search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakadu thalayanai"

    • களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது.
    • தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை அமைந்துள்ளது. வனத்துறை யினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்க ப்பட்டுள்ள தலையணையில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி அதிக குளுமையுடன் ஓடி வருவதால் அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதற்கிடையே பராமரிப்பு பணிகளுக்காக களக்காடு தலையணை இன்று முதல் மூடப்படுவதாக வனத்துறை யினர் அறிவித்துள்ளனர்.

    • காணும் பொங்கலையொட்டி களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வருகிற ஜனவரி 11-ந் தேதி முதல் தலையணையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட உள்ளது.
    • காணும் பொங்கல் கொண்டாட வருவோர் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. வனப்பகுதியில் கூச்சல் எழுப்பக் கூடாது, வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.

    களக்காடு:

    களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காணும் பொங்கலை யொட்டி களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வருகிற ஜனவரி 11-ந் தேதி முதல் தலையணையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட உள்ளது.

    காணும் பொங்கல் கொண்டாட வருவோர் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. வனப்பகுதியில் கூச்சல் எழுப்பக் கூடாது, வனத்துறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள், கத்தி, அரிவாள் போன்றவைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையணை சோதனை சாவடியில் யாரேனும் தடை செய்யப்பட்ட பொருட்களுடன் பிடிபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காலை 8 மணி முதல் மாலை 4-30 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும்.

    அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் வனத் துறையினர், போலீசார், என்.சி.சி மாணவர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தலையணையில் வாகன நெரிசல்களை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைவரும் குளிப்பதற்கு ஏதுவாக சுற்றுலா பயணிகள் குளிக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படும். அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவோர் வன பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×