என் மலர்
நீங்கள் தேடியது "Korimedu"
- சேலம் கோரி மேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டாமணி (30), பிரபல ரவுடி, இவர் தற்போது கார் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார்.
- மகாவிஷ்ணு தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு, மணிகண்டன் தலையில் கம்பியால் சரமாரியாக தாக்கினார்.
சேலம்:
சேலம் கோரி மேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற கிட்டாமணி (30), பிரபல ரவுடி, இவர் தற்போது கார் வைத்து வாடகைக்கு இயக்கி வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மகாவிஷ்ணு. இவர் நேற்று மணிகண்டன் காரை வாடகைக்கு கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மணிகண்டன் காருக்கு டீசல்போட்டு தயாராக வைத்துள்ளார். ஆனால் மகாவிஷ்ணு , மணிகண்டன் காரை எடுக்காமல் வேறு நபரிடம் வாடகை காரை எடுத்து சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், மகாவிஷ்ணுவின் சகோதரியிடம் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கினார். இது குறித்து மகாவிஷ்ணு தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த மகாவிஷ்ணு, மணிகண்டன் தலையில் கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் படு காயம் அடைந்த மணிகண்டன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.