என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "KP Ramalingam"
- கே.பி.ராமலிங்கம் உடல் நலத்திற்கும், உயிருக்கும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.
- பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிப்பது குற்றம் என்றால் அதை செய்ய அஞ்ச மாட்டோம்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா சிலையின் முன்பு இருந்த கேட்டை உடைத்துச் சென்று மாலை அணிவித்ததாக முன்னாள் எம்.பி.யும், பா.ஜ.க. மாநில துணைத் தலைவருமான கே.பி. ராமலிங்கம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவரை, போலீசார் நேற்று மத்திய சிறையில் அடைத்தனர்.
இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் சுதந்திர தின கொண்டாட்டத்தை ஒட்டி, மாநில அரசின் முறையான அனுமதி பெற்று, தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற போது, பூட்டப்பட்டிருந்த அந்த வளாகத்தைத் திறந்து நினைவிடத்துக்குள் சென்றார் என்ற காரணத்திற்காக ஒரு கொடுங்குற்றவாளியை போல் அவரை நடத்தும் விதத்தில், மாற்றுக் கட்சியினரை அச்சுறுத்தும் வகையிலே, மாநில அரசு நடந்து கொள்வது என்பது ஸ்டாலின் அவர்கள் வெளிப்படுத்தும் சர்வாதிகாரம்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த, கே.பி.ராமலிங்கத்தை காவல் துறையினர் துன்புறுத்தி கைது செய்துள்ளனர். அவர் செய்த தவறு என்ன? பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தது ஒரு குற்றமா?
அப்படி, பாரத மாதாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிப்பதை குற்றம் என்று இந்த அரசு சொல்லுமேயானால், அதை மீண்டும், மீண்டும் செய்ய, நாங்கள் எப்போதும் அஞ்ச மாட்டோம். உங்கள் அடக்கு முறையை, அராஜகங்களை எல்லாம் தமிழக மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
குடும்ப ஆட்சியில் கோலாச்சிக் கொண்டிருந்த உங்களின் அடுத்த பரிமாணமே இந்த சர்வாதிகாரம். உங்களது அடக்கு முறைகளால் எங்களை மிரட்டலாம், காவல் துறையினரால் எங்களைத் துன்புறுத்தலாம். ஆனால் காலமும் காட்சியும் மாறும் என்பதை மறந்து விடாதீர்கள்.
எங்கள் கட்சியின் அடிமட்டத்தொண்டன் கூட உங்கள் அடக்குமுறை சர்வாதிகாரப் போக்கினைக் கண்டு அஞ்சமாட்டான் நினைவில் கொள்ளுங்கள், யாரும் தொட்டுவிடமுடியாத உயரத்தில் உங்கள் சிம்மாசனம் இருப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டாம். உங்களை அந்தச் சிம்மாசனத்திலிருந்து இறக்கும் வரை, தமிழக மக்களின் குரலாக, எங்கள் குரல் மணியாக ஓங்கி ஒலிக்கும்.
இதய நோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் உடல் நலம் சீரடையும் முன்னர், மருத்துவர்கள் தடுத்தும், துன்புறுத்தி சிறைக்கு ஸ்டெச்சரில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரின் உடல்நலத்திற்கும், உயிருக்கும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் திரண்ட 100-க்கும் மேற்பட்டோர் ராமலிங்கம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆஸ்பத்திரிக்குள் நுழைய முயன்றனர்.
- போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
சேலம்:
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் தியாகி சுப்பிரமணியசிவா நினைவு மணிமண்டப வளாகத்தில் பாரத மாதா நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நினைவாலயத்திற்கு கடந்த வியாழக்கிழமை பா.ஜ.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக பா.ஜ.க. மாநில துணை தலைவர் கே.பி. ராமலிங்கம் தலைமையில் தருமபுரி மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாஸ்கர் உள்பட நிர்வாகிகள் சென்றனர்.
அப்போது நினைவாலயம் பூட்டப்பட்டிருந்தது. பூட்டை திறக்குமாறு மண்டப காப்பாளரிடம் பா.ஜ.கவினர் கூறினர். அவர் பூட்டை திறக்க மறுத்ததால் பூட்டை உடைத்து நினைவாலயத்திற்குள் சென்ற பா.ஜ.க.வினர் பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து நினைவு மண்டப காப்பாளர் சரவணன் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்பட பா.ஜ.க.வினர் 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து கே.பி.ராமலிங்கம், பா.ஜ.க. பென்னாகரம் வடக்கு ஒன்றிய தலைவர் சிவலிங்கம், பாப்பாரப்பட்டி நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் மவுனகுரு, பா.ஜ.க. தொண்டர் அணி மணி ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதில் ஆறுமுகம், மவுனகுரு, மணி ஆகிய 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.
இதில் கே.பி. ராமலிங்கத்திற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள பொன்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அப்போது கே.பி. ராமலிங்கத்திற்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக கூறியதால் தருமபுரியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் இ.சி.ஜி. மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து தொடர் பரிசோதனைக்காக நேற்றிரவு 11 மணிக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை போலீசார் அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம், இதய துடிப்பு, ஈ.சி.ஜி. உள்பட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது .
இதற்கிடையே பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் திரண்ட 100-க்கும் மேற்பட்டோர் ராமலிங்கம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆஸ்பத்திரிக்குள் நுழைய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து கே.பி.ராமலிங்கம் சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்கு பா.ஜனதாவினர் திரண்டுள்ளதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
- கே.பி.ராமலிங்கம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மருத்துவமனையை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டனர்.
- அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
பா.ஜ.க. மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்.பி.யுமானவர் கே.பி.ராமலிங்கம். இவர் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா சிலைக்கு மாலை அணிவிக்க பூட்டை உடைத்து நினைவிடத்துக்குள் சென்றார். இதுதொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் கே.பி.ராமலிங்கம் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கே.பி.ராமலிங்கம் உள்பட 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போலீஸ் பாதுகாப்புடன் கே.பி.ராமலிங்கத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு 11 மணிக்கு அழைத்து வந்தனர்.
ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, ஈ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதும், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த பா.ஜ.கவினர் மருத்துவமனையில் திரண்டு, கே.பி.ராமலிங்கம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். போலீசார் பேசி சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அங்கு அமைதி திரும்பியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்