என் மலர்
நீங்கள் தேடியது "Lashkar--e--Taiba"
- கோழைத் தனமான தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்துள்ளது.
- பல்வேறு நாட்டு தலைவர்கள் காஷ்மீர் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு.
காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய கோழைத் தனமான தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் காஷ்மீர் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் பிரதமர் மோடியை போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டு அறிந்தனர்.
இதன் காரணமாக காஷ்மீர் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீது மிக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் இன்று பிற்பகல் மத்திய மந்திரி சபையின் பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே பஹல்காம் சுற்றுலா தலத்தில் தாக்குதல் நடத்தியது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிழல் படையான "தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்" என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படையில் உள்ள தற்கொலைப் படை தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.
அந்த தீவிரவாதிகளில் 6 பேர் 8 பேர் வரை பஹல்காம் சுற்றுலா தலத்துக்கு வந்ததாக கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் 2 பேர் அடையாளம் தெரிய வந்துள்ளது. ஒருவன் பெயர் ஆசீப். மற்றொருவன் பெயர் கவ்ரி.
இவர்கள் இருவரும் பஹல்காம் பகுதியில் பதிவான கண்காணிப்பு காமிரா காட்சிகளில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பிடிபட்டால் பஹல்காம் தாக்குதல் பின்னணி முழு விவரமும் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் சைபுல்லா என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவன் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தில் மூத்த கமாண்டர்களில் ஒருவன் ஆவான்.
இந்தியாவால் தேடப்படும் கொடூரமான தீவிரவாதியான ஹபீஸ்சையத்தின் வலதுகரமாக இவன் செயல்பட்டு வருகிறான். இவன்தான் பஹல்காம் தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டி கொடுத்தவன் என்று தெரிய வந்துள்ளது.
பாதுகாப்பு படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா நேரடியாக தொடர்பில் இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் காஷ்மீர் ரத்த களறி ஆனதின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ். இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.
இந்த கோழை தீவிரவாதிகளை வேட்டையாட பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
- மர்ம நபர் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றார்.
- காஷ்மீரில் பெரிய தாக்குதல்களை நடத்தினார்.
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா உள்பட பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவை இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிடுகின்றன. குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய பயங்கரவாதியான அபு கத்தால் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் ஜீலம் மாவட்டத்தில் உள்ள தினா பகுதியில் அபு கத்தால் இருந்தபோது அவரை மர்ம நபர் சுட்டு கொன்றுவிட்டு தப்பி சென்றார்.
சுட்டுக் கொல்லப்பட்ட அபு கத்தால், லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர்களில் ஒருவராகவும், மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சயீத்தின் நெருங்கிய உதவியாளர் ஆவார். மேலும் அவரை லஷ்கரின் தலைமை செயல்பாட்டுத் தளபதியாக நியமித்தார். ஹஃபீஸ் சயீத்தின் உத்தரவுகளை பெற்று அபு கத்தால் காஷ்மீரில் பெரிய தாக்குதல்களை நடத்தினார்.
ஜம்மு-காஷ்மீரில் பல தாக்குதலுக்கு அபு கத்தால் தலைமை தாங்கியுள்ளார். காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி கோவிலில் இருந்து திரும்பிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தார்.
2023-ம் ஆண்டு ரஜோரியின் தங்ரி கிராமத்தில் பொது மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிகையில் அபு கத்தால் பெயர் இடம்பெற்றுள்ளது.
அதில் அபு கத்தால் உள்பட 3 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகளை ஆள் சேர்ப்பு செய்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர் என்றும் காஷ்மீரில் பொது மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அபு கத்தால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
- ஈட்டியெறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார்.
- ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62 ஆம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார்.
இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62 ஆம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.
ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐநாவால் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஹாரிஸ் தாருடன் அர்ஷத் நதீம் இருக்கும் வீடியோ இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
மார்கசி முஸ்லீம் லீக்கின் செய்தித் தொடர்பாளர் தபிஷ் கயூம் மற்றும் அவர்களின் இளைஞர் பிரிவு தலைவர் முகமது ஹாரிஸ் தார் ஆகியோர் அர்ஷத் நதீமை அவரது இல்லத்தில் சந்தித்தனர். முகமது ஹாரிஸ் லஷ்கர்-இ-தொய்பாவின் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்பவர் என்று சொல்லப்படுகிறது.
- லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஸ்-இ-முகமது அமைப்புக்கு இந்தியா தடை.
- இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து புதிய பயங்கரவாத முகாமை அமைத்துள்ளதாக ரகசிய தகவல்.
இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருநாட்டு எல்லை வழியாக பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பங்கரவாதிகள் நுழைந்து தாக்குதலில் ஈடுபடுவதாக இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்தியாவுக்கு இது மிகப்பெரிய தலைவலியாக உள்ளது. நேற்றிரவு பாரமுல்லாவில் வாகனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு வீரர்கள் உள்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில்தான் பாகிஸ்தானில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த பின்லேடன் வகித்து வந்த அபோதாபாத்தில் பயங்கரவாத மையம் செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இந்திய அரசு லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன், ஜெய்ஸ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புக்கு தடைவிதித்துள்ளது.
இந்த அமைப்புகள் இணைந்து அபோதாபாத்தில், பாகிஸ்தான் ராணுவம் கேம்பஸ் பகுதிக்குள் பயிற்சி முகாமை உருவாக்கியுள்ளதாக புலனாய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த முகாம் பக்கத்தில் பாகிஸ்தான் ராணுவ முகாமின் கதவு உள்ளதால், வெளியில் இருந்து பயங்கரவாத பயிற்சி மையத்தை ராணுவத்தின் அனுமதி இல்லாமல் எளிதில் அணுக முடியாது எனவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் புலானாய்வுத்துறையான ஐ.எஸ்.ஐ.-யின் அதிகாரி ஒருவர் அந்த முகாமின் மேற்பார்வையாளராக உள்ளார் என நம்பப்படுகிறது, இந்த முகாமில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆயுதங்களை கையாள்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தெரிகிறது.
அபோதாபாத்தில் பின்லேடன் பாதுகாப்பான ஒரு வீட்டை வளாகத்திற்குள் அமைத்து செயல்பட்டு வந்தார். அமெரிக்க ராணுவம் அவரை தேடிவந்த நிலையில், 2011-ம் ஆண்டு சுட்டுக்கொலை செய்தது. பாகிஸ்தான் அந்த இடத்தை 2012-ல் இடித்தது.
பயிற்சி முகாம் பின்லேடன் பாதுகாப்பாக வாழ்ந்து வந்த வீட்டின் இடிபாட்டிற்கு மேல் கட்டப்பட்டதா? எனத் தெளிவாக தெரியவில்லை. இந்த முகாம் ஹபீஸ் சயீத் (லஷ்கர்), சயத் சலாஹுதீன் (ஹிஸ்புல்), மசூத் அசார் (ஜெய்ஷ்) ஆகியோரால் மிகப்பெரிய அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

சயத் சலாஹுதீன்
இந்த மூன்று பேரும் இந்தியாவின் பயங்கரவாத தடுப்பு அமைப்பான என்.ஐ.ஏ.-வின் மிகவும் தேடுப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளனர்.
இந்த முகாமின் முக்கிய நோக்கம் மூன்று அமைக்களுக்கும் ஆட்களை சேர்ப்பதுதான். கடந்த சில தினங்களாக ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த முகாம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வரும் நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத குழுவான தெரீக் லபைக் யா முஸ்லிம் பல்வேறு மாவட்டங்களில் தீவிர சோதகை்குப்பிறகு கலைக்கப்பட்டுள்ளது.
- மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு மிரட்டல் வந்துள்ளது
- மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் சிஇஓ என்று கூறிக்கொண்டார்.
மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகத்துக்கு ஒரே மாதத்தில் 2 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
நேற்று [டிசம்பர் 12] மதியம் ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ரஷிய மொழியில் எழுதப்பட்ட அந்த வெடிகுண்டு மிரட்டலானது வந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக நவம்பர் 16 ஆம் தேதி, ரிசர்வ் வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
மறு பக்கம் பேசியவர் தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமை நிர்வாக அதிகாரி [சி இஓ] என்று கூறிக்கொண்டார். மேலும் மிரட்டல் விடுப்பதற்கு முன் தொலைபேசியில் அவர் ஒரு பாடலைப் பாடியதாகக் கூறப்படுகிறது.

