search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Koodankulam"

    • சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் கொண்டு வந்ததும் தெரியவந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு வந்த வடமாநிலத்தை சேர்ந்த சில வாலிபர்கள் கள்ளச்சாரயம் கடத்தி வந்ததாக கூடங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அழைத்து வரப்பட்ட சுமார் 20 பேரை சோதனை செய்தனர். அப்போது அதில் 5 பேரிடம் சுமார் 5 லிட்டர் கள்ளச்சாரயம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    உடனே அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜிக்குமார்(வயது 22), சத்போந்தர் ராம்(21), அவிநாத்குமார்(33), சந்தன்குமார்(29), நாகேந்திர ராம்(33) ஆகியோர் என்பதும், ஏற்கனவே சிலர் இதேபோல் சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • 1999 ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

    கூடங்குளம் அணுமின் நிலைய வளாக மையத்தில் நாளை நடைபெறவிருந்த அணுமின் நிலைய பணியாளர்கள் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 1999-ம் ஆண்டு ஒப்பந்தப்படி அனுமின் நிலையத்தில் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவு பணிகளுக்கு ஆள்கள் எடுப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்த பணிகளுக்காக விண்ணப்பித்திருந்தனர்.

    இந்த தேர்வை ரத்துசெய்ய கோரி அணுமின் நிலைய வளாக இயக்குநர் மறறும் இந்திய அணுசக்தி துறைக்கு, ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான அப்பாவு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இந்த எழுத்துத் தேர்வு நாளை நடக்க உள்ளதாக, அணுமின் நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கூடங்குளத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், நிலம் கொடுத்தவர்கள், பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இதில், 1999-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். நாளை நடக்க உள்ள எழுத்துத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேர்வை ரத்து செய்யாவிடில், தேர்வு நடைபெறும் அணுமின் நிலைய வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் நாளை முற்றுகை போராட்டம் அறிவித்ததை அடுத்து தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மாணவர் பேரவை பதவியேற்பு விழாவிற்கு பள்ளி தாளாளர் தினேஷ் தலைமை தாங்கினார்.
    • கல்வி வளர்ச்சி தினத்தை முன்னிட்டு மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹார்வர்டு மெட்ரிக் மேல்நிலை மற்றும் இன்டர்நேஷனல் பள்ளிகளில் மாணவர் பேரவை பதவியேற்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் செல்வராணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஹார்வர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

    கல்வி வளர்ச்சி தினத்தை முன்னிட்டு காமராஜர் பற்றிய சொற்பொழிவுகளும் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில் முதல்வர் முருகேசன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர்கள் ஜெனி, டேனியல், சைலா மற்றும் சுந்தர் செய்திருந்தனர்.

    கூடங்குளத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 32).

    இவரும், அதே பகுதியை சேர்ந்த பால்துரை (55) என்பவரும் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  

    அதன்பேரில் போலீசார் அவர்களிடம் சோதனை செய்தனர்.

    அப்போது புகையிலை பொருட்களை பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

     இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 100 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    • ஹெப்ரோன் பள்ளியில் 21-வது ஆண்டு விழா நடைபெற்றது.
    • விழா ஏற்பாடுகளை தாளாளர் எபனேசர் பால்ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    வள்ளியூர்:

    கூடங்குளம் ஹெப்ரோன் மேல்நிலைப்பள்ளியில் 21-வது ஆண்டு விழா நடைபெற்றது.சிறப்பு விருந்தினர்களாக கூடங்குளம் பஞ்சாயத்து தலைவி வின்சிமணியரசு, கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, சப்-இன்ஸ்பெக்டர் வினோத் குமார், பள்ளியின் முன்னாள் மாணவர் அலெக்ஸ்ராய் ஜெயவெஸ்லி, டாக்டர் பில்லி ஜோசப், டாக்டர் திலீப் குமார், டாக்டர் லியா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் எபனேசர் பால்ராஜ், முதல்வர் விஜயா எபனேசர் மற்றும் அறங்காவலர்கள் சாமுவேல்ராஜ், ஜாய்ஸ் தேவநேசம் ஆகியோர் செய்திருந்தனர்.

    • இடிந்தகரை கடற்கரையில் இருந்து சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் நாட்டு படகு ஒன்று மிதந்து கொண்டு இருந்தது.
    • மீனவர்கள் உதவியுடன் போலீசார் அந்த நாட்டு படகை மீட்டு வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடற்கரையில் இருந்து சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் நாட்டு படகு ஒன்று மிதந்து கொண்டு இருந்தது. அதில் மீனவர்கள் யாரும் இல்லை.

    இதனை அப்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பார்த்து கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையிலான போலீசார் மீனவர்கள் உதவியுடன் அந்த நாட்டு படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அந்த படகில் லம்பாடி என்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. அதில் பதிவெண் எதுவும் எழுதப்படவில்லை.

    கடற்கரையோர மாவ ட்டத்தில் கடலோரத்தில் கட்டப்பட்டிருந்த நாட்டு படகு ஏதேனும் கயிறு அறுந்து காற்றின் வேகத்தால் கடலுக்குள் இழுத்து வரப்பட்டதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த படகின் மதிப்பு ரூ.3 லட்சம் என்று கூறப்படுகிறது.

