என் மலர்
நீங்கள் தேடியது "KTM 390 Adventure"
- வரும் நவம்பர் மாதம் இத்தாலி நாட்டில் மிலனில் நடைபெறும் EICMA 2024 கண்காட்சியில் புதிய மோட்டார்சைக்கிளை கேடிஎம் அறிமுகப்படுத்தக்கூடும்.
- வரவிருக்கும் மாடல் தோற்றம் மற்றும் இயக்கவியல் ஆகிய இரண்டிலும் விரிவான மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய 390 அட்வென்சர் மாடலை ஒன்றை உருவாக்கி வருகிறது கேடிஎம். தற்போது விற்பனையில் இருக்கும் 390 அட்வென்சர் மாடலானது 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தற்போது அப்டேட் செய்கிறது கேடிஎம். வரவிருக்கும் 2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் அதன் உற்பத்திக்கு தயாரான நிலையில் பலமுறை சோதனை செய்யப்பட்டது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச சந்தையில் கேடிஎம் 390 அட்வென்சரை அறிமுகம் செய்வதற்காக இந்த மாடலின் இறுதிக் கட்ட சோதனையை கேடிஎம் தீவிரப்படுத்தி உள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், பைக் விற்பனையில் நிறுவனங்களுக்கு இடையே போட்டி தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக, கேடிஎம் இந்த நிதியாண்டின் பிற்பகுதியில் புதிய 390 அட்வென்சரை உலகளவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர், வரும் நவம்பர் மாதம் இத்தாலி நாட்டில் மிலனில் நடைபெறும் EICMA 2024 கண்காட்சியில் புதிய மோட்டார்சைக்கிளை கேடிஎம் அறிமுகப்படுத்தக்கூடும். வரவிருக்கும் மாடல் தோற்றம் மற்றும் இயக்கவியல் ஆகிய இரண்டிலும் விரிவான மாற்றங்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புது பைக்கின் முன்புறம் டூயல் எல்இடி ஹெட்லேம்ப்களுடன் கூடிய செங்குத்தான ஹெட்லேம்ப் கிளஸ்டர் மற்றும் ஒரு உயரமான விண்ட்ஸ்கிரீன், கேடிஎம்-இன் ராலி மாடல்களை நினைவூட்டுகிறது. கூடுதலாக, புதிய பாடி பேனல்கள் ஒரு நேர்த்தியான மற்றும் அதிக ஆற்றல்மிக்க நிலைப்பாட்டிற்கு பங்களிக்கின்றன.
2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் புதிய ட்ரெல்லிஸ் ஃப்ரேம் மற்றும் சமீபத்திய 390 டியூக்கைப் போலவே வண்ண TFT இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலுடன் வரும். இது மாறுபாட்டைப் பொறுத்து 21- அல்லது 19-இன்ச் முன் மற்றும் 17-இன்ச் பின் வயர்-ஸ்போக் சக்கரங்களுடன் பொருத்தப்பட்டிருக்கும். சஸ்பென்ஷன் அமைப்பானது நீண்டதூர பயணத்திற்கு ஏற்ப அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகளைக் கொண்டிருக்கும், அவை முழுமையாக அட்ஜஸ்ட் செய்யும் வசதி கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆஃப்செட் மோனோஷாக் ரியர் யூனிட் வழங்கப்படுகிறது.
வரவிருக்கும் மோட்டார்சைக்கிளில் 390 டியூக்கிலிருந்து பெறப்பட்ட 399 சிசி சிங்கிள்-சிலிண்டர் லிக்விட்-கூல்டு ஃப்யூவல்-இன்ஜெக்ட் செய்யப்பட்ட DOHC எஞ்சின் வழங்கப்படும். இது 45.3 பிஎச்பி பவர் மற்றும் 39 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்படும், இத்துடன் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்படுகிறது.
புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர், டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் முன் மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக்குகள், தடையற்ற கியர் மாற்றங்களுக்கான இருதரப்பு குயிக் ஷிஃப்டர் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
- இந்த பைக்கில் 21 மற்றும் 17-இன்ச் வயர் ஸ்போக் வீல்கள் வழங்கப்படுகின்றன.
- கே.டி.எம். 390 அட்வெஞ்சர் S மாடலில் 399 சிசி லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்படுகிறது.
பைக் பிரியர்களுக்கு பலவிதமான மாடல்களில் உள்ள பைக்குளில் பயணிப்பது மிகவும் விருப்பமான ஒன்று. அதுவும் கே.டி.எம். மாடல் பைக்குகள் மீது கொள்ள ஆசை கொண்டுள்ளனர். அதிலும் பல நாட்களாக கே.டி.எம். 390 அட்வெஞ்சர் மாடல் குறித்து சில தகவல்கள் மட்டுமே வெளியான நிலையில், தற்போது பைக் அறிமுக தேதி மற்றும் அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி வருகிற 30-ந்தேதி அதாவது நாளை மறுநாள் இந்தியாவில் கே.டி.எம். 390 அட்வெஞ்சர் மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கோவாவில் நடைபெற்ற இந்தியா பைக் வாரம் நிகழ்வில் 390 அட்வெஞ்சர் S உடன் வெளியிடப்பட்ட 390 எண்டிரோ R பைக்குகளும் இந்த 390 பைக்குகளின் வரிசையில் அடங்கும்.
புதிய கே.டி.எம். 390 அட்வெஞ்சர் பைக்கில் செங்குத்தான ஹெட்லேம்ப்களை சுற்றி டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன. இதில் ஒற்றை இருக்கை அமைப்பு மற்றும் டிசைன் இதனை ரேலி பைக் போன்ற தோற்றத்தை வழங்குகிறது.

இந்த பைக்கில் 21 மற்றும் 17-இன்ச் வயர் ஸ்போக் வீல்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படும். பிரேக்கிங்கை பொருத்தவரை இருபுறமும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்விட்ச் செய்யக்கூடிய டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது.
இத்துடன் TFT டிஸ்ப்ளே, டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி, கார்னெரிங் ஏ.பி.எஸ்., மற்றும் ரைடு மோட்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் கே.டி.எம். தனது பைக்கில் இந்த வசதியை வழங்குவது இதுவே முதல் முறை ஆகும்.
கே.டி.எம். 390 அட்வெஞ்சர் S மாடலில் 399 சிசி லிக்விட் கூல்டு எஞ்சின் வழங்கப்படுகிறது. இது 45 ஹெச்.பி. பவர், 39 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு உள்ளது.
- கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக்கின் விலை ரூ. 3.68 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- கேடிஎம் 390 அட்வெஞ்சர் எக்ஸ் பைக்கின் விலை ரூ.2.91 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
KTM நிறுவனம் 390 Adventure மற்றும் Adventure X பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கேடிஎம் 390 அட்வெஞ்சர் எக்ஸ் மற்றும் 390 அட்வெஞ்சர் ஆகியவை ஒரே 373சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு எஞ்சினைக் கொண்டுள்ளன. இது 6-ஸ்பீடு கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை முறையே 42.31 ஹெச்.பி. பவரையும் 37 என்.எம். டார்க் விசையையும் வெளிப்படுத்தும். இரண்டு பைக்குகளும் 32.7 kmpl மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேடிஎம் 390 அட்வெஞ்சர் பைக்கின் விலை ரூ. 3.68 லட்சமாகவும் கேடிஎம் 390 அட்வெஞ்சர் எக்ஸ் பைக்கின் விலை ரூ.2.91 லட்சமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
