search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Less"

    • சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலை சுற்றி பார்த்துவிட்டு முதலில் வாங்க நினைப்பது தலையாட்டி பொம்மைகள் தான்.
    • மொத்தம் உள்ள 34 அங்காடிகளில் தலையாட்டி பொம்மைகள் விலை குறைவாகவும் தரமாகவும் கிடைக்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் முன்பு தலையாட்டி பொம்மை விற்பனை கடைகள் இருந்தன. கடந்த 2014-ம் ஆண்டு இந்த கடைகள் அகற்றப்பட்டன.

    இதையடுத்து மீண்டும் பெரிய கோவில் பகுதியில் தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி திறக்க வேண்டும் என்று பெரிய கோவில் வியாபாரிகள் சங்கம், வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், வியாபாரிகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இதனைத் தொடர்ந்து பெரிய கோவில் முன்பு ஒரே இடத்தில் 34 தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    ராஜராஜன் கைவினை கலைப் பொருளகம் என்ற பெயரில் அங்காடி அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது.

    இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை ராஜராஜன் கைவினை கலைப் பொருளகம் திறப்பு விழா நடைபெற்றது.

    இதனை பெரிய கோவில் வியாபாரிகள் சங்கம் தலைவர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், பெரிய கோவில் முன்பு ஒரே இடத்தில் புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மைகள் விற்பனை அங்காடி அமைக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை கொடுத்து வந்தோம்.

    இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பலரின் முயற்சியால் ஒரே இடத்தில் அங்காடிகள் அமைக்கப்பட்டு இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    மொத்தம் 34 அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன.

    இங்கு விலை குறைவாகவும் தரமாகவும் தலையாட்டி பொம்மைகள் கிடைக்கும் என்றார்.

    தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலை சுற்றி பார்த்துவிட்டு முதலில் வாங்க நினைப்பது தலையாட்டி பொம்மைகள் தான்.

    தற்போது ஒரே இடத்தில் 34 அங்காடிகள் திறக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×