search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kings"

    • மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது
    • மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது

    இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அன்றைய தினம் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

    டோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கினார். இப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

    இதனையடுத்து, மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இதனால் சென்னை அணி வீரர்கள் சென்னையில் ஊர் சுற்றி பொழுது போக்கினர்.

    இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் கேப்டானான எம்.எஸ்.டோனி நேற்று இரவு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து ரசித்திருக்கிறார். பந்துவீச்சாளர் தீபக் சஹார் உடன் சென்று சென்னை சத்யம் திரையரங்கில் அவர் இப்படத்தை கண்டுகளித்துள்ளார். அப்போது படம் முடிந்து வெளியே வந்த டோனியை பார்த்ததும் ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ஐம்பது கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் தமிழில் பல முன்னணி ஹீரோக்கள் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை திரையில் பார்த்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பெரும்பாண்டி புனித பெரியநாயகி மாதா ஆலயத்தில் “மூன்று ராஜாக்கள் பொங்கல் விழா” நடந்தது.
    • திருப்பலி நிறைவேற்றி திருவிருந்து கொடுத்து வாழ்த்தினார்

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெரும்பாண்டி புனித பெரியநாயகி மாதா ஆலயத்தில் "மூன்று ராஜாக்கள் பொங்கல் விழா" நடைபெற்றது.

    இயேசு கிறிஸ்து பிறப்பையொட்டி வானத்தில் தோன்றிய விண்மீன்களை கணக்கிட்டு உலகின் இரட்சகர் மீட்பர் உலகின் அரசர் பிறந்திருக்கிறார் என்கிற செய்தியை அறிந்து மூன்று ராஜாக்கள் பரிசு பொருட்களுடன் வந்து குழந்தை இயேசுவை தொழுது கொண்டு உலகிற்கு வெளிப்படுத்திய அந்த மூன்று ராஜாக்களுக்கு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க திருச்சபையில் உள்ள கிறிஸ்தவர்கள் மூன்று ராஜாக்கள் திருநாளை கொண்டாடுகின்றனர்.

    அந்த வகையில் தமிழ்நாட்டை பொறுத்த வரையில் தமிழர் திருநாள் பொங்கல் நன்னாளாக இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழர்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள் இந்த மூன்று ராஜாக்கள் பெயரில் தமிழர் திருநாளாம் பொங்கல் நாளை பெரும்பாண்டி கிராம மக்கள் "சமூக நல்லிணக்க சமத்துவ பொங்கல்" என்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கத்தோலிக்க திருச்சபையின் குடந்தை மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை டாக்டர் அமிர்தசாமி , ஜோதிமலை இறைபணி குடில் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் , அல் மைதீனா பள்ளிவாசல் இமாம் மௌலானா அபுதாகிர் பைசி பாகவி என மூன்று மதத்தைச் சேர்ந்த இறை அறிஞர்கள் தொடங்கி வைத்து ஆசி வழங்கினர்.

    மேலும், இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முத்து, பெரும்பாண்டி ஊராட்சி தலைவர் பாஸ்கர், கும்பகோணம் மாமன்ற 5- வது வார்டு உறுப்பினர் சக்கரபாணி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் தளபதி சுரேசு,கருத்தியல் பரப்புச் செயலாளர் செந்தோழன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

    இவ்விழாவை கிராம நாட்டாமை குடந்தை அரசன், காரியம் மஸ்டீபன் ராஜ், கணக்கர் தெரு துரியோததாஸ், செய்தி தொடர்பாளர் செல்வராசு ,கிராம முகேஷ் , பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நிறைவாக பங்கு தந்தை பெர்னான்டஸ் திருப்பலி நிறைவேற்றி திருவிருந்து கொடுத்து வாழ்த்தினார்.

    ×