என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kodanad issue"
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, கொடநாடு விவகாரம் குறித்து பேசியது தொடர்பான அவதூறு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், தமிழக அரசின் மனுவிற்கு ஏப்ரல் 3-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார். #KodanadIssue #MKStalin
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மக்கள் சந்திப்பு சுற்றுபயணமாக நேற்று இரவு கல்பாக்கம் வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தை திசைதிருப்பும் நோக்கில் தான் இதுவரை இந்த அரசு ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச மறுத்து வருகிறது. இது அரசுக்கு ஆரோக்கியமானது அல்ல.
வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்த அரசுக்கு முடிவு கட்டப்படும். தேர்தலில் கூட்டணி குறித்து எங்களிடம் சில கட்சிகள் பேசி வருகிறார்கள் விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #KodanadIssue
திண்டுக்கல்:
மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசின் தவறான அணுகுமுறைதான் காரணம். இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். உடனடியாக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்.
அதை விடுத்து தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தவறான செயல் ஆகும்.
கொடநாடு கொலைகள் ஒரு ஹாலிவுட் திரில்லர் படம் பார்ப்பது போல உள்ளது. இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். வரும் மக்களவை தேர்தலில் தேசிய அளவில் புதிய அணி உருவாக வாய்ப்பில்லை.
பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அனைத்து கட்சிகளின் நோக்கமாக உள்ளது. நிச்சயம் பா.ஜ.க. வரும் தேர்தலில் கடும் வீழ்ச்சியை சந்திக்கும். இதற்காக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாடுபடும்.
இவ்வாறு அவர் கூறினார். #gramakrishnan #kodanadissue #edappadipalanisamy
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொடநாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. மூன்று பேர் விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவர் மீது கொலை முயற்சி செய்யப்பட்டு தப்பி உள்ளார். ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் சொல்லித்தான் கொள்ளை சம்பவத்தில் இறங்கியதாகச் சொல்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இதனை நான் செய்கிறேன் என்று கனகராஜ் தன்னிடம் சொன்னதாக சயன், மனோஜ் ஆகிய இருவரும் சொல்கிறார்கள். 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும் சில ஆவணங்களை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது என்றும் சயன் சொல்லி இருக்கிறார்.
இந்த விவகாரம் முடிந்த பிறகு கனகராஜ் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகிறார். சயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது மனைவியும், மகளும் இறக்கிறார்கள். சயன் உயிர் தப்புகிறார். கொடநாடு பங்களாவின் சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ் குமார் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்த கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்துகள் அனைத்துமே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக இந்த விவகாரம் மீடியாக்களில் கண்கூசும் அளவுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் நேரடியாக இதற்கு முதல்- அமைச்சர் இதுவரை பதில் சொல்லவில்லை. சுற்றி வளைத்து ஏதேதோ பேசுகிறார்.
இப்பிரச்சினை குறித்து நான், கடந்த 14-1-2019 அன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து, “பத்திரிக்கையாளர் மாத்யூ வெளியிட்ட கொடநாடு நிகழ்வுகள் குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நேர்மையான விசாரணை நடைபெற முதல்வர் பதவியிலிருந்து விலகிட அறிவுறுத்தவும் நேர்மையான ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்”என்று கோரிக்கை மனு அளித்தேன். ஆனால், இன்று வரை அக்கோரிக்கை மனுமீது எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
எனவே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகிட வேண்டு மென்றும்; தமிழக ஆளுநர் முதல்வர் மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நேர்மையான ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, வருகின்ற 24-1-2019 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில், சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ., சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர் பாபு, எம்.எல்.ஏ., சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KodanadIssue #DMK #MKStalin
“கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆதாரம் இருந்தால் அதனை காவல்துறையிடம் தரலாம். ஆதாரமற்ற குற்றச்சாட்டு கூறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஓபிஎஸ் எச்சரித்தார்.
தேர்தல் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ், அரசியலில் எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம் என்றும், கூட்டணி தொடர்பாக விரைவில் நல்லது நடக்கும் என்றும் கூறினார். #KodanadVideo #Stalin #OPS
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றவாளியாக கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சாலை விபத்தில் இறந்துபோனார். மற்றொரு குற்றவாளியான கனகராஜின் கூட்டாளி சயன் தனது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் சென்றபோது விபத்தில் சிக்கினார். அதில் அவருடைய மனைவி, மகள் இறந்தனர். சயன் மட்டும் உயிர் தப்பினார். கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் உச்ச நீதிமன்றதில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிராபிக் ராமசாமி சார்பில் தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்த வீடியோ உண்மை இல்லை என தெரிவித்தார். அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்றும் கூறினார்.
இதையடுத்து அதிமுக அளித்த புகாரின் அடிப்படையில், மேத்யூ சாமுவேல், அந்த வீடியோவில் பேசிய மனோஜ், சயன் உள்ளிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், மனோஜ், சயன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேத்யூ சாமுவேலை போலீசார் தேடி வருகின்றனர். #KodanadEstate #KodanadVideo #TrafficRamaswamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்