என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Kurangani"
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் இன்று காலை வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், யாகசாலை பூஜைகள், கோமாதா பூஜை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலை வலம் வந்து கோவில் கோபுர கலசத்தின் மீது பூசாரிகள் ராமஜெயம், ஆதிநாராயணன் அகியோர் தலைமையில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
அதன்பின் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு பூஜையை தொடர்ந்து மதியம் 1மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர். வருஷாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- 8 ம் நாள் கொடை விழாவில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
- மாலையில் ஆயிரத்து எட்டு குத்துவிளக்கு பூஜையும் இரவு 7 மணிக்கு நட்சத்திர இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.
தென்திருப்பேரை:
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கடந்த ஜூன் 28-ந் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. ஜூலை 12-ந் தேதி செவ்வாய்க்கிழமை கொடைவிழா அன்று பக்தி சொற்பொழிவு, வில்லிசை, இன்னிசை கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, பக்தி பாடல் நிகழ்ச்சி, பட்டிமன்றம் நடைபெற்றது.
8-ம் நாள் நிகழ்ச்சி
நேற்று செவ்வாய் கிழமை 8 ம் நாள் கொடை விழாவில் காலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. நாதஸ்வர இன்னிசையும் அதை தொடர்ந்து கிளாரினெட் இன்னிசையும், பஜனை கோஷ்டியினரின் பஜனையும் பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பகல்12 மணி அளவில் கண்ணதாசனும் ஆன்மீகமும் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.
மதியம் 1மணியளவில் நாராயண சுவாமி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி (திருமஞ்சனம்) முடித்து பெரிய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து கோவிலில் மண்டபத்தை சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தார். மாலையில் ஆயிரத்து எட்டு குத்துவிளக்கு பூஜையும் இரவு 7 மணிக்கு நட்சத்திர இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஜெகதீசன், முத்துமாலை, செல்வராஜ், ராஜேந்திரன், சந்திரசேகரன், கல்யாண சுந்தரம், குணசேகரன், ராகவன், ஜெயசங்கர், பாலகிருஷ்ணன், கேசவ மூர்த்தி, ஜெய பிரகாஷ், ரவி, ஜெயமுருகன், பெரியசாமி, ஈஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆழ்வார் திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் இசக்கியப்பன், குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.
- கோவிலின் கொடை விழா வருகிற 12-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.
- பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.
தென்திருப்பேரை:
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய் கிழமை ஆனி கொடை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோவிலின் கொடை விழா வருகிற 12-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது.
அதையொட்டி நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நித்திய பூஜைகள் நடைபெற்றன. அதன் பின்பு கால்நாட்டு விழாவை முன்னிட்டு மதியம் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் விநாயகர், அம்மன், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் புஷ்ப அலங்காரம், தீபாராதனை நடந்தது.
அதைத்தொடர்ந்து பெரியசாமி சன்னதிக்கு மேற்புறம் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு மஞ்சள், குங்குமம், சந்தனம், மாவிலை, புஷ்ப அலங்காரத்துடன் கூடிய 'கால்நாட்டு' விழா நடைபெற்றது.
தொடர்ந்து திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்திருந்து அம்மனை வழிபட்டனர்.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொடைவிழா தொடங்கியதை முன்னிட்டு பக்தர்கள் நேற்று முதல் விரதத்தை தொடங்கினார்கள்.
கால்நாட்டு விழாவில் தூத்துக்குடி மாவட்ட அறநிலை துறை இணை ஆணையர் அன்புமணி, ராஜேந்திரன், ஜெகதீசன், முத்துமாலை, சப்தசாகரன், ஜெயசங்கர், சந்திரசேகரன், கல்யாணசுந்தரம், ராஜகோபால், துரைராஜ், குணசேகரன், செல்வராஜ், பாலகிருஷ்ணன், ஈஸ்வரன், பெரியசாமி, ஆர்.பெரியசாமி, கேசவமூர்த்தி, சிவசுப்பிரமணியன், ஸ்ரீதர், அர்ஜூன் பாலாஜி, துரை, ரவி, முத்துக்குமார், கார்த்திகேயன், ஜெயபிரகாஷ், பஞ்சாயத்து தலைவர் ஜெயமுருகன், ஜெகநாதன், முத்துகிருஷ்ணன் மற்றும் 60 பங்கு நாடார்கள், ஊர் பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் இசக்கியப்பன் மற்றும் குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர் ஆகியோர் செய்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி போலீசார் பாதுகாப்பு பணியினை செய்து இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்