search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kumbakkarai falls"

    • தொடர்மழை காரணமாக கடந்த மாதம் 3-ந்தேதி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே குளிர்ச்சியான ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலையாடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அருவியில் நீர்பிடிப்பு பகுதிகளான வட்டக்காணல், வெள்ளகவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக கடந்த மாதம் 3-ந்தேதி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர். மேலும் அருவியை கண்காணித்து வந்தனர். நீர்வரத்து சீராகாததால் 43 நாட்களாக தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே குளிர்ச்சியான ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்தனர்.

    மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கும்பக்கரை அருவிக்கு வந்திருந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 15-ந் தேதி யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது.
    • காட்டு யானை நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானலில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர் வரத்து இருக்கும். தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் நீர்வரத்து சீராகாததால் 6-வது நாளாக தடை தொடரும் என அறிவிக்கப்பட்டது.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தடை காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 15-ந் தேதி யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது. யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னர் 18-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். இந்த நிலையில் வெண்ணியாறு பீட் பகுதியில் இருந்து மீண்டும் 3 யானைகள் சுருளி அருவியில் நடமாடியதால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு பலகை சோதனை சாவடியில் வைக்கப்பட்டுள்ளது.

    காட்டு யானை நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 119.40 அடியாக உள்ளது. 406 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.59 அடியாக உள்ளது. 194 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.40 அடியாக உள்ளது. 44 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87.57 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாரில் மட்டும் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    • வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது மழை பெய்வதும், சில நேரங்களில் ஏமாற்றி செல்வதுமாக உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் விவசாயத்திற்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கனஅடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 118.85 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 378 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளது. 84 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கொடைக்கானல் வட்டக்கானல், வெள்ளக்கவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க, சுற்றி பார்க்க தடை விதிக்கப்படுவதாகவும், நீர்வரத்து சீரான பின்னர் அனுமதிக்கப்படும் என வனச்சரக அலுவலர் டேவி ட்ராஜன் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் காரணமாக கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருந்தபோதும் யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளதால் மறுஉத்தரவு வரும் வரை தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பெரியாறு 2.8, தேக்கடி 1.4, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.2, சண்முகநாதி அணை 2, போடி 0.6, வைகை அணை 0.6, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 1.2, வீரபாண்டி 1.2, ஆண்டிபட்டி 6.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • கன மழை காரணமாக பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.08 அடி. வரத்து 15 கனஅடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியகுளம், தேவதானப்பட்டி, வடுகப்பட்டி, போடி, ஆண்டிபட்டி, கூடலூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழையினால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கன மழை காரணமாக அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 127.05 அடியாக இருந்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 127.15 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் நேற்று 553 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1426 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1267 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4082 மி.கன அடியாக உள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் 4 ஜென ரேட்டர்கள் இயக்கப்பட்டு மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 67.22 அடியாக உள்ளது. வரத்து 948 கன அடி. திறப்பு 879 கன அடி. இருப்பு 5140 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 20 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.08 அடி. வரத்து 15 கனஅடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 86.64 மி. கன அடி.

    கன மழை காரணமாக பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். தற்போது தேனி மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 22.4, தேக்கடி 25.2, கூடலூர் 2.8, உத்தமபாளையம் 11.4, சோத்துப்பாறை 17, போடி 2.8, பெரியகுளம் 32 மி.மீ. மழை அளவு பதிவானது.

    • 20 நாட்களுக்குமுன்பு வரை பெய்த தொடர் மழை காரணமாக சீரான தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    • குளிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாலும் உள்ளூர் மக்களும் நண்பர்களுடன் வந்து ஆனந்தமாக குளித்துச் செல்கின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் கடந்த 20 நாட்களுக்குமுன்பு வரை பெய்த தொடர் மழை காரணமாக சீரான தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    தற்போது காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குடும்பத்துடன் வந்து நீராடி செல்கின்றனர். காலை 8 மணிக்கே மக்கள் கூட்டம் வரத்தொடங்கியுள்ளது.

    அருவியில் தண்ணீர் சீராக வருவதாலும், பல மாதங்களுக்கு பிறகு குளிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாலும் உள்ளூர் மக்களும் நண்பர்களுடன் வந்து ஆனந்தமாக குளித்துச் செல்கின்றனர். இதனால் அருவி பகுதியில் கூட்டம் அலைமோதி வருகிறது.

    பராமரிப்பு பணிகள் காரணமாக கும்பக்கரை அருவியில் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல், அடுக்கம் பகுதிகளில் மழை பெய்தால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து இருக்கும்.

    இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமில்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சபரிமலை சீசன் காலத்தில் பக்தர்கள் நீராடி செல்கின்றனர். தற்போது அருவியில் சீரான நீர்வரத்து உள்ளது.

    இருந்தபோதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுழலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதால் வனத்துறையினர் பராமரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிக ஆழம் உள்ள இடங்கள் பாறைகள் ஆகிய இடங்களில் தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவ்வப்போது சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு பணிகள் நடைபெறும். அதன் பின்னர் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானலில் மழை பெய்யும் போது கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்த அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்திருந்தனர். தடைவிதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    ×