என் மலர்
நீங்கள் தேடியது "kovai"
- தனியார் பள்ளி அருகே உள்ள சோளக்காட்டில் புகுந்து நின்றது.
- சுற்று வட்டார பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது.
வடவள்ளி
கோவை மதுக்கரை வனத்துறைக்கு உட்பட்ட பகுதியான ஐயாசாமி மலை பகுதியில் இருந்து இன்று காலை சுமார் மூன்று குட்டிகளுடன் மூன்று பெரிய யானைகள் என ஆறு யானைகள் ஜெகந்நாதன் நகர் பகுதியில் ஊருக்குள் புகுந்தது.
பேரூர் பச்சாபாளையம் பகுதியில் குட்டிகளுடன் யானைகள் திரிவதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் யானையை விரட்டுப் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மலைப்பகுதிக்கு செல்லாமல் போக்கு காட்டிய யானை கூட்டம், தனியார் பள்ளி அருகே உள்ள சோளக்காட்டில் புகுந்து நின்றது.
உதவி வனப்பாது காவலர் செந்தில்குமார், மதுக்கரை வனச்சரகர் அருண்குமார், வனச்சரகர் பிரபு, உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குட்டிகளுடன் யானை இருப்பதால் மாலை 6 மணிக்கு மேல் யானை கூட்டத்தை வனத்திற்குள் விரட்டும் பணி செய்ய இருப்பதாக வனத்துறை சார்பில் தெரிவித்தனர். இதற்கிடையே யானை கூட்டத்தை காண சுற்று வட்டார பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவியது.
- கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது
கோவை,
கோவை துடியலூரை அடுத்த வெள்ளகிணர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் குரு (வயது 32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கிருஷ்ணவேனி (30).
இவர்கள் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சங்கர் குருவிற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சங்கர் குரு மனவேதனையுடன் இருந்து வந்தார். நேற்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் லோகநாதன் (46), டெய்லர். இவரது மனைவி மகேஷ்வரி. இவர் தினமும் தனது குழந்தைகளை அருகே உள்ள பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு தனது சகோதரரின் ஓட்டலுக்கு வேலைக்கு செல்வது வழக்கம்.
இதேபோன்று, சம்பவத்தன்று மகேஷ்வரி வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த லோகநாதன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை அறிந்த போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 87 மற்றும் 88 -வது வார்டுகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
- மழைநீர் வடிகால் பணிக்காக டெண்டர் விடப்பட்டது. ஆனால் அதனை ரத்து செய்து விட்டார்கள்.
குனியமுத்தூர்
தொடர் மழையால் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குட்பட்ட குனியமுத்தூர் 87 மற்றும் 88 -வது வார்டுகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 87 மற்றும் 88 -வது வார்டுகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த பகுதியானது தாழ்வான பகுதி என்ற காரணத்தால் மழைநீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் உடனுக்குடன் அதனை சரி செய்து விடுவோம். ஆனால் தற்போது காலையிலிருந்து கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த அதிகாரியும் நேரில் வரவில்லை. இப்பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காக டெண்டர் விடப்பட்டது. ஆனால் அதனை ரத்து செய்து விட்டார்கள். கடந்த ஒன்றை ஆண்டுகளாக குறிச்சி குளம் சீரமைப்பு பணி நடைபெறாமல் நிறுத்தி வைத்து விட்டார்கள். பின்னர் சட்டசபையில் நான் பேசிய பிறகு, தற்போது வேலையை தொடங்கி இருக்கிறார்கள்.
டெண்டர் விடப்பட்ட 500 சாலை பணிகளையும் ரத்து செய்து இருக்கின்றனர். காரணம் கேட்டால் பணம் இல்லை என்று கூறுகிறார்கள். தற்போது வீட்டு வரியை உயர்த்தி இருக்கிறார்கள். மின் கட்டணத்தையும் உயர்த்தியிருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அந்த பணத்தை வைத்து வேலைகளை செய்ய வேண்டியது தானே. கோவை மாவட்டத்தை மட்டும் இந்த தி.மு.க. அரசு புறக்கணிக்கிறது. அதிகாரிகள் மக்களை பார்க்க வேண்டும். மக்கள் பணியை சரியாக செய்ய வேண்டும்.இதற்கு பின்னர் அதிகாரிகளிடம் மனு கொடுக்க உள்ளேன். இன்னும் ஒரு வார காலத்திற்குள் சேதம் அடைந்த சாலைகளை முற்றிலுமாக சீர்படுத்த வேண்டும். அப்படி இல்லை என்றால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
கோவை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பாகுபாடின்றி மக்களுக்காக வேலை செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
- 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
- பணம், வெள்ளி கை செயின், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.
