என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kilpawani canal"
- கீழ்பவானி வாய்க்காலில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
- தீயணைப்பு துறை வீரர்கள் பயிற்சியை நடத்தினர்.
நம்பியூர்:
நம்பியூர் வட்டம் குருமந்தூர் கிராமம் கோவை மெயின்ரோடு கீழ்பவானி வாய்க்காலில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சியானது நம்பியூர் தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்டது.
நம்பியூர் தாசில்தார் மாலதி முன்னிலையில், நம்பியூர் தீயணைப்புத் துறை ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் பயிற்சியை நடத்தினர்.
இதில் நம்பியூர் துணை தாசில்தார்கள் விஜயகுமார், பரமசிவம், நில வருவாய் ஆய்வாளர் கோகிலாம்பாள், கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கீழ்பவானி வாய்க்கால் பகுதிகளில் மேற்கொள்ளப் பட்டு வரும் புனரமைப்பு பணிகளை தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்திற்குட்பட்ட கூடக்கரை மற்றம் எலத்தூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் கீழ்பவானி திட்டத்தின் கீழ் வாய்க்கால் பகுதிகள் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதை கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது:
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி திட்ட பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்ன சமுத்திரம் பகிர்மானக் கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் பாசனத்திற்காக வருகின்ற 15-ந் தேதி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
புனரமைப்பு பணிகளில் 2 இடங்களில் மட்டும் பணிகளை வேகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த பணிகளும் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
அதேப்போன்று பெரும்பாலான இடங்களில் புனரமைப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் நடைபெற்று வரும் பணிகளும் ஒன்று அல்லது 2 நாட்களுக்குள் முடிக்கப்படும்.
மேலும் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணிகளும் தொடர்ந்து நடைபெறும். மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை தொடர்புடைய அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்கள்.
அதேபோன்று அத்திக்கடவு அவிநாசி திட்டப்பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த பணிகளும் விரைவாக முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது கண்காணிப்பு பொறியாளர் மன்மதன், கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியளார் அருள் அழகன், நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், நம்பியூர் தாசில்தார் மாலதி, அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- பவானி பாசன கால்வாய் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் கீழ்பவானி கால்வாயில் ரூ.720 கோடி மதிப்பில் கான்கிரீட் திட்டம் அமைக்க பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து கான்கிரீட் திட்ட பணிகள் தொடங்க ப்பட்ட இடத்தில் மட்டும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். வரும் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும் என கூறப்பட்டது.
ஆனால் பணிகள் தொடங்கப்பட்ட 11 இடங்க ளுக்கும் மேலாக பொது ப்பணித்துறை மற்றும் கட்டு மான நிறுவனம் கால்வாயின் கரைகளை சேதப்படுத்தி பணிகளை செய்து வருகின்ற னர்.
இந்நிலையில் பணிகளை விரைந்து முடித்து அமைச்சர் மற்றும் அதிகாரி கள் கூறியபடி வரும் 15-ந் தேதி தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட வேண்டும்.
மேலும் கான்கி ரீட் திட்டம் தொடர்பான அரசாணை எண் 276யை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரி க்கையை வலியுறுத்தி கீழ் பவானி பாசன கால்வாய் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர்.
இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் இன்று காலை கீழ்பவானி கால்வாயின் கரையில் 100-க்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இதை தொடர்ந்து அவர்கள் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசாணை 276-யை ரத்து செய்ய வேண்டும். அரசு அளித்த வாக்குறுதியின் படி வரும் 15-ந் தேதி தண்ணீர் திறப்புக்கான ஆணையை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி கீழ்பவானி பாசன விவசாயிகள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
- மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு , திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. வாய்க்காலை புனரமைக்க ஒருத்தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர். அமைச்சர் முத்துசாமி இருதரப்பு விவசாயிகளையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எனினும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.
இந்நிலையில் கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும், விவசாயம் காக்க வேண்டியும், மண் கால்வாயிகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தி அரச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகள் கடை வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டிருந்தனர்.
அதன்படி இன்று காலையில் இருந்து அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியான பிச்சாண்டாம் பாளையம், கருக்கம் பாளையம், வாய்க்கால் மேடு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அரச்சலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக ஆட்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களில் உள்ள மராமத்துப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
புதிதாக வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. வாய்க்காலின் மண் கரை அப்படியே தொடர வேண்டும், கசிவுநீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அரச்சலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- 2 பேரும் வாய்க்காலில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.
- தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினர்.
சத்தியமங்கலம்:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வாகராயாம் பாளையம் பப்பம்பட்டியை சேர்ந்தவர்கள் ராக்கிமுத்து (வயது 45), சிவக்குமார் (35), ராஜேந்திரன் (35).
நண்பர்களான இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் தொழிலா ளர்களாக பணியாற்றி வந்தனர்.
