என் மலர்
நீங்கள் தேடியது "Kurunji andavar Festival"
- ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என காவடி மற்றும் பால்குடம் எடுத்து பக்தி பரவசத்துடன் பாதயாத்திரை ஊர்வலமாக சென்றனர்.
- பக்தர்கள் தங்கள் பங்குனி உத்திர விரதத்தை நிறைவு செய்தனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலுக்கு 1001 காவடி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்வில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என காவடி மற்றும் பால்குடம் எடுத்து பக்தி பரவசத்துடன் குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை ஊர்வலமாக சென்றனர்.
முன்னதாக இந்த ஊர்வலத்தை கொடைக்கானல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கார்த்திக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னாள் நகர் மன்ற தலைவர்கள் கோவிந்தன், ஸ்ரீதர், தற்போதைய கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் மற்றும் காவடி விழா குழுவினர் கலந்து கொண்டனர்.
காவடி ஊர்வலமானது ஏழு ரோடு, அண்ணாசாலை, மூஞ்சி க்கல், ஆனந்தகிரி பகுதி வழியாக குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலிலுக்கு சென்றடைந்தது.அங்கு சென்று பக்தர்கள் தங்கள் பங்குனி உத்திர விரதத்தை நிறைவு செய்தனர்.அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.