2008-ம் ஆண்டு நவமபர் 26 ஆம் தேதி மும்பையில் சத்திரபதி சிவாஜி ரெயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 175 பேர் வரை உயிரிழந்தனர், 300 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவார அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் இயங்கி வருகிற பயங்கரவாத இயக்கங்களில் முக்கியமானது, லஷ்கர் இ தொய்பா ஆகும். இந்த இயக்கத்தினர்தான் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி மும்பையில் அதிபயங்கர தாக்குதல்கள் நடத்தி 160-க்கு மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.
இந்த இயக்கத்தில் சேருவதற்காக அமெரிக்க இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் வேலை நடந்து வருகிறது.
அந்த வகையில் நியூயார்க்கின் மேன்ஹட்டன் பகுதியை சேர்ந்த ஜீசஸ் வில்பிரெடோ என்கார்னேசியன் (வயது 29) என்பவர் பாகிஸ்தானுக்கு போய், அங்கு லஷ்கர் இதொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்கான நடவடிக்கைகளில் முழு வீச்சில் இறங்கினார்.
ஆனால் இதுபற்றி அமெரிக்காவின் மத்திய புலனாய்வு படையான எப்.பி.ஐ.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது நடவடிக்கைகளை மத்திய புலனாய்வு படையினர் கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில், என்கார்னேசியன் கடந்த 7-ந்தேதி பாகிஸ்தான் செல்வது என முடிவு எடுத்தார். இதற்காக அவர் விமானம் ஏறுவதற்காக நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப். கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றார்.
அங்கு அவரை மத்திய புலனாய்வு படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இதுபற்றி அமெரிக்க அரசு வக்கீல் ஜான் டெமர்ஸ் கூறும்போது, “பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்வதற்கு என்கார்னேசியன் ஆன்லைன் மூலம் முயற்சி செய்தார். அவர் மற்றொருவருடன் சேர்ந்து லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துக்கு பொருட்கள் வினியோகம் செய்யவும் சதி செய்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.
மற்றொரு அரசு வக்கீலான ஜெப்ரி பெர்மான் கூறும்போது, “என்கார்னேசியன் பாகிஸ்தானுக்கு சென்று, லஷ்கர் இ தொய்பா இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்” என்றார்.
நியூயார்க் போலீஸ் கமிஷனர் ஜேம்ஸ் ஓ நீல் கூறுகையில், “என்கார்னேசியன் நோக்கம், அமெரிக்காவில் தாக்குதல்கள் நடத்துவதற்கு பாகிஸ்தானில் பயிற்சி பெற வேண்டும் என்பதுதான்” என குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட என்கார்னேசியனிடம் மத்திய புலனாய்வு படையினர் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.
இதற்கிடையே அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதே லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் சார்பில் சமூக வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு, இளைஞர்களை கவர்ந்து பாகிஸ்தானுக்கு பயங்கரவாத பயிற்சி பெற வைக்கும் வேலைகளில் ஒரு இளைஞர் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அவரது பெயர் மைக்கேல் கிலே சீவெல் (வயது 18). இவரையும் மத்திய புலனாய்வு படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தினர் இந்தியாவில் நாசவேலையில் ஈடுபடுகிறார்கள். இந்த அமைப்புகள் காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களையும், படித்த வாலிபர்களையும் அந்த அமைப்பில் சேர்த்து வருகிறது.
இந்த நிலையில் காஷ்மீரில் எம்.பி.ஏ. பட்டம் படிக்கும் மாணவர் ஒருவர் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவில் இணைந்துள்ளார்.
அந்த வாலிபரின் பெயர் இஷ்பக் வாணி. 26 வயதான அவர் தெற்கு காஷ்மீர் பகுதி புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர். அந்த வாலிபருக்கு லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் ‘அபுதுராப்’ என்ற குறியீடு பெயர் வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த இஷ்பக் வாணி ஏ.கே. 47 ரக துப்பாக்கியுடன் இருக்கும் படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இஷ்பக் மாயமானதாக அவரது குடும்பத்தினர் கடந்த 22-ந்தேதி போலீசில் புகார் கொடுத்து இருந்தனர். அவர் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் பி.எச்.டி. மாணவர் பஷீர்வாணி பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து இருந்தார். கடந்த 6 மாதத்தில் மட்டும் 100 இளைஞர்கள் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #LashkareTaiba