என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Laundry box"
- பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள இலவச பித்தளை தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்படுகிறது.
- ஆண்டு வருமானம் 1.00 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
திருவாரூர்:-
பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன வகுப்பை சார்ந்த மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் சலவை தொழில் செய்யும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன வகுப்பை சார்ந்த மக்கள் சுய தொழில் செய்து பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள இலவச பித்தளை தேய்ப்பு பெட்டிகள் இத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது,
ஆண்டு வருமானம் 1.00 லட்சத்திற்கு மிகாமலும் 20 வயதிற்கு மேம்பட்ட ஆண் பெண் என இருபாலரும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர், மேலும் இத்திட்டத்திற்கு கீழ்கண்டுள்ளவாறு ஆவணங்கள் சமர்பிக்கவேண்டும்.
மனுதாரர் விண்ணப்பம், சாதிச்சான்று நகல், வருமானசான்று நகல், குடும்ப அட்டை நகல், 7 வருடங்களாக விலையில்லா சலவை பெட்டி அரசிடமிருந்து பெறவில்லை மற்றும் இவர் சலவை தொழில் செய்து வருகிறார் என்பதற்கான கிராம நிர்வாக அலுவலரின் சான்று அசல், புகைப்படம்-2, ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று நகல் இணைக்கப்படல் வேண்டும்.
எனவே, மேற்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்,
மேலும் விவரங்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2,ஆம் தளத்தில் அறை எண் 84 உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை திருவாரூர் கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
- குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே தேய்ப்புப் பெட்டி வழங்கப்படும்.
- விண்ணப்பிப்போரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்தவா்கள் விலையில்லா சலவைப் பெட்டி பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் சாா்பில் மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு விலையில்லா சலவைப் பெட்டி வழங்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிப்போரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே தேய்ப்புப் பெட்டி வழங்கப்படும். திருப்பூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தின் மூலமாக கடந்த 10 ஆண்டுகளில் விலையில்லா சலவைப் பெட்டி பெற்றிருக்கக்கூடாது.
ஆகவே மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் ஜாதிச்சான்று, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை நகல்கள், 2 புகைப்படம் மற்றும் இதுநாள் வரையில் விலையில்லா சலவைப் பெட்டி பெறவில்லை என்ற கிராம நிா்வாக அலுவலரின் சான்றுடன் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்கண்ட முகவரியில் சமா்ப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகள் திருப்பூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை 0421-2999130 என்ற தொலைபேசி எண் மின்னஞ்சல் வாயிலாகத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்