என் மலர்
நீங்கள் தேடியது "Kejriwal"
- மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது
- அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அதேவேளையில், டெல்லி மாநில முதல்வராக இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி, ஊழல் இல்லாத ஆட்சியைக் கொடுப்போம் என்பதை வலியுறுத்தி ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி. இந்த கட்சியின் துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா ஜாமின் பெற முடியாத நிலையில், ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
துணை முதல்வர் இருந்தவர் ஜெயிலில் உள்ளார். ஒருவேளை முதல்வரான கெஜ்ரிவாலும் ஜெயிலுக்கு சென்றால்? அரசை வழி நடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி மாற்றுத்திட்டம் வைத்திருக்கும்.
இதுதொடர்பாக டெல்லி மாநில மந்திரி சவுரப் பர்த்வாஜ்யிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூறுகையில் "மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்ந்து ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியாக ஆம் ஆத்மி கட்சியை தண்டிப்பதற்கான சதிச் செயலாகும்.
ஒருவேளை அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் தற்போதைய நிலையில், மாற்று திட்டம் குறித்து எனக்கு ஏதும் தெரியாது. அதுபோன்று ஒரு ஆலோசனை நடைபெற்றதாக நான் நினைக்கவில்லை. கெஜ்ரிவால் எங்களுடைய தலைவர். அவருடைய உத்தரப்படி செயல்படுவோம்'' என்றார்.
- மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில் கெஜ்ரிவாலுக்கு சம்மன்
- சிபிஐ கடந்த ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தியிருந்தது
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை கடந்த திங்கட்கிழமை சம்மன் அனுப்பியிருந்தது. அதில், இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு விசாரணைக்காக வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை, 11 மணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகம் சென்று அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு எங்கள் கட்சியை அழிக்க நினைக்கிறது என ஆம் அத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ஒருவேளை கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவித்துள்ளது.
டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கும் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஐ, கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது முதன்முறையாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த இருக்கிறது.
- சம்மன் அனுப்பியது சட்டவிரோதம்
- அரசியல் உள்நோக்கம் கொண்டது
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. கடந்த திங்கட்கிழமை அனுப்பிய சம்மனில், இன்று அலுவலகம் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், அரவிந்த கெஜ்ரிவால் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் விசாரணைக்குப்பின் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியிருந்தது.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும், அமலாக்கத்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனக்கு அனுப்பிய சம்மனை திரும்பப் பெற வேண்டும் என்றும், சம்மன் அனுப்பியது சட்ட விரோதம் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டதும் என்றும், பா.ஜனதாவின் விருப்பத்தின் அடிப்படையில் அனுப்பப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆஜராகாத நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- நாம் மக்கள் பணியை வெற்றிகரமாக செய்து முடிக்காமல் இருந்திருந்தால்,
- மக்களுக்கு எந்தவிதமான நன்மைகள் செய்யாமல் இருந்திருந்தால் நமது கட்சியின் தலைவர்கள் ஜெயிலுக்கு சென்றிருக்கமாட்டார்கள்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு மற்றும் 12-வது தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாம் மக்கள் பணியை வெற்றிகரமாக செய்து முடிக்காமல் இருந்திருந்தால், மக்களுக்கு எந்தவிதமான நன்மைகள் செய்யாமல் இருந்திருந்தால், நமது கட்சியின் தலைவர்கள் ஜெயிலுக்கு சென்றிருக்கமாட்டார்கள். ஒவ்வொருவரும் அவர்களது குடும்பத்தினருடன் சந்தோசமாக இருந்திருப்பார்கள்.
10 ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி 1350 கட்சிகளில் 3 இடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டு கட்சிகள் நாட்டை 75 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளன. அவர்கள் எளிதில் அதிகாரித்தை விட்டுவிட மாட்டார்கள். நாம் போராட்டத்தை சந்தித்து வருகிறோம் என நினைக்கிறேன். ஆனால், அதற்காக நாம் வருத்தப்பட தேவையில்லை.
இன்று சிறையில் இருக்கும் நம்முடைய ஐந்து தலைவர்கள் நம்முடைய ஹீரோக்கள். அவர்களுக்காக மிகவும் பெருமைப்பட வேண்டும். நான் தொடர்ந்து வழக்கறிஞர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். சிறையில் இருந்தால் கூட நம்முடைய தலைவர்களின் ஸ்பிரிட் உயர்வாக இருப்பது சிறந்த விசயம்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
- டெல்லி அரசின் மதுபான கொள்கை மோசடி புகார் தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு சம்மன்.
