என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kerala southwest monsoon"
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது கோடை வெயில் வாட்டுகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வாட்டி வதைத்த வெயில் கடந்த 4-ந்தேதி முதல் மேலும் அதிகரித்தது. தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி பதிவானது.
வழக்கமாக கோடையில் கோடை மழை பெய்யும். இம்முறை எதிர்பார்த்த அளவுக்கு கோடை மழை பெய்யவில்லை. அக்னி நட்சத்திரமும் வருகிற 29-ந்தேதி முடிகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த ஓரிரு நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம்.
தென்மேற்கு பருவமழை கேரளாவின் அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இருந்து தொடங்கும். அங்கிருந்து வீசும் காற்றும், மழை மேகமும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியை காட்டும்.
ஜூன் 4-ந்தேதி முதல் 6-ந்தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் இதன் மூலம் இந்தியாவின் தென்மாநிலங்களில் மழை பொழிவு ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தை விட குறைவாகவே பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் போது தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் மழை பெய்யும். குறிப்பாக நெல்லை, குமரி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்யும் முன்பே வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த ஓரிரு நாட்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளாவில் கடந்த 8-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 11 நாட்கள் இடைவிடாமல் மழை பெய்தது. பேய் மழை காரணமாக கேரளாவில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டது. 400 பேர் வரை பலியானார்கள். கேரளாவில் மழை ஏற்படுத்திய சேதம் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சேதத்தில் இருந்து மீண்டு வர மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.600 கோடி நிதி வழங்கியது.
இதுவரை முதல்-மந்திரியின் நிவாரண நிதியில் ரூ.714 கோடி சேர்ந்துள்ளது. இதில், வங்கிகள் மூலம் மட்டும் ரூ.132.62 கோடியும், பேடிஎம் மூலம் ரூ.43 கோடியும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மூலம் ரூ.518.24 கோடியும் நிதி திரண்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள முதல்-மந்திரியின் அலுவலகத்திலும் ஏராளமானோர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். இங்கு மட்டும் ரூ.20 கோடிக்கு நிதி வசூல் ஆகி உள்ளது. கடந்த விடுமுறை நாட்களில் வசூலான தொகையையும் சேர்த்தால் இந்த நிதி இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
முதல்-மந்திரியின் வெள்ள நிவாரண நிதிக்கு நன்கொடையாக திரண்டுள்ள நிதி, மத்திய அரசு வழங்கிய ரூ.600 கோடி நிதியை காட்டிலும் 20 சதவீதம் கூடுதலாகும். #KeralaFloods #KeralaFloodRelief #KeralaReliefFund
ஈரோடு, ஆக. 27-
கேரளாவில் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதியிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
அரசியல் கட்சியினர் தன்னார்வ தொண்டு அமைப்புகள் என பாகுபாடின்றி கேரள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர் காங்கிரஸ் கட்சி சார்பிலும் கேரளா மக்களுக்காக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.
ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சென்னிமலை ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களுக்காக ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட பொருளாளர் ரவி மாவட்ட பொதுச் செயலாளர் சீதாபதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் லோகேஸ் வரன், மனித உரிமைகள் துறையின் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், செயற்குழு உறுப்பினர் ஜனனிசதிஷ், ஆரிப்அலி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். * * * நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தை முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்த காட்சி. தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் உள்பட பலர் அருகில் உள்ளனர்.
ஈரோடு மாவட்ட கூட்டுறவுத் துறை சார்பில் கேரளா மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரூ.10 லட்சத்து 71 ஆயிரத்து 966 மதிப்பீட்டிலான உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு லாரியில் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது. அந்த வாகனத்தை ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.பார்த்திபன் அனுப்பி வைத்தார்.
ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர்- பணியாளர் அலுவலர் மீனா அருள், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளர்- முதன்மை வருவாய் அலுவலர் அழகிரி, ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணைப் பதிவாளர்- மேலாண்மை இயக்குனர் கந்தராஜா மற்றும் கூட்டுறவுதுறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
கேரளாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை கொட்டித்தீர்த்து உள்ளது. இதனால் கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளக்காடாக மாறியது. நிலச்சரிவு, சாலைகள் துண்டிப்பு, மின்சார தடை, குடிநீர் தட்டுப்பாடு என்று பெரும் பாதிப்பை கேரள மக்கள் சந்தித்துள்ளனர்.
