search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakdu"

    • சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி நிதி குறித்து பேசினார்.
    • கூட்டத்தில் வி.ஆர்.புரம் கிழக்கு தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    களக்காடு:

    களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர செயற்குழு கூட்டம் தலைவர் கமாலுதீன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் கபீர் வரவேற்று பேசினார். இணைசெயலாளர்கள், ரபீக், ஆரிப் பைஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி நிதி குறித்து பேசினார். கூட்டத்தில் 27 வார்டு மக்களும் பயன்படுத்தும் சிவபுரம் பொது பாதையை அடைத்த வனத்துறைக்கு எதிராக சட்ட ரீதியான போராட்டங்களை மேற்கொள்வது, களக்காடு காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் விசாரணை துரித படுத்த வேண்டும், கட்சி வளர்ச்சி நிதி திரட்டல் சம்மந்தமாக கூடுதல் கவனம் செலுத்துவது, வி.ஆர்.புரம் கிழக்கு தெரு சாலையை சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் செயற்குழு உறுப்பினர்கள் எம்.எம். நாசர், ராம்நாடு பீர்முகம்மது, முஹம்மதுஅலி ஆகியோர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.

    • சம்பவத்தன்று மணி பத்மநேரியில் உள்ள தனது வயலுக்கு மொபட்டில் சென்றார்.
    • வயல் அருகே மொபட்டை நிறுத்தி விட்டு, வயலுக்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள நெடுவிளை வடக்குத் தெருவை சேர்ந்தவர் மணி (வயது70). விவசாயி. சம்பவத்தன்று இவர் பத்மநேரியில் உள்ள தனது வயலுக்கு மொபட்டில் சென்றார். வயல் அருகே மொபட்டை நிறுத்தி விட்டு, வயலுக்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சினார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மொபட்டை காணவில்லை. மர்ம நபர்கள் மொபட்டை திருடி சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பபேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மொபட்டை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    ×