இவர்கள் 3 பேரும் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூருக்கு வந்தனர். இதைதொடர்ந்து அங்குள்ள கீழ்பவானி வாய்க்காலில் ராக்கிமுத்து, சிவக்குமார் ஆகியோர் குளிப்பதற்காக இறங்கினர்.
அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் அவர்கள் 2 பேரும் வாய்க்காலில் மூழ்கி அடித்து செல்லப்பட்டனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கரையில் இருந்த ராஜேந்திரன் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். ஆனால் அவர்களால் வாய்க்காலில் மூழ்கிய 2 பேரை மீட்க முடியவில்லை.
இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசிங் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வாய்க்காலில் இறங்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடினர். இதில் அவர்கள் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ராக்கிமுத்து உடலை பிணமாக மீட்டனர்.
ஆனால் சிவக்குமார் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடினர்.
இதற்கிடையே இரவு 8 மணி ஆனதால் மிகவும் இருட்டாக காணப்பட்டது. இதனால் அவரை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அவரை தேடும் பணியை நிறுத்தினர்.
இந்த நிலையில் இன்று காலை எரங்காட்டூர் பகுதிக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீண்டும் வந்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி சிவகுமாரை 2-வது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுட்டு வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் அவரது உறவினர்கள் என ஏராளமான பொதுமக்கள் 2-வது நாளாக திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான நிலை உருவானது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.09 அடியாக உள்ளது.
- கீழ்பவானி வாய்க்காலுக்கு நீர் 2,200 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.
பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2,47,000 விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2-ம் சுற்று தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.09 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 758 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கீழ்பவானி வாய்க்காலுக்கு முதலில் 500 கன அடி, பின்னர் ஆயிரம் கன அடி, அதன் பின்னர் 1500 கனஅடி, பின்னர் 2 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறந்து விட்ட நிலையில் நேற்று முதல் 2,200 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்பட்டு வருகிறது.
இதுபோல் தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு ஆயிரம் கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் அணையில் இருந்து 3,350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.80 அடியாக உள்ளது.
- கீழ்பவானி வாய்க்காலுக்கு 1300 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது.
ஈரோடு:
105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்வதும் பின்னர் மழை பொழிவு இன்றியும் நிலையற்றத் தன்மையுடன் இருந்து வருகிறது.
இதனால் அணைக்கு ஒருநாள் நீர்வரத்து அதிகரித்தும், ஒரு நாள் நீர்வரத்து குறைந்தும் வருகிறது.
மேலும் தற்போது அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.80 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,312 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு இதுவரை 2,000 கன அடி தண்ணீர் திறந்து விட்ட நிலையில் இன்று 1300 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது.
தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 200 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும் என மொத்தம் 1, 600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- பொதுப்பணித்துறை மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்ட கலெக்டர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்து இந்த ஆண்டு கூடுதல் மகசூல் பெற்று பயன்பெற முன்வர வேண்டும்.
காங்கயம்:
ஈரோடு மாவட்ட நீர்வள ஆதார, கீழ்பவானி பாசன கோட்டம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காங்கயம் கோட்டம் பொதுப்பணித்துறை கீழ்பவானி பாசன கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ள நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு உரிய தண்ணீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுபவர்கள் மற்றும் கால்வாயில் இருந்து டிராக்டர்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து கொண்டு சென்று வேறு பாசனத்திற்கு பயன்படுத்தினாலும் மற்றும் உரிய சம்பா நெல் பயிர் பாசனத்திற்காக திறந்து விடப்படும்தண்ணீரை வேறு விற்பனை உட்பட மற்ற ஏதாவது பயன்பாட்டிற்கு பயன்படுத்தினாலும் சம்பந்தப்பட்டவர்கள் தகவல்கள் குறித்து பொதுப்பணித்துறை மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்ட கலெக்டர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே விவசாயிகள் கீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ள தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்து இந்த ஆண்டு கூடுதல் மகசூல் பெற்று பயன்பெற முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கீழ்பவானி வாய்க்கால் மதகு அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல்கரை ஒதுங்கி இருந்தது.
- இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
சென்னிமலை:
சென்னிமலை அருகே அய்யம்பாளையம் ஒரத்துப்பாளையம் சாலையில் சோளியம்மன் கோவில் அருகே கீழ்பவானி வாய்க்கால் மதகு அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல்கரை ஒதுங்கி இருந்தது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு சென்ற சென்னிமலை போலீசார் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இறந்த மூதாட்டி திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா பாறவலசு பகுதியை சேர்ந்த சுப்பராயன் மனைவி சுந்தரி (64) என்பதும், தற்போது சென்னிமலை அருகே உள்ள நல்லப்பாளி பகுதியில் வசித்து வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்