கேரள மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்று அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இதை தொடர்ந்து கேரளாவுக்கு உதவிகள் குவிந்து வருகிறது. மத்திய அரசு சார்பில் முதல்கட்டமாக ரூ.600 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதிஉதவி வழங்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. பினராயி விஜயனும் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். இந்த நிதியை பெறுவதில் சட்ட சிக்கல் இருப்பதால் ஐக்கிய அரசு அமீரகத்தின் ரூ.700 கோடி தங்களுக்கு வேண்டாம் என்று மத்திய அரசு அறவித்தது.
இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரக தூதர் கேரளாவுக்கு ரூ.700 கோடி வழங்குவதாக அந்த நாடு கூறவில்லை என்று தெரிவித்ததால் இந்த நிதிஉதவி விவகாரத்தில் குழப்பம் ஏற்பட்டது. கேரளாவுக்கு வழங்கப்படும் நிதியை மத்திய அரசு தடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஜப்பான் உள்பட பல வெளிநாடுகள் அளிக்க முன்வந்துள்ள நிதிஉதவியை சட்டத்தை காரணம் காட்டி மத்திய அரசு தடுப்பதாகவும் அந்த நிதிஉதவிகள் கேரளாவுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் கேரள முன்னாள் மந்திரி பினோய் விசுவம் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அந்த மனுவில் நாட்டில் பேரிடர் ஏற்படும் போது வெளிநாடுகளில் இருந்து நிவாரண உதவிகள் பெறுவதற்கு நிவாரண சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் மத்திய அரசு பல காரணங்களை கூறி கேரளாவுக்கு வரும் வெளிநாட்டு நிதிஉதவிகளை தடுக்க முயல்கிறது. அந்த நிதிஉதவிகள் கேரள மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் நாளை முதல் 2 நாட்களுக்கு மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. பெரு மழைக்கு பிறகு இயல்பு நிலைக்கு சிறிது, சிறிதாக திரும்பிக் கொண்டிருக்கும் கேரள மக்களுக்கு இது பீதியை ஏற்படுத்தி உள்ளது. #KeralaFloods
கேரள மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் 370 பேர் பலியானார்கள். ரூ.19,500 கோடிக்கு இழப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய மந்திரியுமான பசன்கவுடா பட்டில் யட்னால் சர்ச்சை அளிக்கும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்து உணர்வுகள் தூண்டி விடப்பட்டால் மதம் தண்டிக்கும். உதாரணமாக கேரளாவில் என்ன நடந்தது என்பதை பாருங்கள் அந்த மாநில மக்கள் நேரிடையாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்தனர். கடந்த ஆண்டு இதே மாதம் தான் அங்கு மாட்டு இறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. கேரளா வெள்ளத்துக்கு இதுதான் காரணம்.
கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரி ஆவார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மாடு படுகொலை தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KeralaFloods #KeralaFloods2018
கன மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உருக்குலைந்து போன கேரள மாநிலம் மெதுவாக தனது இயல்பு திரும்பி வருகிறது. கேரளாவை சீரமைப்பதற்கு நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.கேரள முதல் அமைச்சர் நிவாரணை நிதிக்கு பலவேறு தரப்பினர் நிவாரன நிதி அனுப்பி வருகின்றனர்.
நாடுமுழுவதும் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கபட்டு இருந்த 10 லட்சத்திற்கும் அதிகமான பேர் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். கடந்த சில நாட்களில் 5 லட்சம் பேர் தங்கள் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.
நேற்று இரவு வரை முதல்வர் நிவாரண நிதியில் ரூ.539 கோடி ரூபாய் சேர்ந்து உள்ளது. #KeralaFloods #KeralaFloodRelief
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி பூர்வீக வைகை பாசன பகுதியாகும். மழை பெய்து வைகை ஆற்றில் தண்ணீர் வெள்ளம்போல் வரும்போது தான் கண்மாய்களில் தண்ணீரை தேக்க முடியும்.
வைகை அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்டு 5 நாட்கள் ஆகியும் ஒரு சொட்டு தண்ணீர் கூட மானாமதுரை பகுதி வந்து சேரவில்லை.
வைகையில் வரும் தண்ணீரை நம்பி இடைக் காட்டூர், கட்டிகுளம், கீழப்பசலை ஆகிய கிராம விவசாயிகள் கால்வாய் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு தண்ணீர் வருகைக்காக காத்து இருக்கின்றனர்.
வைகை ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் உயர மானாமதுரை நகர் பகுதியில் உள்ள ஆதனூர் என்ற இடத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அதை சுற்றியும் வைகை ஆற்றிலும் சீமை கருவேல் மரங்களை அகற்றாததால் வறண்டு தடுப்பணை கட்டியும் வீணாக உள்ளது.
