search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallanai School"

    • நர்மதா,சந்தோஷிணி, உமா ஆகியோர் அதிக மதிப்பெண்கள் பெற்றனர்.
    • 3 மாணவிகளுக்கும், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. உதவித்தொகை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை டவுனில் உள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவுக்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், பாளை தொகுதி எம்.எல்.ஏ.வுமான அப்துல் வஹாப் கலந்து கொண்டு பிளஸ்-2 வகுப்பில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 3 மாணவிகளான நர்மதா -588, சந்தோஷிணி- 586, உமா- 580 ஆகியோரை பாராட்டி பொன்னாடை போர்த்தினார். மேலும் 3 மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர். ராஜூ, கவுன்சிலர் அனார்கலி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர் குமார் ஜெயராஜ், முனைவர்கள் முத்துராஜ், காந்திமதி மற்றும் நிர்வாகிகள் சரவணன், சுந்தர், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை டவுண் தெற்கு மவுண்ட் ரோடு நெல்லை மாநகராட்சி( கல்லணை) மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே பொது குடிநீர் குழாய் உள்ளது.
    • இந்த குழாய்க்கு அடைப்பு, திறப்பு நல்லி இல்லாததன் காரணமாக சில மாதங்களாக குடிநீர் வீணாகி கழிவு நீரோடைக்கு செல்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச் சங்க தலைவர் முகமது அய்யூப் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை டவுண் தெற்கு மவுண்ட் ரோடு நெல்லை மாநகராட்சி( கல்லணை) மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே பொது குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாய்க்கு அடைப்பு, திறப்பு நல்லி இல்லாததன் காரணமாக சில மாதங்களாக குடிநீர் வீணாகி கழிவு நீரோடைக்கு செல்கிறது.

    மேலும் குடிநீர் குழாய் கழிவு நீரோடையை நோக்கி இருப்பதால் குடிநீர் தேவைக்கு பயன்படுத்த நினைப்பவர்களுக்கு அதாவது குடிநீர் குடிப்பதற்காக குடம் கொண்டு வருபவர்களுக்கு பெரிதும் சிரமமாக உள்ளது.

    இந்த குடிநீர் அருகிலுள்ள வீடுகளிலுள்ளவர்களுக்கும், சாலையில் செல்பவர்களுக்கும் குறிப்பாக கல்லணை பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. எனவே இந்த குடிநீர் குழாய்க்கு உடனடியாக நல்லி இணைப்பை ஏற்படுத்துவதுடன், குடிநீரை சிரமமில்லாமல் பிடிப்பதற்கு கழிவு நீரோடை பக்கமாக இருப்பதை சாலையின் பக்கமாக திருப்பி வைத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீ லட்சுமி 10-ம் வகுப்பு படித்த வருகிறார்.
    • சீன வீராங்கனை சாதனையை 2 நிமிடம் 41 வினாடிகளில் கியூபிக்கினை சரி செய்து அதனை முறியடித்து சாதனை படைத்தார்

    நெல்லை:

    நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீ லட்சுமி 10-ம் வகுப்பு படித்த வருகிறார். இவர் கியூபிக் கன சதுர போட்டியில் சீன வீராங்கனை எஸ்டென்டியூ 3 நிமிடம் 47 நொடிகள் செய்த கன சதுரத்தை மாணவி ஸ்ரீ லட்சுமி 2 நிமிடம் 41 வினாடிகளில் கியூபிக்கினை சரி செய்து அதனை முறியடித்து சாதனை படைத்தார்.

    மேலும் இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறவும் அவர் முயற்சி செய்து வருகிறார். மாணவி ஸ்ரீ லட்சுமியை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி உடற்கல்வி ஆசிரியர்கள் பசுங்கிளி, கஸ்தூரி, ஆசிரியர்கள் லில்லி, ஜோஸ்பின் உட்பட பலர் பாராட்டினர். 

    • கல்லணை பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் ஒருநாள் விவசாய பணியில் ஈடுபட்டனர்.
    • சாப்பிடும் போது உணவை வீணாக்காமல் இருக்க வேண்டும் என மாணவிகள் கேட்டுக்கொண்டனர்

    நெல்லை:

    விவசாயம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் ஒருநாள் விவசாய பணியில் ஈடுபட்டனர். டவுன் சொக்காட்டான் தோப்பு பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நாற்று நடவுதல், நெல் பாவுதல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் கல்லணை மாணவிகளும் விவசாய பணியை மேற்கொண்டுள்ளனர்.

    அப்போது மாணவிகள் கூறும் போது, விவசாய பணிகளை செய்யும்போதுதான் விவசாயிகள் எவ்வளவு கடினமான பணிகளை செய்து உணவு உற்பத்தி செய்கிறார்கள் என்பது தெரிகிறது. எனவே பொதுமக்கள் சாப்பிடும் போது உணவுகளை வீணாக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து விவசாயத்தை காப்போம் என மாணவிள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    ×