என் மலர்
நீங்கள் தேடியது "Laborer drowned in"
- சொக்கப்பன் வீட்டிற்கு அருகே ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.
- அப்போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா நெரிஞ்சிப்பேட்டை மீராசா வீதியை சேர்ந்தவர் சொக்கப்பன் (56). தொழிலாளி. இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.
சொக்கப்பன் வீட்டிற்கு அருகே ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக தண்ணீரில் மூழ்கினார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு சொக்கப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.