search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumbabhishekam Palani temple"

    • பழனி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனவே அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.
    • கோபுரம் மீது தங்கமுலாம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவில்நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனவே அதற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

    வருகிற ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோவிலில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெளிப்பிரகாரம், உள்பிரகாரம், கல்தூண்கள் ஆகியவை பழமை மாறாமல் புதுப்பி–க்கப்படுகிறது. கோவில் சுவர்களில் உள்ள சுதைகள் வர்ணப்பூச்சு செய்யப்பட்டு புதிதாக மாற்றப்பட்டுள்ளது.

    புதிய பித்தளை கம்பிகள் நிறுவும்பணி மற்றும் சேதமான கல்தூண்களை அகற்றி புதிய தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    உபகோவில்களிலும் ஆகமவிதிப்படி பாலாலய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் மலைக்கோவிலில் மூலவர் சன்னதிக்கு மேல் உள்ள தங்ககோபுரத்தை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது. இதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தங்கம் சரிசெய்யும் பணியாளர்கள் கோவில் உதவி ஆணையர் லட்சுமி முன்னிலையில் தங்க கோபுரத்தை ஆய்வு செய்தனர். கோபுரத்தில் உள்ள தூசுகள், பாசிகள் அகற்றப்பட்டு சேதமடைந்த விபரங்கள் குறித்து பட்டியலிடப்பட்டு அதற்கேற்றாற்போல் தங்கமுலாம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவில்நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×