கோவை,
கோவை சுந்தராபுரம் மதுக்கரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 23). தனியார் வங்கி ஊழியர்.
இவர் சம்பவத்தன்று குறிச்சி எம்.எம்.பி நகரில் உள்ள தனது நண்பர் ஒருவரை பார்க்க நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென அவரை வழிமறித்து பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார்.
இதனால் வாலிபர்கள் 3 பேரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.700 பணம், வெள்ளி கை செயின், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து மணிகண்டன் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பணம் மற்றும் வெள்ளியை பறித்தது கோவை போத்தனூர் பாரதிநகரை சேர்ந்த ஷாரூக்கான்(24), போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த ரியாஸ்கான்(28) மற்றும் போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்த காஜா மொய்தீன்(23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், ஷாரூக்கான் மீது வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 9 வழக்குகளும், காஜா மொய்தீன் மீது 3 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாரியப்பன் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலை சம்பந்தமாக ஓசூர் சென்றார்.
- வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிரா இணைப்பை துண்டித்து டி.வி.ஆர் பதிவுகளை தூக்கி சென்றுள்ளனர்.
கோவை
கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் மகேஸ்வரி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 65). தொழில் அதிபர்.
இவர் கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலை சம்பந்தமாக ஓசூர் சென்றார். பின்னர் நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம், 100 அமெரிக்க டாலர்கள் மற்றும் 100 சிங்கப்பூர் டாலர்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. டாலர்களின் மதிப்பு ரூ.13 ஆயிரம் ஆகும். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தங்களது உருவம் காமிராவில் பதிவாகாமல் இருக்க வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிரா இணைப்பை துண்டித்து டி.வி.ஆர் பதிவுகளை தூக்கி சென்றுள்ளனர்.
இதுகுறித்து மாரியப்பன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் வீட்டில் இருந்த திருடர்கள் சி.சி.டி.வி காமிராக்களை திருடி சென்றதால் அந்த பகுதியில் உள்ள காமிராக்களை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபரின் வீட்டின் பூட்டை உடைத்து பணம் மற்றும் வெளிநாட்டு டாலர்களை திருடி சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- பயணி பாஸ்போர்ட்டை கிழித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் ேசாதனை செய்தனர்.
பீளமேடு:
கோவை பீளமேடு அருகே சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது.
இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு விமானம் வந்தது.
இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன் பேரில் விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் ேசாதனை செய்தனர்.
அப்போது விமானத்தில் வந்த வாலிபர் ஒருவரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாலிபரின் பையை வாங்கி சோதனை செய்தனர். அப்போது அதில் 200 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் அந்த வாலிபரை மேல் விசாரணைக்காக அழைத்தனர்.
அப்போது வாலிபர், வர மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தான் கையில் வைத்திருந்த தனது பாஸ்போர்ட் மற்றும் விசாவையும் கிழித்து வீசினார்.இதையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில், வாலிபர் புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தை சேர்ந்த முகமது சாலிக் வயது(39) என்பது தெரியவந்தது.
மேலும் இவர் அடிக்கடி அரபு நாடுகளுக்கு சென்று வருவதும், அங்கிருந்து தங்கத்தை கடத்தி வருவதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே அவர் தனது பாஸ்போர்ட்டை கிழித்ததாகவும், அவர் எந்தெந்த நாடுகளுக்கு சென்று வந்தார் என்ற தகவல்கள் பாஸ்போர்ட்டில் இருப்பதால், அதனை பார்த்து அதிகாரிகள் கண்டுபிடித்துவிடுவார்கள் என்ற பயத்தில் கிழித்த தாகவும் ஒப்புக்கொண்டார்.
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.
