என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kundas"
- பெரம்பலூர் கொலை குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்
- எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி பரிந்துரையின்பேரில், கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், குளத்தூரை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 36) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எஸ்.பி ஷ்யாம்ளாதேவி பரிந்துரையின்பேரில் சுரேசை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில் போலீசார் சுரேசை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்
பெரம்பலூர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சேர்ந்தவர் மாசிதுரை. இவரது மகன் மதுபாலன் (வயது 27). இவர் 5 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக போக்சோ வழக்கில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மதுபாலனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று மதுபாலனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் குண்டர் சட்டத்தில் மதுபாலனை கைது செய்ததற்கான உத்தரவின் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலா, ஏட்டு பார்வதி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.
- மதுபான கடத்தில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்
- ஜெயங்கொண்டம் சிறையில் இருந்த அவர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்
அரியலூர்,
உடையார்பாளையம் அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பக்கிரி மகன் குமார் (42). கடந்த 22 ஆம் தேதி, இரு சக்கர வாகனத்தில் கள்ளத்தனமாக மதுபானங்களை கடத்தி வந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், வெளியே வந்தால் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட கூடும், இவரை குண்டர் சட்டத்தில் அடைக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரை செய்ததையடுத்து கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து, குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
- குதிரை பந்தய வீரரை கொலை செய்த 2 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
- மாநகர போலீஸ் கமிஷனர் சத்யபிரியா உத்தரவு
திருச்சி,
திருச்சி உறையூர் சன்னதி தெருவை சேர்ந்த முருகனின் மகன் சண்முகம் (வயது 25). குதிரை வண்டி வைத்திருந்த இவர், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று குதிரை வண்டி பந்தயங்களில் கலந்து கொள்வது வழக்கம். கடந்த மே மாதம் 26-ந்தேதி பட்டப்பகலில் குழுமணி டாக்கர் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது, சண்முகம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.பந்தயத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது போலீசாருக்கு தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக, பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த விஜி (23), தஞ்சை மாவட்டம் பூதலூரை சேர்ந்த அபிஷேக் (22) ஆகியோர் உள்பட 6 பேர் மீது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.இதில் விஜி, அபிஷேக் ஆகியோர் ஜாமீனில் வெளியே வந்தால் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் ஏற்படும் என்று போலீசார் பரிந்துரை செய்ததை தொடர்ந்து 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் ‘புல்லட்‘ நாகராஜன் (வயது 53). பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ் அப்‘பில் ஆடியோ வெளியிட்டு இருந்தார்.
மேலும், பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் போலீசாரை விமர்சித்தும் ஆடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் பெரியகுளத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நாகராஜன் கடந்த 10-ந் தேதி கைது செய்யப்பட்டார். அவர் இடுப்பில் வைத்திருந்த 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த பையில் துப்பாக்கிகள், பத்திரிகையாளர், வக்கீல் பெயரில் போலி அடையாள அட்டைகள், நீதிபதியின் பெயரில் ரப்பர் ஸ்டாம்ப், சார்பு நீதிபதி என்ற வாசகத்துடன் கூடிய அட்டை ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து வேலூர் சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ‘புல்லட்’ நாகராஜனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு, சிறைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். #BulletNagarajan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்