என் மலர்
நீங்கள் தேடியது "Kallakurichi Student Suicide"
- வாலிபர் வாட்ஸ்அப்பில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் ‘ஸ்டேட்டஸ்’ வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
- மேலும் சர்ச்சையான வாசகங்களுடன் சிலருக்கு பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்ன கோவிலான்குளம் குருக்கள்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் கண்ணன் (வயது 27).
இவர் தனது வாட்ஸ்அப்பில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் 'ஸ்டேட்டஸ்' வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சர்ச்சையான வாசகங்களுடன் சிலருக்கு பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
அவரது இந்த பதிவு அப்பகுதியில் வேகமாக பரவி உள்ளது. இதுகுறித்த தகவல் சின்ன கோவிலான்குளம் போலீசாருக்கும் தெரியவந்தது.
உடனே போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ் கண்ணனை கைது செய்தனர். இவர் மீது சங்கரன்கோவில் உள்ளிட்ட சில போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
கைதான ரமேஷ் கண்ணன் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், பீதியை ஏற்படுத்துதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1300 செயல்பட்டு வருகின்றன.
- தனியார் பள்ளிகள் மட்டும் 600 செயல்படுகின்றன.
சென்னை:
கள்ளக்குறிச்சி அருகே தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளி சூறையாடப்பட்டதோடு, வாகனங்கள், பொருட்கள், சான்றிதழ்கள் அனைத்தும் எரித்து தீக்கரையாக்கப்பட்டன.
இதை கண்டித்து தனியார் பள்ளி இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.
தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், சமூக விரோதிகள் பள்ளிக்குள் புகுந்து நாசமாக்கி இருக்கும் செயல் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பள்ளிகளை மூட வேண்டும் என்று கூறி இருந்தனர்.
இந்த அறிவிப்பு வெளிவந்த அடுத்த சிலமணி நேரத்தில் பள்ளிக்கல்வி சார்பில் தனியார் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று அறிவிப்பு வந்தது.
மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் தவறான சிந்தனை உருவாக வழி வகுக்க வேண்டாம். அதனால் அனைத்து தனியார் பள்ளிகளும் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
அரசின் உத்தரவை மீறி பள்ளிகள் மூடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அரசின் உத்தரவை மதித்து பெரும்பாலான தனியார் பள்ளிகள் இன்று செயல்பட்டன.
சென்னை மாவட்டத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1300 செயல்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகள் மட்டும் 600 செயல்படுகின்றன.
மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக செயல்படும் இந்த பள்ளிகளில் ஒரு சிலவற்றை தவிர அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கின. ஒரு சில தனியார் பள்ளிகள் நேற்று இரவே மாணவர்களுக்கு விடுமுறை அளித்தன.
இதுகுறித்து சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் கூறியதாவது:-
சென்னையில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் இன்று செயல்பட்டன. மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இன்று வகுப்புகள் நடைபெற்றன.
ஏதேனும் பள்ளி செயல்படவில்லை என தெரிய வந்தால் அதன் மீது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.