என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanagaraj"

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'.
    • விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று 'லியோ' படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.




    இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளான இன்று (ஜூன் 22) வெளியாகும் என போஸ்டர் வெளியானது. இதையடுத்து 'நா ரெடி' பாடலின் புரோமோ வீடியோவை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். 'லியோ' படத்தின் முதல் தோற்ற போஸ்டரை விஜய்யின் பிறந்தநாளில் சரியாக 12 மணிக்கு லோகேஷ் வெளியிட்டார்.



    இந்நிலையில் "அல்டர் ஈகோ நா ரெடி" பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தொடர்சியாக அப்டேட்டுகள் வருவதால் ரசிகர்கள் உற்சாத்தில் உள்ளனர்.



    • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள "லியோ" திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.
    • படம் வெளியானதும், தியேட்டருக்கு வெளியே பட்டாசு வெடித்தும், அங்கு வந்தவர்களுக்கு இனிப்பும் வழங்கி லியோ படத்தை கொண்டாடினர்.

    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள "லியோ" திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.

    தமிழகத்தில் காலை 9 மணிக்கு திரைப்படம் வெளியானது. படம் வெளியானதையொட்டி ரசிகர்கள் அதிகாலையிலேயே கொண்டாட்டத்தை தொடங்கினர்.

    அந்த வகையில் கோவை மாவட்டத்திலும், லியோ திரைப்படம் இன்று வெளியானது. மாவட்டத்தில் மொத்தம் 100 தியேட்டர்களில் விஜயின் லியோ வெளியாகியது.

    படம் 9 மணிக்கு தான் வெளியாகியது என்றாலும் கோவையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் காலை 5 மணியில் இருந்தே ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் தியேட்டர் வளாகத்தில் ஒன்று திரண்டு மேள, தாளங்கள் முழங்க படத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

    மேலும் மேள, தாளத்தின் இசைக்கு ரசிகர்கள் ஏற்ப உற்சாக ஆட்டமும் போட்டனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த விஜய் பேனருக்கு பாலாபிஷேகமும் செய்தனர்.

    படம் வெளியானதும், தியேட்டருக்கு வெளியே பட்டாசு வெடித்தும், அங்கு வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கியும் லியோ படத்தை கொண்டாடினர்.

    கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள தியேட்டருக்கு அதிகாலையிலேயே ரசிகர்கள் வந்தனர். அவர்கள், அங்கு லியோ படத்தை வரவேற்று பெரிய பெரிய பேனர்கள் வைத்தனர்.

    தொடர்ந்து அதற்கு பாலாபிஷேகம் செய்ததுடன், அங்கு தேங்காயும் உடைத்தனர். தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி அண்டை மாநில கேரளாவில் இருந்தும் அதிகமான ரசிகர்கள் இங்கு படம் பார்க்க வந்திருந்தனர். 

    தமிழக-கேரள ரசிகர்கள் அனைவரும் இணைந்து, பாடல்களை இசைக்க விட்டும், மேள தாளங்களை அடிக்க வைத்து ஒன்றாக கூடி ஆட்டம், பாட்டமாக படத்தினை வரவேற்றனர். இதனால் அந்த பகுதியே திருவிழாபோல் காட்சியளித்தது.

    இதேபோல் கருமத்தம்பட்டி, நீலாம்பூர் பகுதிகளில் உள்ள தியேட்டர்களிலும் உற்சாகம் களை கட்டியது. அங்கு பேனருக்கு பாலாபிஷேகம், 500 தேங்காய் உடைத்து தங்கள் வரவேற்பை படத்திற்கு அளித்தனர்.

    புறநகர் பகுதிகளில் உற்சாகம் களைகட்டிய போதும், மாநகர பகுதிகளில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரசிகர்கள் திரைப்படத்தை கண்டு ரசித்து சென்றனர்.

    மாநகரில் பாலாபிஷேகம், மேள, தாளங்கள் முழங்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து, ரசிகர்கள் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக நீண்ட வரிசையில் காத்திருந்து, படத்தை பார்த்தனர்.

