என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerosene Truck"

    • உவரியில் மண்எண்ணை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது.
    • தீயணைப்பு துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திசையன்விளை:

    தூத்துக்குடியில் இருந்து மீன்வளத்துறை மூலம் மீனவர்களின் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணையை ஏற்றிக்கொண்டு இன்று அதிகாலை டேங்கர் லாரி ஒன்று உவரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

    உவரி-குமரி பைபாஸ் ரோட்டில் காரிகோவில் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையின் வளைவில் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மண்எண்ணை சாலையில் ெகாட்டியது.

    இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    தகவல் அறிந்த திசையன்விளை தீயணைப்பு துறையினர் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வெட்டும்பெருமாள் தலைமையில் அங்கு விரைந்து வந்து சாலையில் கொட்டிக்கிடந்த மண்எண்ணையில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

    தொடர்ந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை கிரேன் மூலமாக அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

    ×