என் மலர்
நீங்கள் தேடியது "kerla"
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கை.
- கிராமங்களிலும் தண்ணீர் தேங்கியதால் இயல்பு வாழ்க்கை முடக்கம்.
எர்ணாகுளம்:
தொடர் கனமழை காரணமாக கேரள மாநில மத்திய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கொச்சி நகரின் பல பகுதிகளிலும், ஆலப்புழா, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள சில நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் பாதித்த தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் உள்பட கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
எர்ணாகுளம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இடுக்கி மாவட்டம் தொடுபுழா தாலுகாவில் உள்ள குடையாத்தூர் பகுதியில் நிலச்சரிவால் நேற்று வீடு ஒன்று மண்ணில் புதைந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரீடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.