மணல் அள்ளிச் செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக நள்ளிரவில் மணலை எடுத்துச் செல்லும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்னும் ஒரு சில நாட்கள் நடக்கும்.
அதன் பின்னர் பொங்கலுக்குள் பஸ் நிலையத்தை திறக்க விரைவான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
- நகரில் உள்ள சாலை மற்றும் தெருக்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
- ஆன்லைன் வர்த்தகத்தை தடை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை:
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் முகம்மது யூசுப் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணன், முகம்மது ஹனீபா, கான்முகம்மது, கவுரவ ஆலோசகர் சம்சுதீன், துணைசெயலாளர்கள் செய்யதுஅலி, ஆதிமூலம், ரவிக்குமார், பொருளாளர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்த சாலைகளை குறிப்பாக நயினார்குளம் சாலை மற்றும் தெருக்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.
புதுப்பேட்டை செக்கடி சுடலைமாடன்சுவாமி கோவில் அருகில் தண்ணீர் குழாய் உடைந்து நீர் வெளியே சென்றது. இதுதொடர்பாக வியாபாரிகள் சங்கம் சார்பில் விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மேயர் சரவணன் , துணைமேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது, பொதுமக்கள் வியாபாரிகள் நலன் கருதி சந்திப்பு பஸ் நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும்.
சேரன்மகாதேவி முதல் புதுப்பேட்டை நோக்கி செல்லும் தண்ணீர் செல்லும் ஓடைகள் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தால் அனைத்து வியாபாரிகளும் சிறுவணிகர்களும் நலிவடைந்து வருவதால் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் கண்ணன் நன்றி கூறினார்.
- சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
- அனைத்து பஸ்களும் முன்பு போல சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை வடக்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் செல்வ ராஜ் நாடார் தலைமையில் மாவட்ட செயலாளர் நயன்சிங், பொருளாளர் அசோகன் நாடார் ஆகி யோர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு மனு கொடுத்த னர்.
அதில் கூறியிருப்பதாவது:-
நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
எனவே அதனை உடனடியாக திறக்க நடவடி க்கை எடுக்க வேண்டும். அதுவரை அனைத்து பேருந்துகளும் முன்பு போல சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
சந்திப்பு பஸ் நிலையம்
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதா வது:-
நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் ஏராள மான கடைகள் உள்ளது. இதனை நம்பி அவர்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகிறார்கள்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிக்காக கடந்த 5 ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் சிரமம் அடைந்து வரு கிறார்கள்.
எனவே இதனை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன்பு சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நடந்தாலும் அனைத்து பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி சென்று வந்தது.
ஆனால் போக்குவரத்து நெருக்கடி காரணமாக அவை நிறுத்தப்பட்டது. தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டதால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்து உள்ளது. எனவே பஸ் நிலையத்தை திறக்கும் வரை அனைத்து பஸ்களும் அங்கு சென்று வர நடவடி க்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அப்போது வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், தொகுதி செயலாளர் கருப்ப சாமி, துணைத் தலைவர் ஸ்டீபன், செய்தி தொடர்பா ளர் பகவதி, சந்திப்பு வியா பாரிகள் சங்க தலைவர் பெர்னா ண்டோ, செயலா ளர் ரவீந்திரன், பொருளா ளர் சொக்கலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் கட்டும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 4 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ.79 கோடியில் கட்டும் பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பயணிகள் கோரிக்கை
சுமார் 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பஸ் நிலைய பணிகள் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி, முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் தற்காலிகமாக பஸ் நிலையத்தின் சுற்றுப்புற பகுதி வழியாக மாநகர பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்களும், வியாபாரிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை (திங்கட்கிழமை) முதல் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தகர சீட்டுகள் அகற்றம்
இதற்காக கடந்த சில நாட்களாக ராஜா பில்டிங் சாலையில் பஸ் நிலைய கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த தகர சீட்டுகள் அகற்றப்பட்டு சற்று உள்ளே தள்ளி அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் சாலை அகலப்படுத்துதல் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது வெயில், மழையினால் பாதிக்கப்படாமல் இருக்க பஸ் நிலையத்தின் கிழக்கு பகுதியில் 4 தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நின்று செல்லும் பஸ்கள் விவரம்
இந்த 4 நிறுத்தங்களிலும் நின்று செல்லும் பஸ்கள் குறித்த விவரத்தை நெல்லை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, சந்திப்பு பழைய பஸ் நிலையத்தில் 1-வது பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து புதிய பஸ் நிலையம் மார்க்கமாக செல்லும் பஸ்களான 1-டிஎல்எக்ஸ், 2-டி.எல்எக்ஸ் பஸ்கள் இயக்கப்படும்.
