என் மலர்
முகப்பு » kundarapalli market
நீங்கள் தேடியது "kundarapalli market"
தீபாவளி பண்டிகையையொட்டி குந்தாரப்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனையில் ரூ.7 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். #Diwali
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் உள்ளது குந்தாரப்பள்ளி கிராமம்.
இந்த கிராமத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காய்கறி, ஆடுகள், மாடுகள் விற்பனை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், வருகிற 6-ந் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் இன்று குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் வழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கவும், விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்யவும் வந்திருந்தனர்.
ஆடுகள் எடைக்கு தகுந்தவாறு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறும்போது, வழக்கத்தைவிட சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. சுமார் 10 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது.
இதன் மூலம் குறைந்தது சுமார் ரூ.7 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்று இருக்கும் என்றனர். #Diwali

×
X