என் மலர்
நீங்கள் தேடியது "Lawyer Murder"
- தமிழகத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வசாதாரணமாகி இருக்கின்றன.
- பொதுமக்கள் என, யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை, தமிழகத்தில் நீடிப்பது அச்சத்திற்குரியது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
கோவையில் நேற்று வழக்கறிஞர் உதயகுமார் என்பவர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கொலைகள் சர்வசாதாரணமாகி இருக்கின்றன. சட்டம் ஒழுங்கு தனது நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, அமைச்சர்கள், கொலைகள் நடக்கத்தான் செய்யும் என்ற ரீதியில் பேசுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் தொடங்கி, தி.மு.க. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என, யார் உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலை, தமிழகத்தில் நீடிப்பது அச்சத்திற்குரியது.
சமூக வலைத்தளங்களில், தி.மு.க. அரசின் தவறுகளை விமர்சிப்பவர்களைக் கைது செய்வதற்காக மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தப்படுகின்றனரே தவிர, காவல்துறையின் முக்கியக் கடமையான சட்டம் ஒழுங்கு, முற்றிலும் சீர்குலைந்து கிடப்பது, அரசியல் கடந்து மிகவும் வருந்தத்தக்கது.
சட்டம் ஒழுங்கைக்காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முத்துக்குமார் கடந்த வாரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
- இந்நிலையில் ராஜேஷ் என்பவரின் தம்பி ரமேஷ் உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 36). இவர் தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த வாரம் கலெக்டர் அலுவலகம் அருகே ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப் பட்டார்.
இதனை கண்டித்து தூத்துக்குடி வக்கீல்கள் சங்கம் சார்பில் இன்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் தூத்துக்குடியை சேர்ந்த ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே வக்கீல் முத்துக்குமார் கொலை வழக்கு தொடர்பாக ராஜேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
காவலில் எடுத்து விசாரணை
இந்நிலையில் ராஜேஷ் என்பவரின் தம்பி ரமேஷ் உள்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இதில் ரமேசை போலீஸ் காவலில் எடுக்க கோர்ட்டில் போலீசார் அனுமதி கேட்டனர். கோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து ரூரல் டி.எஸ்.பி.சுரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் ரமேசை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.