- இன்று 3-வது முறையாக அமலாக்கத்துறையின் சம்மனை கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து துணை முதல்வர் உள்ளிட்ட மந்திரிகளிடம் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் ஜாமின் கிடைக்காததால் டெல்லியின் முக்கிய மந்திரிகள் சிறையில் உள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது.
இரண்டு முறை சம்மன் அனுப்பியபோது, இரண்டு முறையும் அவர் புறக்கணித்திருந்தார். இன்று ஆஜராகும்படி 3-வது முறையாக சம்மன் அனுப்பியிருந்தது. 3-வது முறையும் இன்று ஆஜராகாமல் புறக்கணித்துள்ளார்.
இந்த நிலையில் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூணவல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இன்று மேலும் ஒருமுறை அமலாக்கத்துறையின் 3-வது சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார். அங்கே ஏதோ மறைக்கப்படுகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இல்லையெனில் குற்றவாளி போன்று அவர் ஏன் மறைய வேண்டும். நீதிமன்றங்கள் மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஜாமின் வழங்கவில்லை.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை இடத்த மத்திய அமைப்பு முடிவு.
- அமலாக்கத்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகவில்லை.
டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியுடம் அவர் ஆஜராகவில்லை. நேற்று 3-வது முறையாக ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்த வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என டெல்லி மாநில மந்திரி ஆதிஷி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் "நாளை (இன்று) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி மந்திரி ஆதிஷி
அதிஷியின் எக்ஸ் பக்க பதவி டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சிபிஐ சுமார் 9 மணி நேரம் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியது. இருந்த போதிலும் இந்த வழக்கில் அவரை குற்றவாளி என சேர்க்கவில்லை. நவம்பர் 2-ந்தேதி மற்றும் டிசம்பர் 21-ந்தேதிகளில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்து. நேற்று 3-வது முறையாக ஆஜரான சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மூன்று முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
- கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்ததாக டெல்லி மந்திரி ஆதிஷி தெரிவித்திருந்தார்.
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநிலத்தின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகும்படி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. நேற்றோடு 3-வது முறையாக சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இந்த நிலையில்தான் அவரது வீட்டில் சோதனை நடத்தி, அதன்பின் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மாநில மந்திரி ஆதிஷி அதிர்ச்சி தகவலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டிற்கு முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவரது வீடு இருக்கும் பாதை மூடப்பட்டு அங்கு வசிப்பவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆதிஷி கூறியதுபோல் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
- அவரது வீட்டில் இன்று சோதனை நடத்தப்படலாம் என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு.
டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என அக்கட்சியின் மந்திரி ஆதிஷி தெரிவித்திருந்த நிலையில், டெல்லி மாநில அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜேஸ்மின் ஷா கூறியதாவது:-
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அனுப்பப்பட்ட அனைத்து சம்மன்களும் சட்டவிரோதமானது. இதில் இருந்து பா.ஜனதா மக்களவைக்கு முன் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து ஆம் ஆத்மி கட்சியை ஒழிக்க நினைக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு ஒத்துழைக்க அவர் தயாராக இருக்கிறார்.
நேற்று இரவு முதல் எங்களுக்கு கிடைத்த செய்தி என்னவென்றால், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்படுவார் என்பதுதான்.
எங்கள் தலைவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஒன்று நன்றாக புலப்படும். மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டபோது, பா.ஜனதா அவர் கைது செய்யப்படுவார் என்றது. ஆனால் அமலாக்கத்துறை அதை மறுத்தது. இறுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல்தான் சஞ்சங்க சிங்கிற்கு ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரமாக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என பா.ஜனதா கூறி வருகிறது.
இவ்வாறு ஜேஸ்மின் ஷா தெரிவித்துள்ளார்.
- விசாரணைக்கு அழைப்பது போன்று அழைத்து அதன்பின் கைது செய்ய அவர்கள் விரும்புகிறார்கள்.
