என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Karnataka elections"
- கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.
- அதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா:
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 137 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து, கர்நாடக முதல் மந்திரி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான பசவராஜ் பொம்மை, ராஜ் பவனில் கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை இன்று நேரில் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தினை வழங்கினார்.
இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தென்மாநில தேர்தல் முடிவுகள் 2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பமாகி உள்ளது. கர்நாடக மக்களுக்கும், அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன் என தெரிவித்தார்.
- கர்நாடக மாநிலத்தின் சிவமோகா நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.
- பிரசார கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.
கர்நாடக மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் சிவமோகா நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்பட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார். தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்கும் நோக்கில் இந்த பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பிரசார கூட்டம் தொடங்கிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து அனைவரும் எழுந்து நின்றனர். திடீரென குறுக்கிட்ட பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்திவிட்டு, கர்நாடக மாநில கீதத்தை பாட சொன்னார்.
தமிழர்களின் ஆதரவை பெற நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- கர்நாடகத்தில் அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
- சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தருகிறார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தென்னிந்தியாவில் கர்நாடகத்தில் தான் பா.ஜ.க. பலம் வாய்ந்து இருக்கிறது. இதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கர்நாடகத்தில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பிரதமர் மோடிக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை முழுமையாக பயன்படுத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 9-ம் தேதி பிரதமர் மோடி மைசூருவுக்கு வருகை தர உள்ளார். அதன்பிறகு, பிரதமர் மோடி பங்கேற்கும் 20 பேரணிகளை மாநிலத்தில் 6 மண்டலங்களில் நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியால் எப்போதும் ஆட்சிக்கு வரமுடியாது என முதல் மந்திரி பசவராஜ் பொம்மை உறுதிபட தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, முதல் மந்திரி பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சித்த ராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் முதல் மந்திரி கனவில் இருந்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வரமுடியாது. இரு தலைவர்களுமே தங்களுக்கு கிடைக்காத சி.எம். சீட்டுக்காக போராடி வருகிறார்கள்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்களின் முக்கிய நோக்கம் அதிகாரமும், முதல் மந்திரி பதவியும் தான், கர்நாடக மக்களின் நலன் அல்ல என தெரிவித்தார்.
- ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று மணீஷ் திவாரி கூறினார்.
- கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
திருவனந்தபுரம்:
கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து காங்கிரசார் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான மணீஷ் திவாரி கேரளாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ராகுல் காந்தியின் தண்டனை சட்டத்தில் மோசமானது என்றும், அவரது தகுதி நீக்கம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார்.
'ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து அதானி குழுமம் தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. எனவே, மேல்முறையீடு செய்ய அவசரம் இல்லை. அவசர அவசரமாக அவரை தகுதி நீக்கம் செய்து, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தை பாஜக அரசு காலி செய்யும்படி கூறியது. இதிலிருந்து அவர்களின் கெட்ட எண்ணம் தெரிகிறது' என்றும் மணீஷ் திவாரி கூறினார்.
அப்போது கர்நாடக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திவாரி, காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.
கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 2024ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதும் தேர்தல் என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்பே, காங்கிரஸ் கட்சி முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணியை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- இந்த சோதனையின்போது சந்தேகத்திற்கு உரிய எதுவும் கண்டறியப்படவில்லை
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரது காரை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த சோதனையின்போது சந்தேகத்திற்கு உரிய எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், சோதனைக்குப் பிறகு முதலல்வர் தனது பயணத்தைத் தொடர்ந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
2008-ம் ஆண்டு ஜூன் மாதம் எடியூரப்பா இரண்டாவது நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்தார். அப்போது அவரது ஆட்சி நீடிக்க 3 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்பட்டது. “ஆபரேஷன் கமலா” திட்டத்தின்படி எடியூரப்பா அந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் மிக எளிதாக வெற்றி பெற்றார். 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் எடியூரப்பாவை மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி அப்போதைய (காங்கிரஸ்) கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டார். 18 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் எடியூரப்பாவுக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறியதைத் தொடர்ந்து இந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது.
அப்போது, தற்போதைய தற்காலிக சபாநாயகர் போப்பையா தான் சபாநாயகராக இருந்தார். அவர் அதிரடியாக 11 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், 5 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை தகுதி இழக்க செய்து உத்தரவிட்டார். பிறகு குரல் ஓட்டெடுப்பு மூலம் ஓட்டெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றதாக அறிவித்தார். 2010-ம் ஆண்டு அக்டோபரில் மீண்டும் ஒரு தடவை நம்பிக்கை ஓட்டெடுப்பில் எடியூரப்பா வெற்றி பெற்றார்.
ஆக இதுவரை 4 தடவை நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்தித்த எடியூரப்பா 3 தடவை வெற்றி பெற்றார். ஒரே ஒரு தடவைதான் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் 5-வது தடவையான இன்று அவருக்கு வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வியைத் தழுவுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.#KarnatakaElections2018 #yeddyurappa
கர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பா.ஜனதா ஆட்சி அமைத்துள்ளது.
அதற்கு 104 எம்.எல். ஏ.க்களே உள்ளனர். மெஜாரிட்டிக்கு இன்னும் 8 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது.
2 சுயேட்சைகளில் ஒருவரான சங்கர் காலையில் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் மாலையில் காங்கிரசை ஆதரிப்பதாக பல்டி அடித்தார். இப்போது இரு சுயேச்சைகளுமே காங்கிரஸ் பக்கம் சாய்ந்து விட்டனர். இதனால் காங்கிரசின் பலம் 78-ல் இருந்து 80 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே எதிர் அணியில் இருந்து 8 எம்.எல்.ஏ.க் களின் ஆதரவைப் பெற பா.ஜனதா மறைமுகமாக குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார். இதற்காக வருமான வரித்துறை சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், 3 ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க்களும் மாயமாகி விட்டதாக பெங்களூரில் தகவல் பரவியது. இதனால் காங்கிரஸ், ஜே.டி.எஸ். வட்டாரத்தில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து எம்.எல். ஏ.க்களுடன் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேரம் பேசுவதை தடுக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் நேற்று பகலில் பஸ்கள், கார்களில் அழைத்துச் செல்லப்பட்டு ராமநகரம் அருகே பிடதியில் உள்ள கோல்டன் ரிசார்ட் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
ஜே.டி.எஸ். எம்.எல்.ஏ.க் கள் பெங்களூரில் கவர்னர் மாளிகை அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களை பாதுகாக்கும் பொறுப்பு முன்னாள் மந்திரி டி.கே.சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி மேல்- சபை தேர்தலின் போது கட்சி தாவாமல் இருக்க குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இந்த கோல்டன் ரிசார்ட் விடுதியில்தான் தங்க வைக்கப்பட்டனர்.
அபபோது மந்திரியாக இருந்த சிவகுமார்தான் எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பொறுப்பை கவனித்தார். இதற்காக சிவகுமார் வீடு - அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.#KarnatakaElections2018 #BJP #Congress #JDS
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்