search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laborer robbed of 133 pounds of jewelery"

    • தினசரி பட்டறையை பூட்டி விட்டு சாவியை நோவாவிடம் கொடுப்பது வழக்கம்.
    • பிரமோத் விட்டல் தான் பட்டறையை திறக்க செல்வதாக கூறி சாவியை வாங்கி சென்றுள்ளார்.

    கோவை,

    கோவை வெரைட்டி ஹால் ரோடு அருகே உள்ள சண்முகா நகரை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 45). இவர் எம்.என்.ஜி. வீதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் வெரைட்டிஹால் ரோடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனது பட்டறையில் தொழிலாளியாக நோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிமோத் விட்டல் (20) ஆகியோர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். நான் தினசரி பட்டறையை பூட்டி விட்டு சாவியை நோவாவிடம் கொடுப்பது வழக்கம். சம்பவத்தன்று இரவு நான் பட்டறையை பூட்டி விட்டு சாவியை நோவாவிடம் கொடுத்து விட்டு சென்றேன்.

    மறுநாள் காலையில் அறையில் இருந்த அவரிடம் பிரமோத் விட்டல் தான் பட்டறையை திறக்க செல்வதாக கூறி சாவியை வாங்கி சென்றுள்ளார். பின்னர் அவர் பட்டறையை திறந்து அங்கு இருந்த ரூ.50 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 133 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.

    பட்டறைக்கு சென்ற நோவா நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பிரமோத் விட்டல் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    எனவே எனது பட்டறையில் 133 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற பிரமோத் விட்டலை கைது கைது நகைகளை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு நகைகளுடன் தப்பிச் சென்ற தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

    ×