- சிகரெட் பழக்கம் இருந்ததால் இவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
- தவ்சிக் மவுலிஸ் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
கோவை:
கோவை சவுரிபாளையம் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 37), ஆட்டோ டிரைவர். இவரது மகன் தவ்சிக் மவுலிஸ் (13). குட்கா, சிகரெட் பழக்கமுடைய இவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் சவுரிபாளையம் அருகே நின்று கொண்டு சிகரெட் பிடித்துள்ளார்.
இதை அந்த வழியாக ஆட்டோவில் வந்த அவரது தந்தை சதீஷ்குமார் பார்த்துள்ளார். மகன் சிகரெட் பிடிப்பதை பார்த்து வேதனையடைந்த அவர் தவ்சிக் மவுலிசை திட்டி வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் இரவில் சதீஷ்குமார் வீடு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த சதீஷ்குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மகன் தவ்சிக் மவுலிஸ் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுத அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சிறுவன் தவ்சிக் மவுலிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
- தமிழ் மாணவர்களிடையே காவி சிந்தனையை விதைக்க வேண்டாம்.
கோவை,
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்தும் மத்திய அரசை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது அவர்கள் காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் கருத்தை திணிக்க வேண்டாம். தமிழ் மாணவர்களிடையே காவி சிந்தனையை விதைக்க வேண்டாம். காசிக்கும் தமிழகத்திற்கும் தொடர்பு இல்லை. எனவே ஆர்.எஸ்.எஸ். கோட்பாட்டை, இந்துத்துவா கொள்கை என்ற பெயரில் மாணவர்களிடையே புகுத்த கூடாது. இது போன்ற செயல்களை மத்திய அரசு கைவிட வேண்டும்''. என்று வலியுறுத்தினர்.
- வீட்டு உபயோக பொருட்கள் வைக்கப்பட்டுள்ள குடோன் செயல்பட்டு வந்தது.
- தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை,
கோவை செட்டிபாளையம் ரோடு பகுதியில் பழைய இரும்பு மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வைக்கப்பட்டுள்ள குடோன் செயல்பட்டு வந்தது.
நேற்று நள்ளிரவு இந்த குடோனில் திடீரென தீ பிடித்தது. வேகமாக பரவிய தீ குடோன் முழுவதும் பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து கிணத்துக்கடவு தீயணைப்புதுறையினருக்கும் செட்டிபாளையம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ எளிதாக பரவும் வகையிலான பொருட்கள் மூலமாக தீப்பிடித்ததா, மின் வயர் பழுது காரணமாக தீப்பிடித்ததா, வேறு ஏதாவது செயல்பாடு காரணமாக தீ பரவியதா என செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இந்த தீயினால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக தெரிகிறது.
- ஆண் குழந்தையை வீசி சென்றது யார்?
- குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை,
கோவை சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் மருத கோனார் வீதியில் உள்ள சாக்கடையில் பிறந்து சில மணி நேரமேயான ஆண் குழந்தை இறந்து கிடந்தது.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் இறந்து கிடந்த குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை வீசி சென்றது யார்? தகாத உறவால் குழந்தை பிறந்ததால் அதனை கொலை செய்து வீசி சென்றார்களா ? அல்லது குழந்தை இறந்து பிறந்ததால் வீசி சென்றார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களில் குழந்தையை யாராவது வீசி செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா என்பதை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சாக்கடையில் இறந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மனைவியை மிரட்டுவதற்காக மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்தார்.
- சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்கோனாவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 43). எஸ்டேட் தொழிலாளி. இவரது மனைவி மாதவி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
பாலகிருஷ்ணன் தினசரி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். அப்போது மனைவியிடம் அடிக்கடி தற்கொலை செய்து கொ ள்வேன் என கூறி மிரட்டி வந்தார்.சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் மது குடிப்பதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலகிருஷ்ணன் மனைவியை மிரட்டுவத ற்காக வீட்டில் இருந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பாலகிருஷ்ணனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு ஆஸ்ப த்திரிக்கு அனுப்பி வைக்க ப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன ளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த 24 வயது இளம்பெண். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பீர் வாங்கி குடித்தார். அப்போது இளம் பெண்ணிடம் இருந்து மது வாசனை வந்தது. தான் மது குடித்ததை கணவர் கண்டுபிடித்து விடுவார் என்ற பயத்தில் இருந்த இளம் பெண் அவரது கணவர் மோட்டார் சைக்கிளில் ஊற்றுவதற்காக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக இளம் பெண்ணை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.