search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kalakad"

    • சமீபகாலமாக கடமான், கரடி, யானை, காட்டுபன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
    • மருத்துவதுறையினரின் பரிந்துரையின் பேரிலும், கலெக்டர் உத்தரவின் படியும் தான் 20 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

    களக்காடு:

    களக்காடு யூனியன் கூட்டம் சேர்மன் இந்திரா ஜார்ஜ்கோசல் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் விசுவாசம், ஆணையாளர் மங்கையர்கரசி முன்னிலை வகித்தனர்.

    இதில் கவுன்சிலர்கள் ஜார்ஜ்கோசல், தமிழ்செல்வன், சத்ய சங்கீதா, விஜயலெட்சுமி, வனிதா, சங்கீதா மற்றும் யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கவுன்சிலர் தமிழ்செல்வன் பேசுகையில், களக்காடு வட்டார பகுதி விவசாயம் நிறைந்த பகுதி ஆகும். இங்கு சமீபகாலமாக கடமான், கரடி, யானை, காட்டுபன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளால் வாழை, நெல், தென்னை, பனை உள்ளிட்ட பயிர்கள் சேதமாகி வருகிறது.

    இதற்கு இழப்பீடு வழங்க வேண்டிய வனத்துறையினர் வனவிலங்குகள் அட்டகாசத்தை மறைக்கவும், மக்களை திசை திருப்பவும் விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர் வாரி விளைநிலங்களுக்கு செல்ல பாதை ஏற்படுத்த வேண்டும். ஜெ.ஜெ, நகரில் மழைநீர் தேங்காத வண்ணம் முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். டெங்கு தடுப்பு பணிக்கு அதிக பணியாளர்கள் நியமிக்கப்படுவதால் பொதுநிதி வீணாகிறது என்றார்.

    இதற்கு பதிலளித்த ஆணையாளர் மங்கையர்கரசி, "மருத்துவதுறையினரின் பரிந்துரையின் பேரிலும், கலெக்டர் உத்தரவின் படியும் தான் 20 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். டெங்கு பரவல் குறைந்ததால் பணியாளர்களின் எண்ணிக்கையும் 8 ஆக குறைக்கப்படும்" என்றார்.

    அதனைதொடர்ந்து ஜெ.ஜெ.நகரில் யூனியனுக்கு சொந்தமான 11 ஏக்கர் 64 செண்ட் நிலத்தை குத்தகை காலம் முடிந்த பின்னரும் யூனியனிடம் ஒப்படைக்காமல் உள்ளதால் யூனியனுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதை தடுக்க அந்த நிலைத்தை மீட்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • களக்காடு நகராட்சி கூட்டம் தலைவர் சாந்தி சுபாஷ் தலைமையில் நடந்தது.
    • ரூ.1 கோடியே 92 லட்சத்திற்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்துள்ளது.

    களக்காடு:

    களக்காடு நகராட்சி கூட்டம் தலைவர் சாந்தி சுபாஷ் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ராஜன், ஆணையாளர் (பொறுப்பு) கண்மணி முன்னிலை வகித்தனர்.

    இதில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துணை தலைவர் ராஜன் பேசுகையில், ரூ.1 கோடியே 92 லட்சத்திற்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் அரசுக்கு 10 சதவீத நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆணையாளரும், பொறியாளரும் தான் பொறுப்பு. டெண்டரை ரத்து செய்து விட்டு, மறு டெண்டர் விட வேண்டும் என்றார். கவுன்சிலர் ஆயிஷா கூறுகையில், களக்காடு பகுதியில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். கூட்டத்தில் கலந்து கொள்ள செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால் தற்போது செய்தியாளர்களுக்கு அழைப்பு அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது என்றார். ஆணையாளர் கண்மணி பதிலளிக்கையில் பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு அனுப்புவது கட்டாயம் இல்லை. அது தலைவரின் விருப்பம் ஆகும் என்றார். கவுன்சிலர் சித்ரா பேசும் போது, எனது வார்டில் சாக்கடைகள் ஒரு மாதமாக அள்ளவில்லை. நீங்கள் வந்து பார்த்து விட்டு சென்றது தான் மிச்சம் பணிகள் ஏதும் நடக்கவில்லை. இதனால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுகிறது என்று கூறினார். இசக்கியம்மாள் கூறுகையில் எனது வார்டில் கழிப்பறை கட்டிடம் பயன் இல்லாமல் கிடக்கிறது என்றார்.

    • களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 42). கூலி தொழிலாளி.
    • வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு தந்தை அல்போன்சிடம் கேட்டார். இதனை அறிந்த அவரது தம்பி செல்வகுமாருக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வெப்பல் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது 42). கூலி தொழிலாளி. இவர் தனது தந்தை அல்போன்ஸ்க்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு தந்தை அல்போன்சிடம் கேட்டார். இதனை அறிந்த அவரது தம்பி செல்வகுமாருக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வகுமார், ஸ்டீபன்ராஜை கம்பால் தாக்கினார்.

    மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயம் அடைந்த ஸ்டீபன்ராஜ் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப் பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ராம நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அண்ண னை தாக்கிய செல்வகுமாரை தேடி வருகிறார்.

    • களக்காடு அருகே உள்ள மூங்கிலடி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 53). தொழிலாளி.
    • நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள மாசானசாமி கோவிலில் நடந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மூங்கிலடி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 53). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள மாசானசாமி கோவிலில் நடந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

    நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் களக்காடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் தங்கத்துரை மகன் முத்துக்குமார் (வயது 28).
    • கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு முத்துக்குமாரின் சகோதரர் முத்துராஜும், அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் பிரவினும் போட்டியிட்டனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் தங்கத்துரை மகன் முத்துக்குமார் (வயது 28). விவசாயி. கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு முத்துக்குமாரின் சகோதரர் முத்துராஜும், அதே ஊரைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் பிரவினும் போட்டியிட்டனர். இதில் முத்துராஜ் வெற்றி பெற்றார்.

    இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று முத்துக்குமார் தனது வீட்டு முன் நின்று கொண்டு அவரது உறவினர்கள் அனந்தகிருஷ்ணன், கணேசன் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரவின், அவரது சகோதரர் ராபின்சன், தந்தை லெட்சுமணன் ஆகியோர்களுக்கும், முத்துக்குமாருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த லெட்சுமணன் மற்றும் அவரது மகன்கள் பிரவின், ராபின்சன் ஆகியோர், முத்துக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் கணேசன், அனந்தகிருஷ்ணன் ஆகியோரை அவதூறாக பேசி கம்பால் தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். காயம் அடைந்த முத்துக்குமார் உள்பட 3 பேரும் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, இதுசம்பந்தமாக லெட்சுமணன் மற்றும் அவரது மகன்களை தேடி வருகிறார்.

    • களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் முத்தாரம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
    • இதையொட்டி ஊர் பெரியவர்கள் படத்துடன் பேனர் வைத்திருந்தனர்

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூர் முத்தாரம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி ஊர் பெரியவர்கள் படத்துடன் பேனர் வைத்திருந்தனர். இந்த பேனரை அதே ஊரைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் பிளேடால் கிழித்து சேதப்படுத்தினார்.

    இதையடுத்து ஊர் பெரியர்கள் சஞ்சய்யிடம் இதுபற்றி தட்டிக் கேட்டனர். அப்போது சஞ்சய்க்கு ஆதரவாக அதே ஊரை சேர்ந்த தங்கத்துரை மகன் முத்துக்குமார் பேசினார். அப்போது அவருக்கும், லெட்சுமணன் மகன் தொழிலாளி பிரவின்ராஜாவுக்கும் (வயது29) தகராறு ஏற்பட்டது. பின்னர் பெரியவர்கள் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    சம்பவத்தன்று பிரவின்ராஜாவின் தந்தை லெட்சுமணன் நடுச்சாலைப்புதூர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அவரை முத்துக்குமார், அவரது சகோதரர்கள் கணேசன், முத்துராஜ் மற்றும் ஆனந்தன் ஆகிய 4 பேரும் அவதூறாக பேசினர்.

    இதைப்பார்த்த பிரவின் ராஜா எனது தந்தையிடம் ஏன் தகராறு செய்கிறீர்கள் என தட்டிக் கேட்டார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் உள்பட 4 பேரும் சேர்ந்து, பிரவின்ராஜாவை அவதூறாக பேசி, கம்பு, இரும்பு கம்பி, அரிவாள்களால் சரமாரியாக தாக்கினர்.

    மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர். தாக்குதலில் காயம் அடைந்த பிரவின்ராஜா களக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி 4 பேரையும் தேடி வருகின்றார்.

    • களக்காடு அருகே உள்ள மூங்கிலடி, வண்ணாந்துரை ஓடையை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது48).
    • கொடை விழாவை பார்க்க இம்மானுவேல் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சென்றிந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மூங்கிலடி, வண்ணாந்துரை ஓடையை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது48). இவர் செங்கல்சூளையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 30-ந்தேதி இரவில் மூங்கிலடி முப்பிடாதி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

    கொடை விழாவை பார்க்க இம்மானுவேல் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சென்றிந்தார். பின்னர் இம்மானுவேல் தனது மனைவி மற்றும் 2-வது மகனுடன் வீட்டிற்கு வந்து விட்டார். மூத்த மகன் சுடலைமுத்து (14) கொடை விழா பார்க்க கோவிலிலேயே இருந்தார். அதன் பின் சுடலைமுத்து வீட்டிற்கு வரவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த இம்மானுவேல் உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் சுடலைமுத்து பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுவனை தேடி வருகிறார்.

