search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kuppichipalayam panchayat"

    • குப்பிச்சிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் நரேன்வீர் மணீஸ் சங்கராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆய்வில் ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், குப்பிச்சிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கூடுதல் கலெக்டர் நரேன்வீர் மணீஸ் சங்கராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் ஊராட்சிகளில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டார்.

    அப்போது ஊராட்சி மன்ற அலுவலம் அருகே நடந்த வேளாண்மை துறையின் விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதை பார்வையிட்டு அங்கு திரண்டு இருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

    அங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்திருந்த விவசாயி எடக்காடு தங்கமுத்து என்பவர் கூடுதல் கலெக்டர் நரேன்வீர் மணீஸ் சங்கராவிடம் எனது மகன் இளையராஜா கூடுதல் கலெக்டராக மத்திய பிரதேசத்தில் பணியாற்றி வருவதாக கூறினார்.

    அதைத்தொடந்து தங்கமுத்துவிற்கு கூடுதல் கலெக்டர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து அவரின் வீட்டிற்கும் சென்றார். அங்கு சென்று இளையராஜாவிடம் போனில் பேசி நலம் விசாரித்தார். அதன் பின்பு தனிநபர் கழிப்பிடங்கள் கட்டும் பணி உள்பட குப்பிச்சிபாளையம் ஊராட்சியில் ஆய்வு பணியினை செய்தார்.

    முன்னதாக குப்பிச்சிபாளையம் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி வரவேற்றார். ஆய்வின் போது செயல் அலுவலர்கள் குணசேகரன், பாஸ்கர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×