- நான் எந்தவித ஊழலும் செய்யவில்லை. பா.ஜனதாவில் சேராதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனையில் ஈடுபட்டு, அதன்பின் கைது செய்ய இருக்கிறார்கள் என்ற செய்தி டெல்லியில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இதனையொட்டி அவரது வீட்டு முன் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எந்தவிதமான ஊழலும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. பா.ஜனதா என்னை கைது செய்ய விரும்புகிறது. என்னுடைய மிப்பெரிய சொத்து என்னுடைய நேர்மை. அவர்கள் அதை சிதைக்க பார்க்கிறார்கள்.
அவர்கள் எனக்கு அனுப்பிய சம்மன் சட்ட விரோதமானது என்று என்னுடைய வழக்கறிஞர் என்னிடம் தெரிவித்தார். பா.ஜனதாவின் எண்ணம் என்னிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதல்ல. மக்களவை தேர்தலுக்கு என்னை பிரசாரம் செய்ய விட்டுவிடக் கூடாது என்பதுதான்.

விசாரணைக்கு அழைப்பது போன்று அழைத்து அதன்பின் கைது செய்ய அவர்கள் விரும்புகிறார்கள். நான் எந்தவித ஊழலும் செய்யவில்லை. பா.ஜனதாவை எதிர்த்ததனால் எங்கள் தலைவர்கள் சிறையில் உள்ளனர். மத்திய அமைப்புகள் மூலம் மிரட்டி கைது செய்ய பா.ஜனதா முயற்சிக்கிறது.
நாங்கள் எந்த தவறும் செய்யவில்ல. இதனால் பா.ஜனதாவை கண்டு பயமில்லை. பா.ஜனதாவில் சேராதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் எனக்கு எதிராக அமலாக்கத்துறை எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
- மூன்று முறை கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், 4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்.
- தனக்கு சம்மன் அனுப்பப்படுவது சட்டவிரோதம் என கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வருகிறார்.
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில், அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.
இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை மூன்று முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது. அதை திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
கடந்த 3-ந்தேதி 3-வது முறையாக சம்மன் அனுப்பியபோது அவர் ஆஜராகவில்லை. இதனால் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, கைது செய்யப்படலாம் என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறை அவ்வாறு செய்யவில்லை.
இந்த நிலையில் தற்போது 4-வது முறையாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற 18-ந்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த முறையும் அவர் ஆஜராவாரா? என்பது தெரியவில்லை. தன்னை கைது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுகிறது என கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
- ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே மிச்சமாகும்.
நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை சேதப்படுத்தும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
அது தொங்கு சட்டமன்றத்தை சமாளிக்க முடியாது, மேலும் கட்சித் தாவல் எதிர்ப்பை தீவிரமாக ஊக்குவிக்கும் என்று ஆம் ஆத்மி கூறியது.
இதுதொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, பாராளுமன்ற ஜனநாயகம், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நாட்டின் கூட்டாட்சி அரசியல் ஆகியவற்றின் கருத்தை சேதப்படுத்தும்.
தொங்கு சட்டசபையை சமாளிக்க முடியாமல், கட்சித் தாவல் எதிர்ப்பு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை வெளிப்படையாக விலைக்கு வாங்கும் நிலைமை இருக்கும். அது தீவிரமாக ஊக்குவிக்கும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் செலவு மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே.
"குறுகிய நிதி ஆதாயங்கள்" மற்றும் நிர்வாக வசதிக்காக அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளை தியாகம் செய்ய முடியாது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்ட விரோதம் என அரவிந்த் கெஜ்ரிவால் தொடரந்து குற்றம்சாட்டி வருகிறார்.
- இருந்த போதிலும் அமலாக்கத்துறை தொடந்து சம்மன் அனுப்பி வருகிறது.
டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதனால் அவருக்கு சம்மன் அனுப்பினர். அந்த சம்மனில் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
சம்மனை வாங்க மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்டவிரோதம். இந்த சம்மனை அமலாக்கத்துறை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். மேலும், முதல் சம்மனை திருப்பி அனுப்பினார். அதன்பின் தொடர்நது இரண்டு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
சில வாரங்களுக்கு முன்னதாக 4-வது முறையாக சம்மன் அனுப்பியது. அப்போதும் ஆஜராக நிலையில், அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மியின் டெல்லி மாநில மந்திரி பரபரப்பான தகவலை வெளியிட்டார். ஆனால் சோதனையும் நடத்தப்படவில்லை. கைதும் செய்யப்படவில்லை.
இந்த நிலையில்தான் 5-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில் வருகிற 2-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராகுவாரா? என்பது சந்தேகம்தான்.