என் மலர்
நீங்கள் தேடியது "Karungal murder"
- பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன.
- சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.
நாகர்கோவில்:
கருங்கல் அருகே உள்ள மாங்கரை தோப்புவிளை பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 24), எலக்ட்ரீசியன். இவர் கடந்த 16-ந்தேதி வேலைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அங்குள்ள காட்டாற்று குளத்தில் சஜின் பிணமாக கிடந்தார்.
அவரது உடலை போலீ சார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த சஜின் உடலில் காயங்கள் இருந்தன. எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறினார்கள்.
இது தொடர்பாக கருங்கல் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்ற னர். இந்த நிலையில் சஜினின் உறவினர்கள் இன்று காலை கருங்கல்-தொலையா வட்டம் சாலையில் மாங்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை வாங்குவோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கருங்கல் அருகே பூடேற்றி கொசவன்விளையை சேர்ந்தவர் சபரிமுத்து (வயது 65). கூலி தொழிலாளி.
பூடேற்றி காஞ்சிறாங்கோட்டு விளையை சேர்ந்தவர் தொபியாஸ் (47). கூலி தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு சபரிமுத்து பக்கத்தில் உள்ள ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சபரிமுத்துவை வழிமறித்து தொபியாஸ் தகராறில் ஈடுபட்டார். அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த தொபியாஸ் அந்த பகுதியில் இருந்த கல்லால் சபரிமுத்துவை முகத்தில் சரமாரியாக தாக்கினார். இதில் முகம் சிதைந்து பலத்த காயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கருங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பிணமாக கிடந்த சபரி முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொபியாசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தொபியாஸ் கொலை நடந்த போது குடிபோதையில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான சபரிமுத்துவின் உடல் பிரேதபரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.