search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jyotipriya Mallick"

    • கடந்த 14-ந்தேதி தொழில் அதிபர் பாகிபுர் ரஹ்மான் என்பவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
    • சோதனையின் முடிவில் மந்திரி ஜோதிபிரியா மாலிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அவரது மந்திரி சபையில் பொது நிறுவனங்கள், தொழில் மற்றும் வனத்துறை மந்திரியாக ஜோதிபிரியா மாலிக் உள்ளார். இவர் ஏற்கனவே உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது ரேஷன் பொருள் வினியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    இந்த முறைகேட்டில் சட்ட விரோத பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு விசாரித்து வருகிறது. பல இடங்களில் சோதனையும் நடத்தி இருந்தது.

    கடந்த 14-ந்தேதி தொழில் அதிபர் பாகிபுர் ரஹ்மான் என்பவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு நெருக்கமாக இருந்த மந்திரி ஜோதிபிரியா வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

    கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் உள்ள 2 வீடுகளிலும், டம்டம்மில் உள்ள முன்னாள் தனி உதவியாளர் வீடு உள்ளிட்ட 8 இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையின் முடிவில் மந்திரி ஜோதிபிரியா மாலிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    17 முதல் 18 மணி நேரம் விசாரணை நடத்தியபிறகு பல மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை கைது செய்தனர்.

    மந்திரி ஜோதிபிரியா மாலிக் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு அனுமதி கேட்போம் என்று அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த கைது குறித்து ஜோதிபிரியா மாலிக் கூறும்போது, "நான் ஒரு பெரிய சதித்திட்டத்துக்கு பலியாகி விட்டேன்" என்றார்.

    இதற்கிடையே மந்திரி ஜோதிபிரியா மாலிக் கைதுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    ×