search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshmi Mills School"

    • தென் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா, சிலம்பம், சதுரங்கம், குங்பூ, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது.
    • தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    தமிழ் கல்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் சாலை விதிகளை மதிப்போம் என்பதை வலியுறுத்தி, தென் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா, சிலம்பம், சதுரங்கம், குங்பூ, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் வகுப்பு வாரியாக நடைபெற்றது.

    இதில் தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சிக் கழக பொதுச்செயலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி அரசு மருத்துவமனை இயற்கை மற்றும் யோகா மருத்துவர் திருமுருகன், தமிழ் கல்சுரல் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை, துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அதைத் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி, பாராட்டிப் பேசினார்.

    இதில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமத் ஸ்ரீதர் சுவாமிகள் யோகா சென்டரில் பயின்ற மாணவி ஜெயவர்தினி (வயது 12), அந்தமானில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, தாய்லாந்தில் நடைபெறவுள்ள இண்டர்நேஷனல் அளவிலான யோகா போட்டியில் பங்கேற்கவுள்ள மாணவிக்கு எம்.எல்.ஏ., ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.

    போட்டியில், கோவில்பட்டி லட்சுமி மில்ஸ் மெட்ரிக் பள்ளி சாத்தூர் கே.சி.ஏ.டி. மெட்ரிக் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று முதலிடம், கோவில்பட்டி சபரீஸ் ஜெயன் ஜூனியர் கிளப் மற்றும் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. இண்டர்நேஷனல் பள்ளி 2-ம் இடம், சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளி, கயத்தாறு தமிழர் போர்க்கலை சிலம்பம் ஆகியவை 3-வது இடத்தையும் பெற்றன.

    தமிழ் கல்சுரல் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் துணை செயலர் சூரியநாராயணன் வரவேற்றார். பொருளாளர் சிவசக்திவேல்முருகன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை தமிழ் கல்சுரல் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×