search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kurumbapatti"

    • ஏற்காடு மலை அடிவாரத்தில்‌ குரும்பப் பட்டி வன உயிரியல்‌ பூங்கா அமைந்துள்ளது.
    • சுற்றுலாப்‌ பயணி களின்‌ வசதிக்காக மூன்று பேட்டரி வாகனங்கள்‌ இயக்கப்பட்டு வருகின்றன.

    சேலம்:

    சேலம் மாநகரப் பகுதியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப் பட்டி வன உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. 1981-ல் சிறு பூங்காவாகத் தொடங்கப்பட்டு, 2008-இல் சுமார் 78 ஏக்கர் அளவுக்கு பூங்கா விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இந்த வன உயிரியல் பூங்காவில் கடமான், புள்ளிமான், முதலை, ஆமை, மலைப்பாம்பு, நரி, மயில், குரங்கு, வெளிநாட்டு நீர்ப்பறவைகள், பல்வேறு வகை கிளிகள் பராமரிக்கப் பட்டு வருகின்றன. வண்ணத்துப்பூச்சி பூங்கா, பன்னம் செயற்கை அருவி ஆதியவை அமைக்கப்பட்டு பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.

    இதனிடையே, சிறுபூங்கா என்ற தர நிலையில் இருந்து நடுத்தர பூங்கா என்ற நிலைக்கு மேம்படுத்த ரூ. 8 கோடி நிதி ஒதுக்கி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், அட்டவணை 1-இல் உள்ள சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட 10 வகை விலங்குகளை கொண்டுவர வனத்துறை திட்டமிட்டுள்ளது.

    மேலும், பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணி களின் வசதிக்காக மூன்று பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்களில் பூங்காவை சுற்றிப் பார்க்க பெரியவர்களுக்கு ரூ. 70-ம், சிறுவர்களுக்கு ரூ. 35-ம் கட்டணமாக வசூலிக்கப்படு கிறது.

    இதனிடையே பூங்காவை சுற்றிப் பார்க்கும் வகையில் பேட்டரியில் இயங்கும் இ-சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் 10 சைக்கிள் கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வகை சைக்கிள்கள் ஒவ்வொன்றும் தலா ரூ. 32 ஆயிரம் மதிப்புடையதாகும்.

    இந்த சைக்கிள்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50 கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அரை மணி நேரத்துக்கு ரூ. 30 என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சைக்கிள் ஓட்ட ஆர்வமுள்ளவர்கள் இ-சைக்கிள் மூலம் பூங்காவை சுற்றிப் பார்க்க லாம்.

    இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், சைக்கிள் ஓட்டுபவரின் உடல் ஆரோக்கியம் மே ம்படுகிறது என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.

    • இந்த ஆண்டு முதல் வனப்பரப்பை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • கிரீன் மிஷின் திட்டத்தின் கீழ் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    சேலம்:

    தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருக்கும் விலங்குகள் முறையாக பராமரிக்கப் படுகின்றனவா? சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் வனப்பரப்பை அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கிரீன் மிஷின் திட்டத்தின் கீழ் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    குரும்பபட்டி வன உயிரியல் பூங்கா 1976-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் அதனை மேம்படுத்த ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது 31.73 ஹெக்ஆடேராக க உள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா 131.73 ஹெக்டேராக விரிவுப்படுத்தப்பட உள்ளது.

    கூடுதலாக வன உயிரினங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது கொரோனா காலத்திற்கு பிறகு தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. 24 வகையான உயிரினங்கள் தற்போது இங்கு உள்ளது.

    புலி, சிறுத்தை, கரடி, நீர்பறவை உள்ளிட்டவை இந்த ஆண்டுக்குள் கொண்டுவரப்பட உள்ளன. 2019-20 -ம் ஆண்டில் இரண்டரை லட்சம் பேர் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவை பார்வையிட்டனர். கடந்த 2020-21 ஆம் ஆண்டில் 87 ஆயிரம் பேர் மட்டும் பார்வையிட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேர் குரும்பபட்டி ஊரியல் பூங்காவுக்கு வந்துள்ளனர்.

    உயிரியல் பூங்காக்களை மேம்படுத்த மத்திய அரசு முன்வருவதில்லை. இருப்பினும் கல்விக்காகவே தமிழக அரசு உயிரியல் பூங்காக்களை மேம்படுத்தி வருகிறது. சத்தியமங்கலம் வனப்பகுதி உட்பட பல்வேறு வனப்பகுதி வெளியில் இருந்து யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வனப்பரப்பை அதிகரிக்கும் போது நிச்சயம் வனவிலங்குகள் பொதுமக்கள் வசிப்பிடத்திற்கு வராது.

    மாவட்டத்திற்கு 3 சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் பயன்பாட்டுக்காக மட்டுமே வனப்பகுதியில் தற்போது சாலைகள் போடப்படுகிறது. வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு இருந்தால் கட்டாயம் அகற்றப்படும். முட்டல் ஏரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் உயிரியல் பூங்காவுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    ×