என் மலர்
நீங்கள் தேடியது "laborer death"
- அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
- இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அண்ணா மலைநகர் போலீஸ் சரகம் வடக்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். (வயது 54). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு புறப்பட்டார். ஆனால் இரவுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அண்ணாமலைநகர் டாஸ்மாக் கடை அருகே கிருஷ்ணராஜ் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல்அறிந்த அண்ணா மலைநகர் போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்ேபாது கிருஷ்ணராஜ் பிணமாக கிடந்தார். அவர் குடிபோதையில் சுருண்டு விழுந்து இறந்து இருப்பது தெரிய வந்தது. உடனே உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கான அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- சின்னமனூர் மெயின் ரோடு அருகே வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது.
- படுகாயமடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 33). இவர் தனது உறவினர் மாறன் (57) என்பவருடன் வேலை நிமித்தமாக சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.
சின்னமனூர் மெயின் ரோடு அருகே வந்து கொண்டு இருந்தபோது எதிரே வந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அர்ஜூனன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே உள்ள தென்கரை செயிண்ட் சேவியர் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது34). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகியது. 2 குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கோவில் அருகே அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதுபற்றி பாலசுப்பிரமணியனின் தம்பி சிவராஜ் தென்கரை போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலசுப்பிரமணியனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சிவராஜ் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.