search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kallani"

    • தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகப்படுத்தப்படும்.
    • மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்பட காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கல்லணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடைப் பகுதிக்குச் செல்ல 7 முதல் 10 நாட்கள் ஆகும். தூர்வாரும் பணி இதுவரை 99 சதவீதம் நிறைவடைந்துள்ளது. 4 கி.மீ. வரை மட்டுமே தூர்வார வேண்டி உள்ளது. தண்ணீர் சென்றடைவதற்குள் 100 சதவீதப் பணிகள் முடிவடைந்து விடும்.

    இந்தப் பாசனத்தின் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.08 லட்சம் ஏக்கரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரத்து 214 ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 805 ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 93 ஆயிரத்து 750 ஏக்கரிலும், கடலூர் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 976 ஏக்கரிலும் என மொத்தம் 3.42 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகப்படுத்தப்படும்.

    மேட்டூர் அணையின் நீர் இருப்பு, நீர்வரத்து, எதிர்நோக்கு மழை, கர்நாடகாவில் இருந்து நமக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்படும். மேட்டூர் அணையில் நீர் இருப்பின் அடிப்படையில் முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கல்லூரிக்கு சென்றவர் தனது நண்பர்கள் 5 பேருடன் கல்லணைக்கு குளிக்க வந்தார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பூதலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பூதலூர்:

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவரம்பூர் திருவேங்கடம் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அருண் பாலாஜி (வயது 18).

    திருச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி அறிவியல் பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் கல்லூரிக்கு சென்றவர் தனது நண்பர்கள் 5 பேருடன் கல்லணைக்கு வந்தார். பின்னர் அவர்கள் 6 பேரும் கல்லணைக்கு அருகில் காவிரி ஆற்றில் இறங்கி குளித்தனர்.

    அப்போது பாலாஜி ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் தண்ணீரில் பாலாஜியை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து தோகூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினர் அதிகாரி சகாயராஜ், போக்குவரத்து அதிகாரி முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காவிரி ஆற்றில் இறங்கி தேடி மாணவன் அருண்பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பூதலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×