என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Kodaikanal high Villages"
- கொடைக்கானலில் இருந்து 35 கிலோமீட்டருக்குமேல் தொலைவில் அமைந்திருந்தாலும் மன்னவனூர் கிராமத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.
- இங்குள்ள சூழல் மையம் மற்றும் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.தூண் பாறை, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, குணாகுகை, மோயர் சதுக்கம், பிரையண்ட் பூங்கா, படகுக்குழாம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்தனர்.
மேலும் தற்பொழுது சுற்றுலா பயணிகள் அதிக அளவில் விரும்பிச் செல்லும் பகுதியாக மேல்மலை கிராமங்கள் உள்ளது. குறிப்பாக மன்னவனூரில் அமைந்துள்ள சூழல் சுற்றுலா மையம் அவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் வார விடுமுறை அல்லாத நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள ஜிப்ரோப்பிங் (ஜிப் பறக்கும் சறுக்கு) விளையாட்டில் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். ஏரியில் பரிசல் படகு சவாரி, துடுப்புப்படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதன் அருகிலேயே ஆராய்ச்சி நிலையம் உள்ளதால் அங்கு அமைந்துள்ள முயல் பண்ணை, ரோம ஆடுகள், போன்ற விலங்குகள் மையத்தையும் கண்டு களிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
இந்த சூழல் சுற்றுலா மையத்தில் மேலும் பொழுதுபோக்கு அம்சங்களை விரிவு படுத்தி சிறுவர்கள் விளையாட்டுப் பூங்கா, கைப்பந்து விளையாட்டு மைதானம், இறகுப்பந்து விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இப்பணிகள் முழுமை அடைந்தால் மேலும் சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் அதிக அளவில் வருகை புரிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானலில் இருந்து 35 கிலோமீட்டருக்குமேல் தொலைவில் அமைந்திருந்தாலும் மன்னவனூர் கிராமத்திற்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.