என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kabadi Tournament"
- போட்டியில் மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டன.
- முதல் பரிசான ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை கீழச்செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் வழங்கினார்.
செய்துங்கநல்லூர்:
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக வல்லநாடு அருகே உள்ள கீழச்செக்காரக்குடி கிராமத்தில் இளைஞர்கள் சார்பில் மாபெரும் 4-ம் ஆண்டு கபடி போட்டி நடந்தது.
போட்டிக்கு ஒன்றிய கவுன்சிலர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் முன்னிலை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மொத்தம் 14 அணிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை டிராகன் வாரியர் பி அணியும், 2-ம் பரிசை புதியம்புத்தூர் முருகன் நினைவு கபடி அணியும், 3-ம் பரிசை டிராகன் வாரியர் சி அணியும், 4-ம் பரிசை அகிலம்புரம் இளைஞர் கபடி அணியும் பெற்றது.
முதல் பரிசான ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை கீழச்செக்காரக்குடி பஞ்சாயத்து தலைவி ராமலட்சுமி அய்யம்பெருமாள் வழங்கினார். இரண்டாம் பரிசு 8,000 மற்றும் கோப்பையை கருங்குளம் ஒன்றிய துணை சேர்மன் லட்சுமண பெருமாள் வழங்கினார். கபடி போட்டியில் விளையாடிய அணிகளுக்கு ஆடைகளை பா.ஜ.க. நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் சுப்பையாவும், விளையாட்டு உபகரணங்களை வடக்கு காரசேரி மாடசாமியும் அன்பளிப்பாக வழங்கினார்.
- சங்கரன்கோவிலில் மகளிர் கபடி போட்டி நேற்று நடந்தது.
- இதில் 14 பள்ளிகள் மற்றும் 8 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி மற்றும் கூடைப்பந்து போட்டிகள் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் மகளிர் கபடி போட்டி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமா மகேஸ்வரி, புளியங்குடி விஜயா, ஒன்றிய செய லாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், பள்ளி தலைமை ஆசிரியர் பார்த்திபன், உடற்கல்வி இயக்குனர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 14 பள்ளிகள் மற்றும் 8 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. போட்டியை தொடங்கி வைத்து பேசியதாவது,
இந்தியாவில் விளை யாட்டில் தமிழகம் முதலிடம் பிடிக்க தமிழக முதல்-அமைச்சர் அயராது உழைத்துக் கொண்டிருக்கின்றார். அதற்காக தற்போது திறமை வாய்ந்த சேப்பாக்கம் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக நியமனம் செய்துள்ளார்.
மேலும் முதல்-அைமச்சர் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.50 கோடி மதிப்பில் தமிழக முழுவதும் 14 விளையாட்டுகள் அடங்கிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இதில் மாவட்ட, மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் பரிசு வழங்க உள்ளார். மேலும் வெற்றி பெற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதமும், மேலும் விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற ஊக்கத் தொகையும் வழங்க உள்ளார்.
அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள் பயன் படுத்திக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தியும், விளையாட்டில் கவனம் செலுத்தியும் பல தகுதிகளை பெற்று அரசு பணிக்கு சேர அனைவரும் அயராது உழைக்க வேண்டும்.
மேலும் இளைஞர்கள் தான் எதிர்கால இந்தியாவை ஒளியேற்ற கூடியவர்கள் என்பதால் அனைவரும் அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பாலச்சந்தர், பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளைத்துரை, மகேஸ்வரி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார்,
செய்யதுஅலி, மின்வாரிய தொ.மு.ச. திட்டச் செயலாளர் மகாராஜன், நகர அவைத் தலைவர் முப்பிடாதி, நகர துணைசெயலாளர்கள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், முத்துக்குமார், சுப்புத்தாய், இளைஞர் அணி சரவணன், முகேஷ், மாணவர் அணி கார்த்தி, உதயகுமார், அப்பாஸ்அலி மற்றும் கேபிள் கணேசன், வேல்முருகன், வெங்கடேஷ் வீரமணி, வீரா, ஜிந்தாமைதீன், சம்பத், ஜெயகுமார், பிரகாஷ் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
- ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி கீழப்பாவூர் புது மைதானத்தில் நடைபெற்றது.
- பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் விளையாட்டு குழு நிறுவனர் பி.ஆர்.கே.அருண் தலைமை தாங்கினார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் விளையாட்டு குழு சார்பில் தென்னிந்திய அளவிலான 4-ம் ஆண்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபடி போட்டி கீழப்பாவூர் புது மைதானத்தில் நடைபெற்றது.
முதல் போட்டியை கீழப்பாவூர் விளையாட்டு குழு நிர்வாக குழு உறுப்பினர் சுபா தொடங்கி வைத்தார்.
இப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு போலீஸ் அணி முதல்பரிசும், சென்னை போஸ்டல் அணி 2-வது பரிசும் பெற்றது. பெண்கள் பிரிவில் ஈரோடு பி.கே..ஆர். பெண்கள் கல்லூரி அணி முதல்பரிசும், ஒட்டன்சத்திரம் எஸ்..எம்.கே.வி.சி. அணி 2-வது பரிசும் பெற்றன.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ. 1லட்சம் ஆலங்குளம் செல்வராணி பட்டு மகால் பிரின்ஸ் தங்கம் சார்பிலும், 2-ம் பரிசு ரூ.50 ஆயிரம் கீழுப்பாவூர் பேரூராட்சி கவுன்சிலர் பொன்செல்வன், பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர் ஆகியோர் சார்பிலும், அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த இரு அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் பரமசிவன், சந்தோஷ், விக்னேஷ் ஆகியோர் சார்பிலும் வழங்கப்பட்டது.
அதே போல் பெண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.75 ஆயிரம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எஸ்.மதியழகன் சார்பிலும், 2-ம் பரிசு ரூ.40 ஆயிரம் கண்ணன், சரவணன் ஆகியோர் சார்பிலும், அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வைரசாமி, சங்கர் ஆகியோர் சார்பிலும் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் விளையாட்டு குழு நிறுவனர் பி.ஆர்.கே.அருண் தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு உறுப்பினர் கே.ஆர்.பி.இளங்கோ தொகுப்புரை ஆற்றினார்.
விழாவில் பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா, விளையாட்டுக்குழு சட்ட ஆலோசகர்
கே.ஆர்.பி.பிரபாகரன், கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன், பன்னீர்செல்வம் அணி அ.தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி, பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், கீழப்பாவூர் விளையாட்டுக்குழு கவுரவ தலைவர் செல்வன், தலைவர் மனோகரன், தென்காசி மாவட்ட கபடி கழக செயலாளர் அருள்இளங்கோவன், விளையாட்டுக்குழு துணைத்தலைவர் சுரேஷ், செயலாளர் வைகுண்டராஜ், பொருளாளர் அருணாசல முத்துச்சாமி, துணை செயலாளர் இசக்கிமணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்துச்செல்வி, உமா என்ற பவித்ரா, வசந்தி, ராம பாண்டியன், மாரிமுத்து, ராஜாமணி, சுடலைபூபதி, பொருட்செல்வன், கண்ணன், காந்தி, முருகன், கோட்டைச்சாமி, காளிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் ஆசிரியர் சந்தானம், மதியழகன்,சுரேஷ், சுடலைமணி, தங்கச்சாமி, சுப்பையா, பொதுக்குழு உறுப்பினர்கள் லெட்சுமி சேகர்,சுரேஷ் ஆறுமுகபாண்டி என்ற அழகர், கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் மதியழகன்,மாரியம்மாள், லதா, முத்துலட்சுமி, முத்து லட்சுமி, பொற்செல்வி, கவிதா, கமலா, சிவஜீனா, பவித்ரா, வைரச்சாமி, சேவியர்ராஜன், பேரூராட்சி கவுன்சிலர் சீ.பொன்செல் வன், தலைமை ஆசிரியர் முருகேசன், அழகுதுரை, பேரூர் செயலாளர் ஜெகதீசன், வைகுண்டம், அன்பரசு, முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளபாளையம் கார்த்திக் நினைவாக நேதாஜி பெருமாள் பிரதர்ஸ் மற்றும் அலை ஓசை நண்பர்கள் சார்பில் தொடர் கபடி போட்டி நடைபெற்றது.
- மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சி.மகேந்திரன் துவக்கி வைத்தார்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஒன்றியம், பள்ளபாளையம் கார்த்திக் நினைவாக நேதாஜி பெருமாள் பிரதர்ஸ் மற்றும் அலை ஓசை நண்பர்கள்சார்பில் தொடர் கபடி போட்டி நடைபெற்றது.
போட்டியை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சி. மகேந்திரன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உடுமலை தெற்கு ஒன்றிய செயலாளர் த. போகநாதன், தளி பேரூர் செயலாளர் ராமலிங்கம், பள்ளபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் நந்தக்குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் சமது பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்
- சமது பள்ளியின் கபடி மாணவர்கள் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்
திருச்சி:
திருச்சி ராக்சிட்டி சகோதயா சார்பாக 2022 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கபடி போட்டி கடந்த மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் திருச்சி காஜா நகர் சமது மேல்நிலைப்பள்ளியில் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் மாநில அளவில 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் சமது பள்ளியின் கபடி மாணவர்கள் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சமது பள்ளியின் தலைவர் டாக்டர். ஏ.கே.காஜா நஜிமுதீன் தலைமை தாங்கினார். சமது பள்ளியின் செயலாளரும், தாளாளருமான டாக்டர். வி.எஸ்.ஏ.ஷேக் முஹம்மது சுேஹல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மேலும் சமது பள்ளியின் பொருளாளர் ஏ.எஸ்.காஜாமியான் அக்தர், பள்ளியின் கல்வி இயக்குநர் ஏ.எம்.அப்துஸ் சலாம், பள்ளியின் நிர்வாக உறுப்பினர் எ.எம்.முகமது ஆஷிக், பள்ளியின் முதல்வர் டாக்டர். சி.ஜெ.சாக்கேர், காவேரி குளோபல் பள்ளியின் முதல்வர் எம்.சரஸ்வதி, பள்ளியின் துணை முதல்வர் ஜெ.மும்தாஜ் பேகம் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.
இப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரான சமது பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் டி.உமா மகேஷ்வரன் மற்றும் எஸ்.ஸ்ரீராம் ஆகிேயார் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
- ஆண்கள் பிரிவிற்கான கபடி போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் தொடங்கிவைத்தார்.
- போட்டிகளுக்கு இடையே ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.
திசையன்விளை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69- வது பிறந்தநாளையொட்டி நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஏற்பாட்டில் திசையன்விளையை அடுத்த அப்புவிளை வி.எஸ்.ஆர் விளையாட்டு மைதானத்தில் அகில இந்தியஅளவிலான ஆண்கள், பெண்கள் அணியினர் மின்னொளி கபடி போட்டி 11-ம் தேதி தொடங்கியது.
நேற்று இரவு 3-வது நாளாக நடந்த ஆண்கள் பிரிவிற்கான கபடி போட்டியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன் வீரர்களை அறிமுகம் செய்து தொடங்கிவைத்தார்.
ஆண்கள் பிரிவில் மராட்டிய அணியும், எஸ்.ஆர்.எம்.பல்கலைகழக அணியும் விளையாடியது. இதில் மராட்டிய அணி 28 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எஸ்.ஆர்.எம்.அணி 26 புள்ளிகள் பெற்றது.
மற்றொரு ஆண்கள் பிரிவு ஆட்டத்தில் டெல்லி சி.ஆர்.பி.எப். அணியும், குஜராத் இன்கம்டேக்ஸ் அணியும் விளையாடியது. இதில் டெல்லி அணி 37 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. குஜராத் அணி 22 புள்ளிகள் எடுத்தது.போட்டிகள் இன்று அதிகாலை வரை நடந்தது.
பல்வேறு ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவினர் கலந்துகொண்டு விளையாடினர். போட்டிகளுக்கு இடையே நடனம் மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தது.
ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தா மகேஷ்வரன், முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ், தொழில் அதிபர்கள் வி.எஸ்.ராமச்சந்திரன், வி.எஸ்.ஆர்.சுபாஷ்.நவ்வலடி பஞ்சாயத்து தலைவர் ராதிகா சரவணகுமார், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு செயலாளர் விவேக் முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்