என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koilpatti"

    • கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் தை முதல் செவ்வாய் காட்சி திருவிழா முன்னிட்டு நாள் கால் நடுதல் காப்பு கட்டுதல் விழா நடைபெற்றது.
    • தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜையும் 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், தேன், பால், சந்தனம் கும்பாபி ஷேகம்

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் தை முதல் செவ்வாய் காட்சி திருவிழா முன்னிட்டு நாள் கால் நடுதல் காப்பு கட்டுதல் விழா நடைபெற்றது.

    தொடர்ந்து காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜையும் 7 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 18 வகையான மஞ்சள், மா பொடி, திரவியம், தேன், பால், சந்தனம் கும்பாபி ஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட திருவிழா கால்நட்டிகாப்பு கட்டி சிறப்பு சோடனை தீபாராதனை நடந்தது. லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வ சுப்பிரமணியன் செய்தார்.

    இதில் பஞ்சாயத்து தலைவி முத்துலட்சுமி மணி, சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, யோகிஸ்வரார் சங்க முன்னாள் தலைவர் ஆனாந்த் மாரியப்பன், ஆறுமுகம், மகாராஜா, மாரீஸ்வரன், விளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பூமாதேவி, பூமாலட்சுமி, காந்திமதி ,மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்தார்கள்.

    ×