என் மலர்
நீங்கள் தேடியது "Kaundappadi area"
- இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன.
- தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை, காஞ்சி கோவில் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்க ளாகவே பட்டிக்குள் இருக்கும் ஆடுகளை தெரு நாய்கள் கடித்துக் கொன்று வருவது தொடர் கதையாகி வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன.
இதையடுத்து நாய்களை கட்டுப்படுத்த கோரியும், உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தொடர்ந்து தெரு நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த நிலையில் கவுந்தப் பாடி அருகே கோழிப் பண்ணைக்குள் புகுந்து 100 கோழிகளை தெரு நாய்கள் கொன்றுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த குட்டி பாளையத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம்.
இவர் அதேபகுதியில் சொந்தமாக கோழிப் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். கோழிப் பண்ணைகளில் ஆயிரக்கணக்கான கோழிகளை வளர்த்து வருகிறார்.
கோழிப்பண்ணை சுற்றி கம்பி வலைகள் அமைத்து அதில் கோழிகளை வளர்த்து வந்தார்.இந்நி லையில் சோம சுந்தரம் கோழிப் பண்ணைக்குள் தெரு நாய்கள் கூட்டம் திடீரென புகுந்தது.
இதை தொடர்ந்து அந்த தெரு நாய்கள் அங்குள்ள கம்பி வலைகளை கடித்து உள்ளே புகுந்து 100-க்கும் மேற்பட்ட கோழிகளை கடித்துக் கொன்றுள்ளது. கோழிகள் அலறல் சத்தம் கேட்டு வந்த சோமசுந்தரம் அங்கு 100 கோழிகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது சோமசுந்தரம் இறந்த கோழிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதேபோல் கவுந்தப்பாடி அடுத்த மஜரா பாப்பாங் காட்டூர், பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் செந்தில் குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அதிகாலை 4 ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்றுள்ளது. இது தொடர்பாகவும் கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாகவே எங்கள் பகுதியில் தெரு நாய்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன. தற்போது கோழிப் பண்ணைக்குள் புகுந்து 100 கோழிகளை கொன்று உள்ளது. இதேப்போல் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளையும் கொன்று உள்ளது.
தொடர்ந்து தெரு நாய்கள் அட்டகாசம் செய்து வருவ தால் எங்களுக்கு ஒரு வித அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாங்கள் வாழ்வா தாரத்தை இழந்து தவித்து வருகிறோம். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் இறந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- மைக்ரோ நுண்ணூட்ட கலவையை டிரோன் மூலம் தெளிக்கப்பட்டது.
- விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி பொம்மன்பட்டி பிரமாண்டியூர் பகுதியை சேர்ந்த விவசாயி செங்கோ ட்டையன். இவர் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார்.
தற்போது கரும்பு பயிர் 60 நாள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பயிர் வளர்ச்சி அடையவும், அதிகமாக மகசூல் பெறவும் மைக்ரோ நுண்ணூட்ட கலவையை டிரோன் மூலம் தெளிக்கப்பட்டது.
இதனை சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.
மேலும் விவசாயி செங்கோட்டையன் இதுகுறித்து கூறும்போது:- கரும்பினுடைய வளர்ச்சிக்கு இந்த மைக்ரோ நுண்ணூ ட்டக் கலவையை பயிர்கள் மீது தெளித்தால் பயிர்கள் நன்கு வளர்ச்சி அடையும் மற்றும் அதிக மகசூல் கிடை க்கும்
மேலும் மண்ணில் உள்ள நுண்ணூட்ட பற்றாக்குறை வினால் இவை பயன்படுத்த வேண்டி உள்ளது. சராசரி யாக ஒரு முறை இந்த டிரோன் மூலம் நுண்ணூ ட்டத்தை தெளிக்க ஒரு ஏக்கருக்கு சராசரி ரூ.900 செலவாகிறது. இருந்தும் பயிர்களின் வளர்ச்சிக்காக இதை செய்ய வேண்டி உள்ளது என்றார்.