    சரியாக 9 மணிக்கு படம் வெளியானதும், திரையில் விஜயை பார்த்த சந்தோஷத்தில் ரசிகர்கள் விசில் அடித்தும், பேப்பர்களை பறக்கவிட்டும் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

    • விஜய் தோன்றும் முதல் காட்சியில் திரையரங்குக்குள் ரசிகர்களின் விசில் சத்தம் திரையரங்கை அதிர வைத்தது.
    • ரசிகர்கள் விஜய் வாழ்க, தமிழகத்தின் அடுத்த முதல்வர் வாழ்க என கோஷமிட்டனர்.

    மதுரை:

    நடிகர் விஜய் நடித்து, டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் 41 திரையரங்குகளில் லியோ திரைப்படம் இன்று வெளியானது. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே 4 மணி காட்சியை காட்சிகள் காண ரசிகர்கள் எடுத்த டிக்கெட்டுகள் அனைத்தும் காலை 9 மணிக்கு காண்பதற்கு அனுமதிக்கப்பட்டது.

    அதன்படி மதுரையில் வெற்றி, தங்கரீகல், கோபுரம் சினிமாஸ், சோலைமலை, பழனி ஆறுமுகா, ஜெயம், தமிழ் ஜெயா உள்ளிட்ட 41 திரையரங்குகளிலும் முதல் காட்சியை 20 ஆயிரத்து 171 பேர் காண்பதற்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து முதல் காட்சியை காண அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு குவிந்தனர்.

    இது ரசிகர்களின் காட்சி என்பதால் திரையரங்கு முன்பு வைக்கப்பட்டுள்ள நடிகர் விஜய்யின் கட்-அவுட்டுகளுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும், கலர் பேப்பர் வெடி வெடித்தும் கொண்டாடினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் திரையரங்குகள் உள்ள அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக காலையில் மதுரை பெரியார் பஸ் நிலைய பகுதிகளில் ஒன்று திரண்ட விஜய் ரசிகர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் விஜய் மக்கள் இயக்க கொடிகளை கட்டிக்கொண்டு தியேட்டர்களை நோக்கி ஊர்வலமாக ஆராவாரத்துடன் சென்றனர்.

    திரைப்படத்தில் விஜய் தோன்றும் முதல் காட்சியில் திரையரங்குக்குள் ரசிகர்களின் விசில் சத்தம் திரையரங்கை அதிர வைத்தது. அப்போது ஆரவாரம் செய்த ரசிகர்கள் விஜய் வாழ்க, தமிழகத்தின் அடுத்த முதல்வர் வாழ்க என கோஷமிட்டனர்.

    • விஜய் படம் வெளியாகும் போது அவரது ரசிகர்களின் உற்சாகம், கொண்டாட்டங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    லியோ படத்தை பார்க்க ஜப்பானை சேர்ந்த விஜய் ரசிகை ஒருவர் சென்னை வந்துள்ளார். அவர் குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் படத்தை பார்க்க நின்று கொண்டிருந்தார். முதல் காட்சி திரையிடப்பட்டதால் அடுத்த காட்சியில் படத்தை பார்க்க காத்திருந்தார். உற்சாக மிகுதியில் காணப்பட்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் விஜய்யின் தீவிர ரசிகை. லியோ படத்தை பார்ப்பதற்காகவே ஜப்பானில் இருந்து சென்னை வந்துள்ளேன். விஜய் படம் வெளியாகும்போது அவரது ரசிகர்களின் உற்சாகம், கொண்டாட்டங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    அந்த கொண்டாட்டங்களை நேரில் பார்ப்பதற்காகவே சென்னைக்கு வந்தேன். லியோ படம் பார்க்க வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் இதற்கு முன்பு விஜய் நடித்த மெர்சல், பீஸ்ட், பிகில் ஆகிய படங்களை பார்த்து உள்ளேன். அந்த படங்கள் என்னை கவர்ந்தன.

    விஜய் பாடிய 'குட்டி ஸ்டோரி' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது உங்களுக்கு தமிழ் தெரியுமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், 'கொஞ்சம் கொஞ்சம் தெரியும்' என்று கொஞ்சு தமிழில் பதில் அளித்தார்.

    இதேபோல் பெங்களூருவை சேர்ந்த மற்றொரு பெண் லியோ படத்தை பார்க்க கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு வந்திருந்தார். அவர் படம் பார்க்க செல்லும் முன்பு மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். அவர் கூறுகையில், 'லியோ படம் பெங்களூருவில் உள்ள தியேட்டர்களிலும் வெளியாகி உள்ளது. ஆனால் சென்னையில் உள்ள விஜய் ரசிகர்களின் மகிழ்ச்சி கொண்டாட்டங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அதனால் தான் லியோ படத்தை பார்க்க சென்னை வந்தேன்' என்றார்.

    • தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    • குரோம்பேட்டையில் நள்ளிரவு 12 மணி முதல் ரசிகர்கள் வரிசையில் நின்றனர்.

    சென்னை:

    நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அந்த படம் இன்று (வியாழக்கிழமை) வெளியானது.

    நடிகர் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய்தத், அர்ஜூன், கவுதம் மேனன், மிஷ்கின் என்று நிறைய நட்சத்திர பட்டாளம் லியோ படத்தில் இடம் பெற்று உள்ளனர். இதன் காரணமாக தென் மாநிலங்கள் முழுக்க அந்த படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவியது.

    நடிகர் விஜய் கடந்த சில மாதங்களாக மக்கள் இயக்கம் மூலம் நடத்தி வரும் சமூக சேவை பணிகள் அவரது அரசியல் வருகைக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. அவரது அதிரடி சேவைகள் தொடங்கப்பட்ட பிறகு வெளியாகும் முதல் படம் என்பதால் லியோ படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களும் ஆர்வம் காட்டினார்கள்.

    தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. என்றாலும் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தமிழக ரசிகர்கள் இந்த மாநிலங்களுக்கு படையெடுத்து சென்று அதிகாலை 4 மணி காட்சியில் லியோ படத்தை கண்டு களித்தனர்.

    ஏற்கனவே பல தியேட்டர்களில் லியோ படத்திற்கான ஒருவார காட்சிக்கு முன்பதிவு நிறைவு பெற்று இருந்தது. இன்று அந்த படத்தை பார்ப்பதற்கான டிக்கெட்டுகள் மட்டும் நேற்று விற்பனை செய்யப்பட்டன. இதனால் நேற்று தியேட்டர்களில் ரசிகர்கள் வெள்ளம் போல் திரண்டு இருந்தனர்.

    நேற்று இரவே பல இடங்களில் தியேட்டர்களில் லியோ பட பேனர்கள் பிரமாண்டமாக வைக்கப்பட்டன. சில இடங்களில் கட்-அவுட் வைக்க தடை இருந்த போதிலும் ரசிகர்கள் தியேட்டர்களை அலங்கரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் முழுவதும் லியோ படம் வெளியான அரங்குகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் கோலாகலமாக இருந்தது. 

    இன்று காலை 9 மணி காட்சியில் முதல் ஆளாக தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவியது. இதற்காக நேற்று இரவே ரசிகர்கள் தியேட்டர் முன்பு நீண்ட வரிசையில் நிற்க தொடங்கி விட்டனர். குரோம்பேட்டையில் நள்ளிரவு 12 மணி முதல் ரசிகர்கள் வரிசையில் நின்றனர்.

    கோயம்பேட்டில் இன்று அதிகாலை முதல் ரசிகர்கள் தியேட்டர் முன்பு திரண்டனர். இதனால் ரசிகர்களை கட்டுப்படுத்த அங்கு போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் குவிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் விடிய விடிய காத்திருந்ததை காண முடிந்தது.

    இன்று காலை 6 மணிக்கெல்லாம் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு கொண்டாட்டத்தை தொடங்கி விட்டனர். நடிகர் ரஜினியின் ஹிட் பாடல்கள் ஒலிக்கப்பட்டன. அந்த பாடல்களை கேட்ட ரசிகர்கள் தியேட்டர் முன்பு நடனமாடி லியோவை வரவேற்கும் விதமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெரும்பாலான தியேட்டர்கள் முன்பு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மேள தாளத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. லியோ படம் பார்க்க வந்த ரசிகர்கள் மேள தாளத்துடன் வரவேற்கப்பட்டனர். அவர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

    லியோ படம் இன்று முதல் 5 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கி உள்ளது. 5 காட்சிகளுக்கும் டிக்கெட் முன்பதிவு நிறைவு பெற்று விட்டது. டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் தியேட்டர் முன்பு டிக்கெட் வாங்குவதற்காக அலைந்ததை பார்க்க முடிந்தது.

    அதே சமயத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியில் அதிகாலையிலேயே விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×