குடிநீர் திட்டங்களில் உள்ள நீர் ஊற்றுகளும் வறண்டதால் மானாமதுரை பகுதியில் குறைந்த அளவே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வைகையில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டு பூர்வீக பாசன பகுதியாக உள்ள மானா மதுரைக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கம்பம்:
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி வரை தேக்கப்பட்டு வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 15-ந் தேதி அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து உபரி நீர் இடுக்கி அணைக்கு திருப்பி விடப்பட்டது.
பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணமாகத்தான் இடுக்கி அணையில் நீர் மட்டம் உயர்ந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 139 அடியாக குறைக்க வேண்டும் என கேரள அரசு மத்திய துணைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை குறைக்கும் பிரச்சினையில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாடை கொண்டிருப்பதாகவும், எனவே அணையின் நீர் மட்டத்தை குறைக்க விட மாட்டோம் எனவும் தெரிவித்தனர். மேலும் நீர் மட்டத்தை குறைத்தால் கேரளாவுக்குதான் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறிய கருத்துக்கள் விபரம்:-
அப்பாஸ் (5 மாவட்ட பெரியாறு, வைகை அணை பாசன விவசாயிகள் சங்க தலைவர்):-
கேரளாவில் 82 அணைகள் உள்ளன. ஆனால் இந்த அணைகளில் தண்ணீர் நிரம்பினால் அதனை தடுத்து நிறுத்தக்கூடிய வகையில் எங்கும் தடுப்பணைகள் கட்டப்படவில்லை. பெரியாறு அணை பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் கேரள அரசு வைத்த அனைத்து வாதங்களையும் பொய்யாக்கும் வகையில் அணை பலமாக இருக்கிறது என்று உறுதி செய்தபிறகுதான் 142 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதி அளித்தது. பெரியாறு அணைக்கு கேரளாவில் உள்ள ஹெவி, பிளச்சிங், ஆண்டோரி, சபரிகிரி, பாம்பனாறு, கள்ளாறு, ஆணையிரங்கல் உள்ளிட்ட பல்வேறு அணைகளில் இருந்து தண்ணீர் வந்தது. கேரள அரசு இந்த வழித்தடத்தை மாற்றி இந்த தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணையில் சேரும் வகையில் மாற்றி விட்டது.
பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டிய பிறகு அங்கிருந்து 20 ஆயிரம கன அடி தண்ணீர் மட்டுமே இடுக்கி அணைக்கு திருப்பி விடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியதால் செருதோணி வழியாக 1 லட்சத்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் எர்ணாகுளம், கொச்சி, ஏரியமங்கலம் ஆகிய பகுதிகளை சூழ்ந்ததால் வெள்ள பாதிப்பு அதிகரித்தது. பெரியாறு அணையில் 1 அடி நீர் மட்டம் உயர்ந்தால் 25.5 சதுர கி.மீ பரப்பளவில் தான் தண்ணீர் உயரும். ஆனால் இடுக்கி அணையில் 1 அடி நீர் மட்டம் உயர்ந்தால் 75 சதுர கி.மீ பரப்பளவுக்கு தண்ணீர் உயரும். பெரியாறு அணையின் நீர மட்டத்தை 139 அடியாக குறைத்தால் அந்த தண்ணீர் முழுவதும் இடுக்கி அணைக்குதான் செல்லும். இதனால் கேரள மக்களுக்குதான் பாதிப்பு ஏற்படும்.
கேரளாவில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும் தமிழகத்தில் இருந்துதான் கோடிக்கணக்கான அளவில் பொதுமக்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் வெள்ளம் பாதித்த பகுதிக்கு சென்று அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகின்றனர். படித்த மக்கள் அதிகம் உள்ள கேரளாவில் மக்களிடம் விஷம பிரசாரத்தை தூண்டும் வகையில் அரசியல் வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் உள்ள காங்கிரஸ், பா.ஜ.க. தலைவர்களே இது குறித்து விரிவான விளக்கம் அளித்துள்ளனர். அணைகள் உள்ள பகுதிகளில் நீர் வெளியேறினால் என்ன தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை அரசு எடுக்காததால்தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
செங்குட்டுவன் (தமிழக அனைத்து விவசாய சங்க மாநில துணைச் செயலாளர்):-
முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை குறைக்க நினைப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளா அவமதிக்கும் செயலாகும். அணை பலமாக உள்ளது என்று கூறிதான் உச்சநீதிமன்றம் 142 அடி வரை தண்ணீரை தேக்கலாம் என அனுமதித்து உள்ளது. அதோடு 152 அடி வரை தண்ணீரை வைத்துக் கொள்ளலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
கேரளாவில் உள்ள 82 அணைகள் 8-ந் தேதி திறக்கப்பட்டதால்தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரியாறு அணையில் இருந்து இடுக்கி அணைக்கு ஆகஸ்டு 15-ந் தேதிதான் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரால் எந்த பாதிப்பும் ஏற்பட்டு இருக்காது. கேரள அரசு ஆகஸ்ட் 8-ந் தேதியே அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீரை திறந்து விட்டதால்தான் 15 மாவட்டங்கள் கடும் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.
பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கேரள வாசிகள் ஏராளமானோர் ஆக்கிரமிப்பு விடுதிகள், கடைகள் கட்டியுள்ளனர். ஏற்கனவே 2 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டு தாரை வார்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6500 ஏக்கரை ஆக்கிரமிக்கவே கேரள அரசு இது போன்ற சூழ்ச்சியை செய்கிறது. பேபி அணையை பலப்படுத்த கோரியும், 152 அடி வரை தண்ணீர் உயர்த்த கோரியும் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். நீர் மட்டத்தை 142 அடியில் இருந்து குறைத்தால் தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். #MullaPeriyar #Farmers
நடிகர் விஜய் உத்தரவின் பேரில் விஜய் பங்களிப்புடன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் பத்தன் திட்டா மாவட்டத்திற்கு ரூ.9 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது.
இதில் கோவை மாவட்ட தலைவர் சம்பத் குமார், ராஜ்குமார், மைக்கேல், விஜய் ராஜ், சரவணன், ஸ்டீல் சேவியர், சத்தியமூர்த்தி, சேவியர் பாண்டி, சிவராஜ், ரமேஷ், மாநகர தலைவர் பாபு, விஜய் கோபால், தொண்டரணி தலைவர் விக்கி, மேற்கு நகர அக்பர், குணா, மகேஷ், ஆர்.எஸ்.புரம் அப்பாஸ், முத்துவேல்,
செயற்குழு உறுப்பினர் செந்தில், முஸ்தபா, பாபு, ராஜகோபால், உக்கடம் பகுதி ஞானசேகர், கெம்பட்டி காலனி சந்ரு, சுந்தராபுரம் விக்னேஷ், ரமேஷ், டவுன்ஹால் சதிஷ், நாடார் வீதி கார்த்தி, புலியகுளம் ஜான் டேவிட், மேட்டுப்பாளையம் நகர தலைவர் ரங்கராஜ், முகமது அலி, மேட்டுப்பாளையம் தொண்டரணி அண்ணாமலை, காளிசாமி, காரமடை ஒன்றிய கருப்புசாமி, வீரப்பன், சுபாஷ், முருகேஷ், காரமடை நகர பாத்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாநகரம் மேற்கு மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுமார் 4 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வாகனத்தை மேற்கு மாநகர தலைவர் சுபாஷ், மாநகர செயலாளர் சங்கனூர் பிரேம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவை மேற்கு மாநகர இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர் கேபிள் சீனு, பகுதி செயலாளர் சீனிவாசன், இளைஞரணி செயலாளர் வேலு கவுண்டர், வர்த்தக அணி துணை செயலாளர் கோவிந்தராஜ், நல்லாம்பாளையம் மனோகர், சுந்தர் ஆகியோர் செய்து இருந்தனர்.
கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அந்த மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பெருமழை காரணமாக மாநிலத்தில் உள்ள பெரிய அணைகளான இடுக்கி, பாணாசுரசாகர், செறுதோணி, மலம்புழா உள்பட அனைத்து அணைகளுக்கும் அதிக அளவு நீர் வரத்து இருந்ததால் பாதுகாப்பு கருதி 44 அணைகள் திறந்து விடப்பட்டன. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது.
வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 370 பேர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடு, உடமைகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இயற்கையின் சீற்றம் காரணமாக இந்த பேரிழப்பு கேரளாவுக்கு ஏற்பட்டு உள்ளது.
கேரளாவில் மழை காரணமாக 44 அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளை மாநில அரசு ஒரே நேரத்தில் திறந்துவிட்டது. அணைகளை திறக்கும்போது அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கையை விடுத்திருக்க வேண்டும். ஆனால் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் கேரள அரசு மேற்கொள்ளவில்லை. நள்ளிரவில் கேரள மக்கள் தூங்கிக்கொண்டிருந் தபோது அணைகளை எல்லாம் அரசு திறந்துவிட்டுள்ளது. எனவே இது பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையும் கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு மாநில அரசை குறை கூறி உள்ளார். மாநில அரசின் அலட்சிய போக்கால் இந்த பாதிப்பு ஏற்பட்டு மக்கள் தவிப்புக்கு உள்ளானதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். #KeralaFloods
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்