    • அஜித்குமாருக்கும், லிங்கம் மகன் பிலிப் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
    • காயமடைந்த அஜித்குமார் ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ராமச்சந்திரபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் அஜித்குமார் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கும் மாவடி எம்.எஸ்.எஸ்.நகரை சேர்ந்த லிங்கம் மகன் பிலிப் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று அஜித்குமார் மாவடி பஜாருக்கு பூ வாங்க சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த பிலிப், முத்துகிருஷ்ணன் மகன் சரவணன் ஆகியோர் அஜித் குமாரை அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டினர். இதில் காயமடைந்த அஜித்குமார் ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிலிப், சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள தம்பிதோப்பு ஸ்ரீமத் நாராயணசுவாமி கோவில் திருவிழா 4 நாட்கள் நடந்தது
    • விழாவை முன்னிட்டு அய்யாவுக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள தம்பிதோப்பு ஸ்ரீமத் நாராயணசுவாமி கோவில் திருவிழா 4 நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலையில் முட்டப்பதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

    விழாவை முன்னிட்டு அய்யாவுக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், விஷேச பணிவிடைகளும் நடத்தப்பட்டது. பூச்சிறப்பு, வாணவேடிக்கை, உச்சிப்படிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.. அய்யா நாராயணசுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • நம்பி களக்காடு வந்து விட்டு தனது மொபட்டில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
    • படுகாயம் அடைந்த நம்பி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழக்கள்ளிகுளத்தை சேர்ந்தவர் நம்பி (வயது60). விவசாயி. இவருக்கு அருணாச்சலம் என்ற மனைவியும், 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

    சம்பவத்தன்று நம்பி களக்காடு வந்து விட்டு தனது மொபட்டில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கல்லடி சிதம்பரபுரம் ரோட்டில் சென்ற போது எதிரே களக்காடு நோக்கி வந்த அரசு பஸ், நம்பி சென்ற மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நம்பி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி அவரது மகன் முப்பிடாதி களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் இதுதொடர்பாக பஸ்சை ஓட்டி வந்த களக்காடு புதுத்தெருவை சேர்ந்த இம்மானுவேல் ராஜாசிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • களக்காடு அருகே உள்ள மேலப்பத்தை வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜாசிங் (வயது46). விவசாயி.
    • இவர் களக்காடு வந்து விட்டு, மேலப்பத்தைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    களக்காடு

    களக்காடு அருகே உள்ள மேலப்பத்தை வடக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜாசிங் (வயது46). விவசாயி. சம்பவத்தன்று இவர் களக்காடு வந்து விட்டு, மேலப்பத்தைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    தாமரைகுளத்தின் கரையில் சென்ற போது அவரது உறவினர் யோசுவா என்பவரும், ரூபன் என்பவரும் அங்கு நின்று பேசிக் கொண்டிருந்தனர், இதைப்பார்த்த ராஜாசிங் யோசுவாவிடம் இங்கு என்ன செய்கிறீர்கள்? என கேட்டார்.

    இதில் ரூபனுக்கும், ராஜாசிங்கிற்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ரூபன், ராஜாசிங்கை அவதூறாக பேசி, தலையில் கம்பால் தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயம் அடைந்த ராஜாசிங் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ரூபனை தேடி வருகிறார்.

    • மறுகாலின் சுவர்களில் கற்கள் பெயர்ந்து இடிந்து விழுந்துள்ளன. இதனை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • குளம் உடைந்தால் காந்திநகர், செட்டிமேடு பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள செங்களாகுறிச்சி குளத்தின் மூலம் 400 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பொதுப் பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தின் மறுகால் போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது.

    மறுகாலின் சுவர்களில் கற்கள் பெயர்ந்து இடிந்து விழுந்துள்ளன. இதனை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுபோல குளத்தின் மறுகாலில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது குளத்தின் நீர்மட்டம் அதிகளவில் இல்லை.

    மழை பெய்து தண்ணீர் வரத்து அதிகரித்தால், விரிசல்களில் உடைப்பு ஏற்படும் சூழல் நிலவுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குளம் உடைந்தால் அருகில் உள்ள காந்திநகர், செட்டிமேடு பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர்.

    எனவே பழுதடைந்துள்ள குளத்தின் மறுகாலை சீரமைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×