search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kovai sungam"

    • அடுத்தடுத்து 2 பேர் பலி
    • 8 இடங்களில் வேக தடுப்பான்கள் அமைக்கப்பட உள்ளன.

    கோவை:

    கோவை திருச்சி சாலையில், ராமநாதபுரம் - சுங்கம் இடையே தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.253 கோடி மதிப்பில் 3.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கியது.

    பாலம் திறக்கப்பட்ட சில நாட்களில் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர் ஒருவர் தடுப்புச்சுவரில் மோதி உயிரிழந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மற்றொரு வாலிபர், மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்து சுங்கம் அருகே ேமம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார். பாலம் திறக்கப்பட்ட சில நாட்களில் விபத்தில் சிக்கி 2 வாலிபர்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மேம்பாலத்தில் விபத்து ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போக்குவரத்து போலீசாரிடம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

    இதையடுத்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து மேம்பாலத்தில் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

    முதற்கட்டமாக பாலத்தின் இரண்டு பக்கமும் தலா 2 இடங்களில் வாகனங்கள் வேகத்தை குறைத்து வளைந்து செல்லும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும் பாலத்தின் பல்வேறு இடங்களில் வேக தடுப்பான்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மேம்பாலத்தில் 8 இடங்களில் வேகத்தடை அமைக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-ராமநாதபுரம் - சுங்கம் பாலத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்லலாம். ஆனால் சில வாகன டிரைவர்கள் அதிவேகத்தில் செல்கின்றனர்.

    எனவே வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த 8 இடங்களில் வேக தடுப்பான்கள் அமைக்கப்பட உள்ளன.

    நேற்று ராமநாதபுரத்தில் இருந்து சுங்கம் வரும் வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வேக தடுப்பான்கள் அமைக்கப்பட்டன. இன்று சுங்கத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழித்தடத்தில் வேக தடுப்பான் அமைக்கப்படுகிறது. ஒரே இடத்தில் அடுத்தடுத்து 3 முதல் 6 எண்ணிக்கையில் உயரம் குறைவாக இருக்கும் வகையில் இந்த வேக தடுப்பான்கள் அமைக்கப்படுகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    ×