search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kagiso Rabada"

    • வங்கதேச அணி 416 ரன்கள் பின் தங்கி உள்ளது.
    • ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    சட்டோகிராம்:

    தென்ஆப்பிரிக்கா- வங்காளதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்திருந்தது. டிரிஸ்டான் ஸ்டப்ஸ் சதம் (106 ரன்) அடித்தார். தொடக்க ஆட்டக்காரர் டோனி சி ஜோர்சி 141 ரன்களுடனும், டேவிட் பெடிங்காம் 18 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். டேவிட் பெடிங்காம் 59 ரன்னிலும், நிலைத்து நின்று ஆடிய டோனி டி ஜோர்சி 177 ரன்னிலும் (269 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) தைஜூல் இஸ்லாம் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

    இதை தொடர்ந்து வந்த வியான் முல்டெர் அவரது முதலாவது சதத்தை எட்டினார். அத்துடன் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 144.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 575 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 9 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. மொமினுல் ஹக் 6 ரன்னுடனும், கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஷன்டோ 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த முஷ்பிகுர் ரஹீம் 0, மெஹிதி ஹசன் மிராஸ் 1, மஹிதுல் இஸ்லாம் அன்கான் 0, என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வங்கதேச அணி 48 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து மொமினுல் ஹக் - தைஜுல் இஸ்லாம் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மொமினுல் ஹக் அரை சதம் அடித்து அசத்தினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் 86 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தது. அடுத்த சிறிது நேரத்தில் இஸ்லாம் 30 ரன்னில் அவுட் ஆனார்.

    இறுதியில் வங்கதேசம் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வங்கதேச அணி 416 ரன்கள் பின் தங்கி உள்ளது. 

    • பேட்டிங் தரவரிசையில் ஜெய்ஸ்வால் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • ரச்சின் ரவீந்திரா 8 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

    டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் பந்து வீச்சாளர்களில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரபாடா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் மிகவும் வேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்தவர் வீரர் என்ற சாதனையையும் ரபாடா படைத்தார்.

    2018-ல் ரபாடா ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார். பின்னர் பின்னடைவை சந்தித்த ரபாடா மீண்டும் முதலிடம் பிடித்து மாஸ் காட்டியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தானின் நோமன் அலி டாப் 10-க்குள் நுழைந்துள்ளார்.

    3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே பும்ரா, அஸ்வின் உள்ளனர்.மிட்செல் சான்ட்னர் 30 இடங்கள் முன்னேறி 44-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பாக சான்ட்னர் 2017-ம் ஆண்டு 39-வது இடத்தில் இருந்ததே அவரது உச்சபட்ச தரவரிசையாகும்.

    பேட்டிங் தரவரிசையில் ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல் 20 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா 8 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா ஆவார்.
    • வங்கதேசத்துக்கு எதிராக ரபாடா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.

    இதில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்ததுள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் வியான் முல்டர் 3 விக்கெட்டும் ரபாடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இந்நிலையில் இந்த போட்டியில் முஷ்பிகுர் ரஹீம் விக்கெட்டை ரபாடா வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6-வது தென் ஆப்பிரிக்க வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களில் முதல் இடத்தில் டேல் ஸ்டெய்ன் (439) உள்ளார். அவரை தொடர்ந்து 2 முதல் 6 இடங்கள் முறையே ஷான் பொல்லாக் (421), மக்காயா ந்தினி (390), ஆலன் டொனால்ட் (330), மோர்னே மோர்கல் (309), ககிசோ ரபாடா (300) ஆகியோர் உள்ளனர்.

    மேலும் மிகக் குறைந்த பந்துகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையும் ரபாடா படைத்துள்ளார். அந்த வகையில் முதல் நான்கு இடங்கள் முறையே ரபாடா (11817 பந்துகள்), பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் (12602),

    தென் ஆப்பிரிக்கா வீரர்கள் டேல் ஸ்டெய்ன் (12605), ஆலன் டொனால்ட் (13672) ஆகியோர் உள்ளனர்.

    • வருடத்துக்கு 2 டெஸ்டில் விளையாடினால் அவரால் எப்படி 400 விக்கெட்டை தொட முடியும்.
    • தென்ஆப்பிரிக்க அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அவசியமாகும்.

    தென் ஆப்பிரிக்கா - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட்டில் 258, ஒருநாள் போட்டியில் 157, டி20-யில் 58 என ஆக மொத்தம் 500 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இந்நிலையில் அதிகமான போட்டிகளில் விளையாடினால் ரபாடா பல சாதனைகளை படைப்பார் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நிதினி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து நிதினி கூறியதாவது:-

    ரபடா மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் சிறப்பாக பந்து வீசினார். அவரால் 400 விக்கெட்டை தாண்டி சாதனைகளை படைக்க முடியும். ஆனால் வருடத்துக்கு 2 டெஸ்டில் விளையாடினால் அவரால் எப்படி 400 விக்கெட்டை தொட முடியும். தென்ஆப்பிரிக்க அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அவசியமாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தென்ஆப்பிரிக்க வீரர்களில் டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்தவர் ஸ்டெய்ன். அவர் 439 விக்கெட் எடுத்துள்ளார். பொல்லாக் 421 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், நிதினி 390 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார். ரபடா 285 விக்கெட்டுடன் 7-வது இடத்தில் உள்ளார். அவர் குறைவான டெஸ்ட்களில் விளையாடி உள்ளார்.

    • 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லார்ட்சில் மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதையடுத்து 2-வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 149 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய 7 தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ஸ்டெயின் 439 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 2 முதல் 6-வது இடங்கள் முறையே ஷான் பொல்லாக், நிதினி, டொனால்ட், மோர்னே மார்கல், கல்லீஸ் ஆகியோர் உள்ளனர்.

    தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #KagisoRabada #SouthAfrica #CricketerOfTheYear

    ஜொகன்னஸ்பர்க்:

    தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வருபவர் காகிசோ ரபாடா. 23 வயதாகும் இவர் 2018-ம் ஆண்டுக்கான தென்னாப்ரிக்கா கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரபாடா தென்னாப்ரிக்கா அணியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னதாக ஹாசிம் அம்லா, ஜாக்கஸ் கல்லிஸ், மகாயா நிதினி, டி வில்லியர்ஸ் உள்ளிட்டோர் இரண்டு முறை சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ரபாடா, 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்திற்கு எதிராக கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற போட்டியிலும், டெஸ்ட் போட்டியில் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவிற்கு எதிரான போட்டியிலும் அறிமுகம் ஆனார்.



    2017-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார். தற்போது அவர் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்திலும், ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஏழாவது இடத்திலும் உள்ளார். #KagisoRabada #SouthAfrica #CricketerOfTheYear
    ×