search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kaidana"

    • 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர் கடனுக்கு 50 சதவீத மானியம் வழங்க, குமாரிடம் மாவட்ட மேலாளர் பொறுப்பு சாந்தி ரூ.15,000 லஞ்சமாக கேட்டார்.
    • லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம் சீலநா யக்கன்பட்டியில் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம் உள்ளது. அங்கு ஆதிதிராவிடர் பிரிவு வகுப்பினருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு, பெத்தநாயக்கன்பா ளையம் மணியார் குண்டத்தை சேர்ந்த குமார் (வயது 39) என்வர் டிராக்டர் வாங்க விண்ணப்பம் அளித்தார். அதற்கு குமாரிடம் நேர்காணல் நடந்தது. தொடர்ந்து 7.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிராக்டர் கடனுக்கு 50 சதவீத மானியம் வழங்க, குமாரிடம் மாவட்ட மேலாளர் பொறுப்பு சாந்தி ரூ.15,000 லஞ்சமாக கேட்டார்.

    லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று மாலை போலீசார் அறிவுறுத்தல் படி ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரம் நோட்டுகளை மாவட்ட மேலாளிடம் கொடுக்க குமார் வந்தார்.

    அப்போது இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் லுங்கி அணிந்து அலுவலகத்திற்கு வந்தனர். குமார் மாவட்ட மேலாளர் சாந்தியிடம் லஞ்ச பணத்தை கொடுக்க முயன்றார். ஆனால் அவர் அந்த பணத்தை அலுவலக உதவியாளரான மற்றொரு சாந்தியிடம் வழங்க அறிவுறுத்தினார்.

    அதன்படி குமார் கொடுத்த பணத்தை உதவி யாளர் பெற்றுக் கொண்டார். அப்போது போலீசார் கையும் களமாக பிடித்து மாவட்ட மேலாளர் சாந்தி மற்றும் உதவியாளர் சாந்தியை கைது செய்தனர்.

    தொடர்ந்து இரவு முழுவதும் விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் மீது ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இன்று அவரது வீட்டிலும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இதைனிடையே, இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், சேலம் பெண்கள் கிளை சிறையில் அவர்களை அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ×