என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karupanadi"

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆண்டு தோறும் கார், பிசானம், பூ மகசூல் என 3 போகம் நெல் விளையும்.
    • கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே கடுமையான வெயில் தற்போது வாட்டி வதைத்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆண்டு தோறும் கார், பிசானம், பூ மகசூல் என 3 போகம் நெல் விளையும்.

    பிரதான அணை

    இதில் நெல் சாகுபடிக்கு நெல்லை மாவட்ட விவசாயிகள் நம்பி இருக்கும் பிரதான அணையாக பாபநாசம் அணை உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் குறைந்த பட்சம் 60 அடி தண்ணீர் இருந்தாலே விவசாயத்திற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்ணீர் திறக்கப்படும்.

    இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாமிரபரணி ஆறு வழியாக பாசனத்திற்கு பயன்படுத்தப் படுகிறது. இதன் மூலம் சுமார் 90 ஆயிரம் ஏக்கர் வரையிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இது தவிர 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை மூல மாகவும் விவசாயம் நடை பெறும். அணை கொள்ளளவு 100 அடியை எட்டும் போது சுழற்சி அடிப்படையில் ரீச்சுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயம் நடைபெறும். இதை தவிர இந்த தண்ணீர் மூலமாக மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மழை அளவு வெகுவாக குறைந்து விட்டது.

    குளங்கள் வறண்டன

    கடந்த ஆண்டு நெல்லை மாவட்ட அணைகளில் 62.10 சதவீதம் நீர் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தற்போதைய நிலவரப்படி 29.30 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த மாதம் இயல்பான மழை அளவை விட 48.32 சதவீதம் குறைவாக மழை பெய்து உள்ளது.

    இதன் காரணமாக பெரும்பாலான குளங்கள் வறண்டு விட்டன. கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே கடுமையான வெயில் தற்போது வாட்டி வதைத்து வருகிறது.இதனால் அணைகளின் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்து வருகிறது.

    பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்மட்டம் சராசரியாக தினந்தோறும் 1½ அடி முதல் 3 அடி வரை குறைந்து வருகிறது.

    தென்காசி

    இன்றைய நிலவரப்படி அணையில் 54.70 அடி நீர் இருப்பு உள்ளது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையில் 16.75 அடியும், 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணையில் 16.25 அடி நீரும் மட்டுமே இருப்பில் உள்ளது.

    இதே போல் தென்காசி மாவட்டத்தில் கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவி நயினார் அணைக்கட்டுகள் மூலமாக விவசாயம் நடந்து வருகிறது.

    இந்நிலையில் அங்கும் அணைகள் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மாவட்டத்தின் மிக பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை வறண்டு விட்டது.

    கருப்பாநதி அணையும் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடனா மற்றும் ராமநதி அணைகளில் நீர் இருப்பு பாதியாக குறைந்து உள்ளது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    ×