2-வது பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பாளை பஸ் நிலையம் மார்க்கமாக செல்லும் பஸ்களான 3 டி, 5 சி, 50, 5இ, 5ஈ, 9எப், 9, 104, 108, 10 எச். 101, 10, 10 கே, 10 எல், 11 ஏ, 14 சி, 22 சி ஆகிய பஸ்கள், இதே போல் 3-வது பஸ் 10சி, 10 டி, 10இ, 10எப் உள்ளிட்டவைகள்,
3-வது பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து பாளை மார்க்கெட் மார்க்கமாக செல்லும் 16 ஏ, 16 சி, 16 டி, 6 எச், 3.ஏ, 4 எம், 6 சி, 98, 58. 15 எச், 12 எல், 161, 13ஏ, 13 பி, 9 எப், 9 என், 9 க்யூ 5 இ. எம். 0, 66, 8டி, 7பி, 9எம், 9பி, 10 கே, 10 எல், 14 ஏ, 4ஜே, 7 என், 70, 9 ஆர், 14 பி, 5ஏ, ஏகே. 3 டி, 12 எம், 121, 128, 15எப், 12 கே. 15 ஜி. 10. ஏ. 16 எப், 166, 15 ஏ. 158, 11 சி, 12 இ, 15 டி., 16 எச், 38 வி, 151, 16இ, 12 எச், 12 ஜே, 168 ஆகிய பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதே போல் 4-வது பஸ் நிறுத்தம் பகுதியில் இருந்து டவுன் மார்க்கமாக செல்லும் பஸ்களான 6 ஏ, 38 வி, 68, 7எப், 78, 7 எச், 41, 5சி, 71, 71, 7சி, 22 சி, 5 ஏ, 7 ஜி, 148, 7எம், 7டி.7 பி, 60, 70, 4எம், 9டி, 12 எச், 10சி, 7ஏ, 5 எப், 98, 134, 6சி, 9க்யூ, 8டி, 6எச், ஏ.8இ.ஏ, 7க்யூ, 75, 7 ஆர், 7 என். 3வி. 9.எல். 10.பி. ஏ, 12 எல், 10 இ. 15 சி. 121. 15டி,3ஏ.5இ, 121, 16 ஏ. 101, 15 எப். 6.எச். 10.ஏ.6டி, 12 கே.5.எச்.4பி, டி 156, 12பி வழித்தட பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தூய்மை பணிகள்
நாளை முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ள நிலையில் சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இன்று மாலை முன்னோட்டமாக சில பஸ்களை இயக்கி பார்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து வருகிற 22-ந்தேதி முதல் மாநகராட்சி அலுவலகம் எதிரே பொருட்காட்சி திடலில் தற்காலிகமாக இயங்கி வரும் பஸ் நிலையம் மூடப்பட உள்ளது.
- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
- பஸ் நிலையம் பணியால் கடந்த 5 ஆண்டுகளாக அங்கு ஆட்டோக்கள் நிறுத்த இடமில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
புதிய மக்கள் தமிழ் தேசம் மாநில தலைவர் செந்தூர் மகாராஜன் தலைமையில் கட்சியினர் திரண்டு வந்து அளித்த மனுவில், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜ கண்ணப்பனை ஒருமையில் பேசி மிரட்டும் வகையில் ராமநாதபுரத்தில் நடந்து கொண்ட நவாஸ்கனி எம்.பி., மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் உடையார் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், மேலப்பாளையம் கருங்குளம் பகுதியில் சுமார் 1½ ஏக்கர் நிலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சொந்தமான தாக உள்ளது. இதனை குறிப்பிட்ட நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அந்த நிலத்தின் மீதான அனைத்து பயன்பாட்டையும் உடனே ரத்து செய்ய வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடத்தை போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
ஆட்டோ நிறுத்தம்
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், சந்திப்பு பஸ் நிலையத்தில் கடந்த 35 ஆண்டு களாக அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் 25 உறுப்பி னர்களுடன் செயல்பட்டு வருகிறது.
பஸ் நிலையம் பணியால் கடந்த 5 ஆண்டுகளாக அங்கு ஆட்டோக்கள் நிறுத்த இடமில்லை. எனவே ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.
எனவே பஸ் நிலைய பணி முடிவடைந்ததும் பஸ் நிலையம் அருகிலேயே அம்பேத்கர் ஆட்டோ நிறுத்தத்தை மீண்டும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தனர். ராதாபுரம் தாலுகா சங்கனாபுரம் ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், தங்கள் பகுதியில் இயங்கி வரும் தார் பிளான்டி னால் பொதுமக்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதனை இயங்க தடை விதிக்க வேண்டும் என்று கூறி யிருந்தனர்.
- நவம்பர் 30-ந்தேதிக்குள் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நிறைவு பெறும்.
- ஆய்வின்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட பலர் உடன் இருந்தனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. நவம்பர் 30-ந்தேதிக்குள் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நிறைவு பெறும். டிசம்பர் மாதம் பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பார். நீதிமன்ற வழக்குகள் காரணமாக தாமதமாகி விட்டது என்றார்.
அப்போது ஆட்சியை கலைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
ஆட்சியை கலைப்பது குறித்து அவர்கள் யோசித்து பார்க்கட்டும் என மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்தார்.
ஆய்வின்போது நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்ச ரும், நிதியமைச்ச ருமான தங்கம் தென்னரசு, கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.