    • மாணவ,மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.
    • நாடகம் மூலம் புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் டி.டி.என் கல்வி குழுமத்தின் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் புகையிலைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே தொடங்கிய இப்பேரணியை கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ், கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ, கூடங்குளம் சி.எஸ்.ஐ தேவாலய ரெவரன்ட் எட்வின் டேனியல், மாவட்ட கவுன்சிலர் ஜான் ரூபா கிங்ஸ்டன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்ற கல்லூரி மாணவ மாணவிகள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்களையும் எழுப்பி பொதுமக்களிடம் துண்டறிக்கையை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கிழக்கு பஸ் நிலையத்தில் மாணவர்கள் நாடகம் மூலம் பொதுமக்களுக்கு புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கிய டி.டி.என் கல்வி குழுமத்தின் தலைவர் லாரன்ஸ் பொது மக்களுக்கும், மாணவர் களுக்கும் பல்வேறு ஆலோ சனைகளை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் டாக்டர்.சுரேஷ் தங்கராஜ் தாம்சன் வரவேற்று பேசினார்கள். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது இபாம் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலை சங்கம் மற்றும் ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • நான்கு சாலையில் நின்று கொண்டிருந்த திருநங்கைகள் துரையை வழிமறித்துள்ளனர்.
    • புகாரின் பேரில் சாக்‌ஷி என்ற திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.

    பணகுடி:

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு உலை பாதுகாப்பு மேற்பார்வையாளராக துரை (வயது 49) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் செட்டிகுளம் அணு விஜய் நகரியத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று அவர் செட்டிகுளத்தில் இருந்து வள்ளியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காவல்கிணறு சந்திப்புக்கும், பணகுடிக்கும் இடையே நான்கு சாலையில் நின்று கொண்டிருந்த திருநங்கைகள் வழிமறித்துள்ளனர்.

    அப்போது துரையிடமிருந்து 2 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை திருநங்கைகள் பறித்து சென்றனர். இதுகுறித்து பணகுடி போலீஸ் நிலையத்தில் துரை அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் வழக்குப்பதிவு செய்து சாக்ஷி என்ற திருநங்கையை போலீசார் கைது செய்தனர். மேலும் காவியா, ஷைனிகா, சுபேணா ஆகிய 3 திருநங்கைகளை தேடி வருகின்றனர்.

    • கூடங்குளம் காட்டுப்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • விசாரணையில் அவர்கள் சீட்டு விளையாடியது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    கூடங்குளம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் வினுகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அங்கு சூதாடிக்கொண்டிருந்த 5 பேரை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் கூடங்குளத்தை சேர்ந்த சித்திரைபாண்டி(வயது 45), ஜெயக்குமார்(48), குமார், அருள், குமரேசன் என்பதும், அவர்கள் சீட்டு விளையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.5,180 பணம் மற்றும் சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • அந்தோணியை 4 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டியது.
    • படுகாயம் அடைந்த அந்தோணியை அவரது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை பீட்டர் தெருவை சேர்ந்தவர் ரோசாரி. இவரது மகன் அந்தோணி (வயது 35).

    சரமாரி வெட்டு

    இவருக்கு ஷீலா (32) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். அந்தோணி மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று நள்ளிரவு அந்தோணி தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தோணியை சரமாரியாக வெட்டியது. பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்த அந்தோணியை அவரது உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரணம் என்ன?

    அதில் கடந்த 2 நாட்களாக அந்தோணி ராஜ் தனது உறவினரின் மகன்களுடன் ஒன்றாக மீன் பிடிக்க சென்றதாகவும், பின்னர் எல்லோரும் மது குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    அப்போது ஏற்பட்ட குடிபோதை தகராறில் முன் விரோதம் ஏற்பட்டு இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • அம்மன் கழுத்தில் போடப்பட்டு இருந்த தங்க தாலி, கண் மலர் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    கூடங்குளம் அருகே உள்ள ஊரல்வாய்மொழி மெயின்ரோட்டில் இசக்கியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து பூட்டிவிட்டு சென்றனர்.

    வழக்கம்போல் நேற்று மீண்டும் கோவிலுக்கு பூசாரி சென்று பார்த்தபோது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கு அம்மன் கழுத்தில் போடப்பட்டு இருந்த தங்க தாலி, கண் மலர் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. மேலும் உண்டியல் உடைக்கப்பட்டு பணமும் திருடப்பட்டு இருந்தது.

    இதுதொடர்பாக கோவில் நிர்வாகியான அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன்(வயது 50) கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. #SupremeCourt #Koodankulam
    சென்னை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தரராஜன் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    அதில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் பின்பற்றப்படவில்லை. அணு கழிவுகளை சேகரிக்க போதிய வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


    இன்று இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் கூடங்குளத்தில் அணு கழிவுகளை சேமிப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முடிக்க மேலும் அவகாசம் தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

    இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தது. அணு கழிவுகளை சேமிப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்ள 2022 ஆண்டு வரை அவகாசம் அளித்து உத்தரவிட்டது. #SupremeCourt #Koodankulam
    ×