search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishnapuram"

    • ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு நாங்குநேரி கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவிலில் கருவறைக்கு தனது சொந்த செலவில் ஏ.சி. வாங்கி கொடுத்துள்ளார்.
    • கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு எம். எல்.ஏ.வை. வாழ்த்தினர்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரன் இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பாளை ஒன்றியம் பாளை வடக்கு வட்டாரத்துக்குட்பட்ட கிருஷ்ணாபுரம் நொச்சி குளம் பஞ்சாயத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் வெங்கடா சலபதி பெருமாள் கோவிலில் கருவறைக்கு தனது சொந்த செலவில் ஏ.சி. வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அங்கு தனது பிறந்த நாளை கேக்வெட்டி அன்னதானம் வழங்கி கட்சி நிர்வாகிகளுட னும், ஊர் பொது மக்களுடனும் கொண்டாடினார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அழகிய நம்பி, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செய லாளர் குளோரிந்தாள், பாளை மேற்கு மற்றும் வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் கனகராஜ், கணேசன், கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் வேலம்மாள் சீனிவாசன், சீனிவாசன், ஆனந்தி சந்திரசேகரன், ஒன்றிய கவுன்சிலர் முருகன், நொச்சிகுளம் கிருஷ்ணாபுரம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் முத்துக்கென்னடி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு எம். எல்.ஏ.வை வாழ்த்தினர்.

    • சில நேரங்களில் ஒரே ஒரு பஸ் மட்டுமே வருவதால் அந்த பஸ்சில் தொங்கியபடி மாணவ- மாணவிகள் பயணம் செய்ய வேண்டி உள்ளது.
    • ரெயில்வே குட்ஷெட் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையாக கங்கைகொண்டானில் விரிவாக்க முனையம் செல்ல உள்ளது.

    நெல்லை:

    பாளை யூனியனுக்குட்பட்ட நொச்சிகுளம் பஞ்சாயத்து கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் இன்று சீருடையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் கிராமத்தில் இருந்து காலை நேரங்களில் இயக்கப்படும் அரசு பஸ்கள் மூலம் ஏராளமான மாணவ- மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகிறோம். வழக்கமாக 3 பஸ்கள் இயக்கப்படும் நிலையில், அதில் ஒரு பஸ் சமீபகாலமாக அவ்வப்போது வராமல் நின்று விடுகிறது.

    சில நேரங்களில் ஒரே ஒரு பஸ் மட்டுமே வருவதால் அந்த பஸ்சில் தொங்கியபடி மாணவ- மாணவிகள் பயணம் செய்ய வேண்டி உள்ளது.

    குறித்த நேரத்திற்கு பஸ்கள் வராததால் ஒழுங்கான நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இதனால் எங்களின் படிப்பு தடைபடுகிறது. கடந்த 11-ந் தேதி பஸ் டிரைவர், மாணவி ஒருவரை அவதூறாக பேசி உள்ளார். அந்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சமத்துவபுரத்தில் இருந்து ஐகிரவுண்டு வழியாகவும், நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்தும் எங்கள் பகுதிக்கு கூடுதல் பஸ் வசதிகள் செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    தென்னக ரெயில்வே யின் குட்ஷெட்டில் சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நிர்வாகிகள் அய்யப்பன், மாரியப்பன் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறோம். எங்கள் சங்கத்தில் 120 தொழிலாளர்கள் உள்ளனர். எங்களை வழிநடத்த 2 காண்டிராக்டர்கள், 2 ஏஜெண்டுகள் உள்ளனர்.

    2 வருடத்திற்கு ஒருமுறை எங்களுக்கு ஊதிய ஒப்பந்தம் போடப்படும். தற்போதுள்ள ஒப்பந்தம் 2023-ம் ஆண்டு டிசம்பர் வரை நடைமுறையில் உள்ளது.

    இந்நிலையில் ரெயில்வே குட்ஷெட் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையாக கங்கைகொண்டானில் விரிவாக்க முனையம் செல்ல உள்ளது.

    எனவே அங்கு வேலையில் எங்களுக்கு முன்னுரிமை அளித்து எங்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

    மேலப்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திற னாளிகளான காஜா மைதீன், அப்துல் காதர், பாத்திமுத்து ஆகியோர் அளித்த மனுவில், நாங்கள் 3 பேரும் கடந்த பல வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம்.

    மாற்றுத் திறனாளி களான எங்கள் வீட்டில் கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. எனவே எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கூறி இருந்தனர்.

    இவர்கள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பாளை சட்டமன்ற தொகுதியின் செயற்குழு உறுப்பினர் காதர் மீரான் தலைமையில் வந்து மனு அளித்தனர்.

    • நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பாத்திமா நகர் பகுதியில் பொதுமக்கள் மின்சார வசதி குறைவு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
    • நொச்சிக்குளம் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து ரூபி மனோகரன் எம்.எல.ஏ. குறைகளை கேட்டறிந்தார்.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளை ஊராட்சி ஒன்றியம் வடக்கு வட்டாரம் நொச்சிக்குளம் பஞ்சாயத்திற்குட்பட்ட கிருஷ்ணாபுரம் பாத்திமா நகர் பகுதியில் பொதுமக்கள் மின்சார வசதி குறைவு காரணமாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    இதையறிந்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அப்பகுதியில் புதிய மின் மாற்றி அமைத்து, பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    தொடர்ந்து நொச்சிக்குளம் கிராமத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அங்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து செல்வதால் நொச்சிக்குளம் குளம் மறுகால் வாய்கால் சாணான்குளம் செல்லும் வாய்க்காலை தூர்வாரி குடிமராமத்து செய்து தரும்படியாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    அதன்பின்பு பாளை மகாத்மா காந்திஜீ நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் அலுவலகத்தில் பணியாளர்களை சந்தித்து பேசினார். அந்த பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதன்பின்பு அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    நெசவாளர் மக்களை பெருமைபடுத்தும் விதமாக பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தாள், பாளை வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கனகராஜ், மின்சார துறை பணியாளர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு தலைவர்கள், மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×